சென்னை அண்ணாசாலையை அடுத்த எல்லீஸ் சாலையில் இரவு 10 மணிக்கு ஒரு இட்லிக்கடை வியாபாரத்தைத் தொடங்குகிறது.கடைக்காரர் ராமாண்டி (பழைய பெயர் செல்வகுமார்) ஆறு வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கும் முதியோர்களுக்குமாக சுமார் 60 பேருக்கு இட்லியும் தோசையும் இலவசமாக வழங்கிவருகிறார்.இந்த சாலையோர அன்னதானம் கடந்த 25 வருடங்களாக இடைவிடாமல் நடக்கிறது.சிறு வயதில் சாப்பாட்டுக்கே மிகவும் கஷ்டப்பட்டவர் ராமாண்டி.எனவே,சிறுவர்களுக்கு சாப்பாடு போடுகிறார்.உழைத்துச் சாப்பிட முடியாமலிருக்கும் முதியவர்களுக்கும் உணவளிக்கிறார்.
“கடுமையாக உழை;அப்போதும் உன்னைக் காப்பாற்றிக் கொள்ள முடியாவிட்டால் இங்கே வா” என்கிறது ராமாண்டியின் கடைவாசலில் உள்ள அறிவிப்புப் பலகை.
நன்றி: ஆனந்தவிகடன் 25.10.06,விஜயபாரதம்,பக்கம்10,16.12.11
No comments:
Post a Comment