Wednesday, December 28, 2011

1,00,000 தடவை ஓம்சிவசிவஓம் ஜபித்தபிறகு. . .




எந்த ஒரு மந்திரமும் 1,00,000 தடவை ஜபித்தபிறகே,அந்த மந்திரத்துக்கு உயிர் வந்து,அது செயல்படத்துவங்கும்.இதை பலர் அனுபவத்தில் உணர்ந்துள்ளனர்.ஆனால்,ஓம்சிவசிவஓம் மந்திரத்தை 10,000 தடவை ஜபித்ததுமே அது செயல்படத்துவங்கும்;அதே சமயம், 10,000 தடவை நாம் ஓம்சிவசிவஓம் ஜபித்தபின்னர்,தொடர்ந்து ஜபிக்க முடியாத அளவுக்கு நமக்கு சிற்சில சோதனைகள் வரும்;நம்மை நமது மனவலிமையை சோதிக்கவே செய்யும்.

ஏன் இந்த சோதனைகள்?

மிக எளிதாக நமது கர்மவினையை அழிக்கவும்,மிக விரைவாக நற்பலன்களை நமக்குத் தரவும் செய்யும் மந்திரம் ஓம்சிவசிவஓம் என்பது கடந்த ஓராண்டாக உணர்ந்த உண்மை!

சும்மாவா வந்தது சுதந்திரம்? என்பதைப் போல,நவக்கிரகங்களின் இயக்கத்தில் நமது தீமையை தடுக்க உதவும் சிவமந்திரமாக ஓம்சிவசிவஓம் இருப்பதால்,நவக்கிரகங்கள் நம்மை  தொடர்ந்து ஜபிக்க விடாமல் சூட்சுமமாக தடுக்கவே செய்யும்.இருப்பினும்,விடாப்பிடியாக ஜபிப்பது நமது மன வலிமையைப் பொறுத்தது.

அதனால்,ஓம்சிவசிவஓம் மந்திரஜபம் செய்பவர்கள்,ஒரு லட்சம் தடவை ஜபிப்பதே சாதனைதான்; அப்படி ஜபித்த பின்னர்,அவர்கள் செய்ய வேண்டியது என்னவெனில்,தினமும் வெறும் 30 நிமிடம் மட்டும் ஓம்சிவசிவஓம் ஜபித்துவரவேண்டும். இப்படி ஜபித்து வருவதன்மூலமாக,நமது நியாயமான ஆசைகள்,லட்சியங்கள்,இலக்குகள் நிறைவேறும்.

1,00,000 தடவை ஓம்சிவசிவஓம் ஜபித்தபின்னர்,இந்த மந்திர சக்தி நமது உடல் மற்றும் மனதோடு இருக்கும்.கூடவே,அதற்குமேல் தினமும் ஓம்சிவசிவஓம் ஜபித்துவரும்போது அதன் சக்தியை அளவிடவே முடியாது.

 இப்போது ஒரு சந்தேகம் வருமே?

கடலோரக் கோயில்களில் ஏதாவது ஒரு கோவிலில் பவுர்ணமியன்று ஒரு மணி நேரம் ஓம்சிவசிவஓம் ஜபிப்பதாக வைத்துக்கொள்வோம்;கடலோரமாக ஒரு மந்திரத்தை ஒரு தடவை பவுர்ணமி/அமாவாசை/கிரகணம்/தமிழ் மாதப்பிறப்பு/தமிழ் வருடப்பிறப்பு நாட்களில் ஜபித்தாலே 2,00,00,000 தடவை ஜபித்ததற்குச் சமம்.அப்படிப் பார்த்தால்,பவுர்ணமியன்றோ/அமாவாசை/கிரகணம்/வருடப்பிறப்பு/மாதப்பிறப்பன்று ஒரு மணி நேரம் ஜபித்தாலே நமது ஓம்சிவசிவஓம் மந்திர ஜபம் 1,00,000 ஐ தாண்டி விட்டதாகத் தானே அர்த்தம்?


இது மிகச் சிறந்த சந்தேகம் தான்.ஆனால்,நாம் ஜபிக்கும் எண்ணிக்கை 1,00,000த் தொடவேண்டும்.அப்போதுதான் மந்திரம் உருப்பெறும்.(உயிர் பெறும்)!!!

ஓம்சிவசிவஓம்

3 comments:

  1. ஜயா வணக்கம் "1,00,000 தடவை ஓம்சிவசிவஓம் ஜபித்தபிறகு." இந்தப் அருமையானது சில சந்தேகம்.

    எந்த வித கோரிக்கைகளும் முன்வைக்காமல் ஜபித்து வருகின்றேன்
    1,00,000 தடவை ஓம்சிவசிவஓம் ஜபித்து விட்டோம் என்பதை எப்படி உணர்வது?

    "1,00,000 தடவை ஓம்சிவசிவஓம் ஜபித்தபிறகு."
    30 நிமிடத்துக்கு மேல் ஜபிக்கக் கூடாதா?

    பாலசிங்கம்

    ReplyDelete
  2. எந்த வித கோரிக்கையும் வைக்காமலும் ஓம்சிவசிவஓம் ஜபிக்கலாம்;1,00,000 தடவை ஜபித்தபின்னரும், தொடர்ந்து எவ்வளவு நேரமானாலும் ஓம்சிவசிவஓம் ஜபிக்கலாம்.இப்படி ஜபிப்பதால்,நமது வாழ்க்கை ஆன்மீகபூர்வமாகிவிடும்.சராசரி வாழ்க்கையில் ஈடுபாடு குறைந்துவிடும்.

    ReplyDelete
  3. ஜயா வணக்கம் "1,00,000 தடவை ஓம்சிவசிவஓம் ஜபித்து அந்த உன்னதமான இலக்கை தொட்துவிட்டேன் என்பதை உணர்வதற்கு அடையாலப்படுத்தும் விதமான சம்பவத்தை கூறஇயலுமா?

    பாலசிங்கம்

    ReplyDelete