சிவகங்கை: முல்லை பெரியாறு அணை பிரச்னையால், தென் மாவட்டங்களில் நடக்கும் ஐயப்பன் மண்டல பூஜைக்கு, கேரள செண்டை மேளத்திற்கு தமிழக பக்தர்கள் தடை விதித்துள்ளனர். தமிழகத்தை சேர்ந்த லட்சக்கணக்கான ஐயப்ப பக்தர்கள் கார்த்திகையில் மாலை அணிந்து, மார்கழியில் மண்டலாபிஷேகம் நடத்தி, ஜனவரி முதல் வாரத்தில் மகர ஜோதியை காண சபரிமலைக்கு சென்று வருவர். இதற்காக, சிவகங்கை, மானாமதுரை, ராமேஸ்வரம், மேலூர், புதுக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த ஐயப்ப பக்தர்கள், அந்தந்த நகரில் உள்ள ஐயப்பன் கோயிலில் மண்டலாபிஷேகம் நடத்தி வருகின்றனர். இக்கால கட்டத்தில், கேரளாவினரின் செண்டை மேளத்திற்கு மிகுந்த வரவேற்பு இருக்கும். தடை: தற்போது தமிழக, கேரளா மாநிலங்களுக்கிடையே முல்லை பெரியாறு அணை பிரச்னை வலுத்துள்ள நிலையில், தமிழகத்தினர், கேரளாவிலும், கேரளாவினர் தமிழகத்திலும் தாக்குதலுக்குள்ளாகி வருகின்றனர். கேரளாவை கண்டிக்கும் வகையில், தமிழக ஐயப்ப பக்தர்கள் இந்த ஆண்டு மண்டலாபிஷேக பூஜைக்கென அழைக்கப்படும், கேரளா செண்டை மேளத்திற்கு தடை விதித்துள்ளனர். இந்த ஆண்டு பெரும்பாலான கோயில்களில் மேளங்கள் ஒலிப்பது குறைந்துவிட்டது. சிவகங்கை ஐயப்ப பக்த சபை தலைவர் முத்துப்பாண்டி கூறியதாவது: முல்லை பெரியாறு அணை பிரச்னையால், கேரளா செண்டை மேளத்தினருக்கு வழங்கிய அட்வான்ஸ் பணத்தை திரும்ப பெற்றுள்ளோம். அவர்களும் மனரீதியாக இங்கு வர அஞ்சுகின்றனர். ஒவ்வொரு ஆண்டும் 20 பேர் கொண்ட குழுவிற்கு 25,000 ரூபாய் வரை கொடுத்து அழைத்து வருவோம். இந்த ஆண்டு நாகர்கோவில் பகுதியில் செண்டை மேள பிரசித்தி பெற்றவர்களை அழைத்து வந்து ஐயப்பன் மண்டாலாபிஷேக பூஜையை நடத்துகிறோம், என்றார்.
நன்றி: தினமலர் 27.12.11 ஆன்மீகக்கடலின் கருத்து: சபரிமலைக்குச் செல்லும் ஐயப்ப பக்தர்களை தாக்குவது கேரள இந்துக்கள் அல்ல;கேரள கிறிஸ்தவர்கள் தான்.அதுவும் இடுக்கி மாவட்டம் வழியாக செல்லும் சபரிமலை ஐயப்ப பக்தர்களை கேரள கிறிஸ்தவர்கள் தாக்குகின்றார்கள். இதேபோலத் தான், நம்மை ஜாதி ரீதியாக,மொழி ரீதியாக,இன ரீதியாக பிரிக்க கடந்த 300 ஆண்டுகளாக கத்தோலிக்க கிறிஸ்தவ ஆங்கிலேயன் பல்வேறு தந்திரங்களுடன் போராடினான்.அவனது கடும் (?) உழைப்புக்கு இன்று பலன் கிடைக்க ஆரம்பித்திருக்கிறது.
\\\\ஆன்மீகக்கடலின் கருத்து: சபரிமலைக்குச் செல்லும் ஐயப்ப பக்தர்களை தாக்குவது கேரள இந்துக்கள் அல்ல;கேரள கிறிஸ்தவர்கள் தான்.அதுவும் இடுக்கி மாவட்டம் வழியாக செல்லும் சபரிமலை ஐயப்ப பக்தர்களை கேரள கிறிஸ்தவர்கள் தாக்குகின்றார்கள். இதேபோலத் தான், நம்மை ஜாதி ரீதியாக,மொழி ரீதியாக,இன ரீதியாக பிரிக்க கடந்த 300 ஆண்டுகளாக கத்தோலிக்க கிறிஸ்தவ ஆங்கிலேயன் பல்வேறு தந்திரங்களுடன் போராடினான்.அவனது கடும் (?) உழைப்புக்கு இன்று பலன் கிடைக்க ஆரம்பித்திருக்கிறது.////
ReplyDeleteதங்களது கருத்துப்படி தாக்குவது கேரளா கிருஸ்துவரகவே இருந்தால் கேரளாவில் உள்ள இந்து போலீஸ் ஏன் தடுக்கவில்லை போலீஸ் அடிக்கவிட்டு வேடிக்கை பார்த்ததே எழுதும்போது யோசித்து எழுதவும்.
நன்றி
மகாராச
உங்கள் கேள்வி நியாயமானதே! கேரள கிறிஸ்துவர்கள் தாக்குவது திட்டமிட்ட பிரிவினைச் செயல்.இதற்கு சோனியாவோ,ராகுலோ ஒரே ஒரு அறிக்கை விடவில்லை என்பதை கவனிக்கவும்.கேரள இந்துபோலீஸ் இதை தடுக்காததற்குக் காரணம் அரசியல்! இந்தியாவில் ஒவ்வொருகிறிஸ்தவரும் தனது மதம் பற்றிய முழுமையான,தெளிவான விழிப்புணர்வுடன் இருக்கிறார்.ஆனால்,எத்தனை இந்துக்கள் தனது சனாதன தர்மம் பற்றிய விழிப்புணர்வுடன் இருக்கின்றனர்?
ReplyDeleteஉங்கள் கேள்வி நியாயமானதே! கேரள கிறிஸ்துவர்கள் தாக்குவது திட்டமிட்ட பிரிவினைச் செயல்.இதற்கு சோனியாவோ,ராகுலோ ஒரே ஒரு அறிக்கை விடவில்லை என்பதை கவனிக்கவும்.கேரள இந்துபோலீஸ் இதை தடுக்காததற்குக் காரணம் அரசியல்! இந்தியாவில் ஒவ்வொருகிறிஸ்தவரும் தனது மதம் பற்றிய முழுமையான,தெளிவான விழிப்புணர்வுடன் இருக்கிறார்.ஆனால்,எத்தனை இந்துக்கள் தனது சனாதன தர்மம் பற்றிய விழிப்புணர்வுடன் இருக்கின்றனர்?
ReplyDelete