Friday, December 30, 2011

நேர்மையானவர்கள் பின்பற்ற வேண்டிய முனீஸ்வரர் வழிபாடு






நம்மில் பலர் முன் ஜன்மங்களில் செய்த கர்மவினைகளின் காரணமாக,இந்த பிறவியில் ஏதாவது ஒரு குறையோடு அல்லது கடுமையான வறுமை/ஏக்கம்/நோய்/பிரச்னையோடு வாழ்ந்து கொண்டிருப்பார்கள்.ஆனால், அதே சமயம் முன் ஜன்மங்களில் செய்த ஒருசில புண்ணியங்களின் விளைவாக நல்ல ஆத்மாவாகப் பிறந்து,தன்னை சுற்றியிருக்கும் அனைவரையும் வழிநடத்திக்கொண்டிருப்பர்;அல்லது தன்னைச் சுற்றியிருப்பவர்களின் சுபாவங்களை பழகி புரிந்துகொண்டும்கூட, அவர்களுக்கு அவர்கள்  கேட்காமலேயே உதவி செய்துகொண்டே இருப்பார்கள்.(ஆனால்,இவருக்கு எவருமே உதவமாட்டார்கள்)இருப்பினும் இவர்களின் வாழ்க்கை ரொம்ப சாதாரணமாக இருக்கும்.

இவர்களில் பலரது குலதெய்வமாக முனீஸ்வரர் இருப்பார்;அல்லது இவரது பெயரிலேயே முனீஸ்வரன் இருக்கும்.உதாரணம்:முனிராஜ்,முனிரத்தினம்,ஜடா முனி,                                             ராஜ முனி, வடுகமுனி,முனீஸ்வரி,சுந்தரமஹாமுனிலட்சுமி,  பட்டுமுனீஸ்வரி,பாண்டி முனீஸ்வரி,குருமுனி,முனிகுமார், முனிலட்சுமணன்,
முனீஸ்வரப்பாண்டியன்,இமயமுனி,முனிராணி,முனிமகேஸ்வரி,
மகேஸ்வரமுனி . . .


இவர்களுக்கு ஒரு சூட்சுமவழிபாட்டுமுறையை நமது ஆன்மீக குரு சிவகடாட்சமுள்ள திரு,மிஸ்டிக் செல்வம் ஐயா அவர்களின்  அவர்களின் வழிகாட்டுதலாலும் உங்களுக்கு சமர்ப்பிக்கிறேன்.

ஒவ்வொரு ஊரிலும் தேரடி முனீஸ்வரர் கோவில்கள் இருக்கின்றன.பல இடங்களில் கரையடி முனியாண்டி கோயில்களும்,மக்கள் வாழும் தெருக்களுக்குள்ளேயே முனீஸ்வரர் கோயில்களும் இருக்கின்றன.இந்த முனீஸ்வரர்களின் அருளால் அந்தந்தப்பகுதியில் மாந்திரீகப்பாதிப்பு இல்லாமல் மக்கள் சுகமாக வாழ்ந்து வருகின்றனர் என்பதே உண்மை!


நெல்லை மாவட்டம் சிவகிரி$ என்னும் ஊரில் பேருந்து நிலையத்துக்கு மிக அருகே தேரடி முனீஸ்வரர் கோவில் ,பன்னீர் மரத்தடியில் அமைந்திருக்கிறது.பார்க்க படம்:


ஒவ்வொரு வாரமும்(வெகுதூரத்தில் இருந்து வருபவர்கள் மாதம் ஒரு) வெள்ளிக்கிழமையன்று காலை 10.30முதல் 12 மணிக்குள் அல்லது மாலை 5 மணி முதல் 7 மணிக்குள் இந்த கோவிலுக்கு வந்துவிட வேண்டும்.அப்படி வரும்போது பின்வரும் பொருட்களைக் கொண்டு வர வேண்டும்.


1.சிகப்பு ரோஜாப்பூக்களால் கட்டப்பட்ட மாலை(வேறு எந்த பூவும் இதில் ஒன்று கூட இருக்கக் கூடாது)
2.ஒரு பத்திப் பெட்டி
3.நான்கு வாழைப்பழங்கள்(எந்த ரகமாக இருந்தாலும் பரவாயில்லை)
4.கொட்டைப்பாக்கு ரூ.3/-க்கு
5.வெற்றிலை ரூ.3/-க்கு
6.ஒரு கிலோ டயமண்டு கல்கண்டு
7.தேங்காய் (திருமணமானவர்கள் மட்டும்)
8.வெஜிடபிள் பிரியாணி(வீட்டில் சமைத்திருக்க வேண்டும்)
9.கோதுமை மாவால் செய்யப்பட்ட பாயாசம்


இவைகளைக் கொண்டு வந்து,முதலில் ரோஜாப்பூ மாலையை இந்த தேரடி முனீஸ்வரருக்கு  அணிவிக்க வேண்டும்;நான்கு வாழைப்பழங்களில் மொத்தபத்தியையும் கொளுத்தி வைக்கவேண்டும்;வெஜிடபிள் பிரியாணியையும்,பாயாசத்தையும் படைக்க வேண்டும்;கற்பூரத்தை கொளுத்திவிட்டு,இவரது சன்னிதியில் சில நிமிடங்கள் அமர்ந்து வேண்டிக்கொள்ள வேண்டும்.நமக்கு என்ன தேவையோ அதைத் தான் கேட்க வேண்டும்.பிறகு,இந்த சன்னிதியில் விழுந்து வணங்கிக்கொள்ள வேண்டும்.இது அவசியம்.


பிறகு,வெஜிடபிள் பிரியாணியை இந்தக் கோவிலின் வாசலில் நின்று கொண்டு வருபவர்களுக்கு பகிர்ந்து கொடுக்க வேண்டும்;கொஞ்சத்தை வீட்டுக்கொண்டு போகவும் வேண்டும்;டயமண்டு கல்கண்டினையும் பகிர்ந்து கொடுக்க வேண்டும்;இவ்வாறு  தொடர்ந்து 8 வெள்ளிக்கிழமைகள் செய்து வர வேண்டும்.

இந்த 8 வெள்ளிக்கிழமைகளிலும் தாம்பத்திய உறவு கண்டிப்பாக தவிர்க்க வேண்டும்.அதற்கு முந்தைய நாளான வியாழக்கிழமையும் கண்டிப்பாக தவிர்ப்பது அவசியம்.இந்த 8 வெள்ளிக்கிழமைகளும் அசைவம் சாப்பிடுவது;யாருடனாவது சண்டையிடுவது;ஆபாசப்படங்கள் பார்ப்பது;அனாவசியமான கெட்ட வார்த்தைகள் பேசுவதை கண்டிப்பாக செய்யக்கூடாது.இந்த 8 வெள்ளிக்கிழமைகளும் இந்த வழிபாடு செய்பவர்கள் அன்றிரவு மட்டும் தனியறையில் தூங்க வேண்டும்.
இந்த 8 வெள்ளிக்கிழமைகளுக்குப் பிறகு ஆண்டுக்கு* நான்கு வெள்ளிக்கிழமைகளுக்கு இதேபோல வழிபாட்டை இந்தக் கோவிலுக்கு வருகை தந்து செய்தால் போதும்;


 * 8 வது வெள்ளிக்கிழமையிலிருந்து ஓராண்டு கணக்கு வைத்துக் கொள்ளவும்.


இந்த முனீஸ்வரர் வழிபாட்டை நேர்மையாகவும்,ஒழுக்கமாகவும் இருப்பவர்கள் மட்டுமே செய்ய வேண்டும். மற்றவர்களால் இந்தக் கோவிலுக்கு சுற்றுலாவாக மட்டுமே வரமுடியும்.வீம்புக்குச் செய்ய நினைப்பவர்கள் தேவையற்ற சிக்கலில் மாட்டிக் கொள்வீர்கள்.ஜாக்கிரதை!!!


இந்த வழிபாடு 8 வெள்ளிக்கிழமைகள் செய்தபின்னர்,அவர்களின் குறைகள் எதுவாக இருந்தாலும் (அது நேர்மையாக இருந்தால் மட்டும்) நிறைவேறும்.முனீ என்ற பெயருடைய பெண்களும் இதைச் செய்யலாம்.அவர்களின் தீட்டுநாட்களில் வெள்ளிக்கிழமை வந்தால்,அதைத் தவிர்த்து விட்டுச் செய்யலாம்.இதைச் செய்பவர்களுக்கு யாராவது மாந்தீரீக ஏவல் வைத்திருந்தால்  அது விலகிவிடும்;மாத விலக்குப் பிரச்னைகள் இருந்தாலும் அது குணமாகிவிடும்;மிகவும் சக்திவாய்ந்த அதே சமயம் சூட்சும வழிபாடு இது.இதைச் செய்து வருபவர்களுக்கு அஷ்டமச்சனி,ஜன்மச்சனி தொல்லை தீர்ந்துவிடும்.


$ விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்திலிருந்து அடிக்கடி பேருந்து வசதிகள் உள்ளன.இங்கிருந்து தென்காசி,செங்கோட்டை,குற்றாலம் செல்லும் அனைத்துப்பேருந்துகளும் சிவகிரிவழியாக செல்பவை;


ஓம்சிவசிவஓம்
ஓம்சிவசிவஓம்
ஓம்சிவசிவஓம்






No comments:

Post a Comment