டெல்டா மாவட்டங்கள் என்று அழைக்கப்படும் தஞ்சாவூர்,திருவாரூர்,நாகப்பட்டிணம் மாவட்டத்து ஆன்மீகவாதிகளுக்கு ஒரே ஊரில் 3 சித்தர்கள் இருந்து அருள்பாலித்து வருவது தெரிந்த விஷயமே! இனி இந்த விஷயம் உலகம் முழுவதும் பரவவே இந்தப் பதிவு.
நாகப்பட்டிணம் மாநகரில் நீலாய தாட்சிணியம்மன் கோவிலுக்குள்ளே அழுகண்ணி சித்தரின் ஜீவசமாதி இருக்கிறது.
நாகப்பட்டிணம் சுனாமிப்பாலத்தைக் கடந்து சுமார் 3 கி.மீ.தூரத்தில் வடக்குப் பொய்கை நல்லூர் என்னும் கிராமம் இருக்கிறது.இங்கே கோரக்கரின் ஜீவசமாதி அமைந்திருக்கிறது.நாகப்பட்டிணத்து அன்பர்களின் முயற்சியால் அருமையான பராமரிப்பும்,தினமும் மதியம் 12 மணிக்கு அன்னதானமும் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது.விருப்பமுள்ள பக்தர்கள்,சித்தர்களைத் தேடி ஆன்மீகப்பயணம் செல்பவர்களுக்கு கோரக்கர் சூட்சுமமாக வழிகாட்டுவார்;அன்னதானத்தில் பங்கேற்கவிரும்புவோர் இந்த கோரக்கரின் ஜீவசமாதியைத் தொடர்புகொள்ளலாம்.
பெரும்பாலான சித்தர்களின் ஜீவசமாதிகள் சிவாலயங்களில் இருக்கும்போது கோரக்கர் மட்டும் இங்கே இருந்து அருள என்ன காரணம்? சில வருடங்களில் இந்த தெய்வீக ரகசியம் வெளிப்பட்டுவிடும்.ஏனெனில்,சித்தர்கள் இந்தியாவை மையமாகக் கொண்டு 72,000 ஆண்டுகள் பூமியை ஆளப்போகிறார்கள்.எனவே,சித்த சக்திகள் வெளிப்படும் காலம் கனிந்துவிட்டது.
அங்கிருந்து சுமார் 10 கி.மீ.தூரம் சென்றால் எட்டுக்குடி என்னும் கிராமத்தை அடையலாம்.அங்கே வான்மீகி சித்தரின் ஜீவ சமாதி அமைந்திருக்கிறது.
ஒவ்வொரு அமாவாசையன்று மதியம் 11.30 முதல் 12.30 வரையிலான நேரத்தை அபிஜித் நேரம் என்பர்;இந்த நேரத்தில் இந்த ஜீவசமாதிகளில் ஏதாவது ஒரு இடத்திற்கு விரதத்தோடு செல்ல வேண்டும்;அவ்வாறு சென்று,மஞ்சள் துண்டினை இந்த ஜீவசமாதிகளின் முன்பாக விரித்து,நெற்றியில் விபூதி பூசி,இரு கைகளிலும் ருத்ராட்சங்களை வைத்து,ஓம்சிவசிவஓம் ஜபித்து வருவோம்;
.
ஒன்று:ஒவ்வொரு அமாவாசை அன்றும் காலை 11.30 முதல் ஒரு மணி நேரம் வீதம் 12 அமாவாசைகளுக்கு இந்த ஜீவசமாதிகளில் ஓம்சிவசிவஓம் ஜபிக்கவேண்டும்.
இரண்டு:ஏதாவது ஒரு அமாவாசையன்று காலை 11.30 முதல் ஒரு மணி நேரம் வரை இந்த ஜீவசமாதிகளில் ஓம்சிவசிவஓம் ஜபித்துவிட்டு,அன்று முதல் தினமும் ஒரு மணி நேரம் ஓம்சிவசிவஓம் வீட்டில்/குடியிருக்கும் இடத்தில் ஜபித்துவர வேண்டும்.இவ்வாறு ஒரு வருடம் வரை ஓம்சிவசிவஓம் ஜபித்து வந்தால்,எப்பேர்ப்பட்ட சிரமங்கள்,கஷ்டங்கள்,கர்மவினைகளும் தீர்ந்துவிடும்;செக் செய்து பார்ப்போமா?
ஓம்சிவசிவஓம்
No comments:
Post a Comment