Wednesday, December 21, 2011

விரையச்சனி துயரம் நீங்கிட செய்ய வேண்டிய கால பைரவர் வழிபாடு




21.12.11 முதல் டிசம்பர் 2014 வரையிலும் விருச்சிகராசிக்காரர்களுக்கு விரையச்சனி நடைபெற்று வருகிறது. எனவே, தினமும் விருச்சிகராசிக்காரர்கள் கால பைரவர் சன்னிதிக்குச் சென்று தேங்காயில் நெய்தீபம் ஏற்றி வைத்து,கால பைரவ சதநாமாவாளியை எட்டு முறை வாசிக்கவும்/ஜபிக்கவும்.முடியாதவர்கள் நான்கு முறை கண்டிப்பாக வாசிக்க வேண்டும்.
சனிப்பிரதோஷ நாட்களான 2.6.12; 16.6.12;13.10.12;27.10.12;23.2.13;9.3.13 இந்த தேதிகளில் திருச்செந்தூர் முருகன் கோவிலில் இருக்கும் கால பைரவரை இவ்வாறு வழிபாடு செய்வது உடனடி பலன்களைத் தரும்.இது பல்லாண்டுகளாக நிரூபிக்கப்பட்ட உண்மை.
அல்லது
திருநெல்வேலி திருச்செந்தூர் சாலையில் இருக்கும் ஸ்ரீவைகுண்டம் ஊரில் அமைந்திருக்கும் சிவாலயமானது தென் தமிழ்நாட்டின் நவகைலாசங்களில் ஒன்றாகும்.இங்கு இருக்கும் சிவபெருமான்,சனி பகவானின் அம்சத்தோடு அருள்கிறார்.இங்கு மேற்கூறிய சனிப்பிரதோஷ நாட்களில் கால பைரவர் வழிபாடு செய்வது சிறப்பாகும்






கோவிலுக்குச் செல்ல முடியாதவர்கள்,வீட்டில் மேற்குச் சுவர் அல்லது தெற்குச் சுவரில் எலுமிச்சை பழத்தில் சூலாயுதம் வரைந்து,அதன் மீது குங்குமம் தடவிட,சூலாயுதம் தெளிவாகத் தெரியும்.

இந்த சூலாயதத்தின் முன்பாக,கிழக்கு அல்லது வடக்கு நோக்கி அமர்ந்து தேங்காயில் நெய்தீபம் ஏற்றிட வேண்டும்.ஏற்றி வைத்துவிட்டு,பைரவரது சதநாமாவளியை எட்டு முறை ஜபிக்க வேண்டும்.இந்த மூன்றாண்டுகளும் அசைவம் சாப்பிடுவதைக் கைவிடவும்.திரு.மிஸ்டிக் செல்வம் ஐயா அவர்களுக்கு கோடி கோடி நன்றிகள்!!!
ஓம்சிவசிவஓம்

No comments:

Post a Comment