Showing posts with label ஜடாமுனி. Show all posts
Showing posts with label ஜடாமுனி. Show all posts

Friday, December 30, 2011

நேர்மையானவர்கள் பின்பற்ற வேண்டிய முனீஸ்வரர் வழிபாடு






நம்மில் பலர் முன் ஜன்மங்களில் செய்த கர்மவினைகளின் காரணமாக,இந்த பிறவியில் ஏதாவது ஒரு குறையோடு அல்லது கடுமையான வறுமை/ஏக்கம்/நோய்/பிரச்னையோடு வாழ்ந்து கொண்டிருப்பார்கள்.ஆனால், அதே சமயம் முன் ஜன்மங்களில் செய்த ஒருசில புண்ணியங்களின் விளைவாக நல்ல ஆத்மாவாகப் பிறந்து,தன்னை சுற்றியிருக்கும் அனைவரையும் வழிநடத்திக்கொண்டிருப்பர்;அல்லது தன்னைச் சுற்றியிருப்பவர்களின் சுபாவங்களை பழகி புரிந்துகொண்டும்கூட, அவர்களுக்கு அவர்கள்  கேட்காமலேயே உதவி செய்துகொண்டே இருப்பார்கள்.(ஆனால்,இவருக்கு எவருமே உதவமாட்டார்கள்)இருப்பினும் இவர்களின் வாழ்க்கை ரொம்ப சாதாரணமாக இருக்கும்.

இவர்களில் பலரது குலதெய்வமாக முனீஸ்வரர் இருப்பார்;அல்லது இவரது பெயரிலேயே முனீஸ்வரன் இருக்கும்.உதாரணம்:முனிராஜ்,முனிரத்தினம்,ஜடா முனி,                                             ராஜ முனி, வடுகமுனி,முனீஸ்வரி,சுந்தரமஹாமுனிலட்சுமி,  பட்டுமுனீஸ்வரி,பாண்டி முனீஸ்வரி,குருமுனி,முனிகுமார், முனிலட்சுமணன்,
முனீஸ்வரப்பாண்டியன்,இமயமுனி,முனிராணி,முனிமகேஸ்வரி,
மகேஸ்வரமுனி . . .


இவர்களுக்கு ஒரு சூட்சுமவழிபாட்டுமுறையை நமது ஆன்மீக குரு சிவகடாட்சமுள்ள திரு,மிஸ்டிக் செல்வம் ஐயா அவர்களின்  அவர்களின் வழிகாட்டுதலாலும் உங்களுக்கு சமர்ப்பிக்கிறேன்.

ஒவ்வொரு ஊரிலும் தேரடி முனீஸ்வரர் கோவில்கள் இருக்கின்றன.பல இடங்களில் கரையடி முனியாண்டி கோயில்களும்,மக்கள் வாழும் தெருக்களுக்குள்ளேயே முனீஸ்வரர் கோயில்களும் இருக்கின்றன.இந்த முனீஸ்வரர்களின் அருளால் அந்தந்தப்பகுதியில் மாந்திரீகப்பாதிப்பு இல்லாமல் மக்கள் சுகமாக வாழ்ந்து வருகின்றனர் என்பதே உண்மை!


நெல்லை மாவட்டம் சிவகிரி$ என்னும் ஊரில் பேருந்து நிலையத்துக்கு மிக அருகே தேரடி முனீஸ்வரர் கோவில் ,பன்னீர் மரத்தடியில் அமைந்திருக்கிறது.பார்க்க படம்:


ஒவ்வொரு வாரமும்(வெகுதூரத்தில் இருந்து வருபவர்கள் மாதம் ஒரு) வெள்ளிக்கிழமையன்று காலை 10.30முதல் 12 மணிக்குள் அல்லது மாலை 5 மணி முதல் 7 மணிக்குள் இந்த கோவிலுக்கு வந்துவிட வேண்டும்.அப்படி வரும்போது பின்வரும் பொருட்களைக் கொண்டு வர வேண்டும்.


1.சிகப்பு ரோஜாப்பூக்களால் கட்டப்பட்ட மாலை(வேறு எந்த பூவும் இதில் ஒன்று கூட இருக்கக் கூடாது)
2.ஒரு பத்திப் பெட்டி
3.நான்கு வாழைப்பழங்கள்(எந்த ரகமாக இருந்தாலும் பரவாயில்லை)
4.கொட்டைப்பாக்கு ரூ.3/-க்கு
5.வெற்றிலை ரூ.3/-க்கு
6.ஒரு கிலோ டயமண்டு கல்கண்டு
7.தேங்காய் (திருமணமானவர்கள் மட்டும்)
8.வெஜிடபிள் பிரியாணி(வீட்டில் சமைத்திருக்க வேண்டும்)
9.கோதுமை மாவால் செய்யப்பட்ட பாயாசம்


இவைகளைக் கொண்டு வந்து,முதலில் ரோஜாப்பூ மாலையை இந்த தேரடி முனீஸ்வரருக்கு  அணிவிக்க வேண்டும்;நான்கு வாழைப்பழங்களில் மொத்தபத்தியையும் கொளுத்தி வைக்கவேண்டும்;வெஜிடபிள் பிரியாணியையும்,பாயாசத்தையும் படைக்க வேண்டும்;கற்பூரத்தை கொளுத்திவிட்டு,இவரது சன்னிதியில் சில நிமிடங்கள் அமர்ந்து வேண்டிக்கொள்ள வேண்டும்.நமக்கு என்ன தேவையோ அதைத் தான் கேட்க வேண்டும்.பிறகு,இந்த சன்னிதியில் விழுந்து வணங்கிக்கொள்ள வேண்டும்.இது அவசியம்.


பிறகு,வெஜிடபிள் பிரியாணியை இந்தக் கோவிலின் வாசலில் நின்று கொண்டு வருபவர்களுக்கு பகிர்ந்து கொடுக்க வேண்டும்;கொஞ்சத்தை வீட்டுக்கொண்டு போகவும் வேண்டும்;டயமண்டு கல்கண்டினையும் பகிர்ந்து கொடுக்க வேண்டும்;இவ்வாறு  தொடர்ந்து 8 வெள்ளிக்கிழமைகள் செய்து வர வேண்டும்.

இந்த 8 வெள்ளிக்கிழமைகளிலும் தாம்பத்திய உறவு கண்டிப்பாக தவிர்க்க வேண்டும்.அதற்கு முந்தைய நாளான வியாழக்கிழமையும் கண்டிப்பாக தவிர்ப்பது அவசியம்.இந்த 8 வெள்ளிக்கிழமைகளும் அசைவம் சாப்பிடுவது;யாருடனாவது சண்டையிடுவது;ஆபாசப்படங்கள் பார்ப்பது;அனாவசியமான கெட்ட வார்த்தைகள் பேசுவதை கண்டிப்பாக செய்யக்கூடாது.இந்த 8 வெள்ளிக்கிழமைகளும் இந்த வழிபாடு செய்பவர்கள் அன்றிரவு மட்டும் தனியறையில் தூங்க வேண்டும்.
இந்த 8 வெள்ளிக்கிழமைகளுக்குப் பிறகு ஆண்டுக்கு* நான்கு வெள்ளிக்கிழமைகளுக்கு இதேபோல வழிபாட்டை இந்தக் கோவிலுக்கு வருகை தந்து செய்தால் போதும்;


 * 8 வது வெள்ளிக்கிழமையிலிருந்து ஓராண்டு கணக்கு வைத்துக் கொள்ளவும்.


இந்த முனீஸ்வரர் வழிபாட்டை நேர்மையாகவும்,ஒழுக்கமாகவும் இருப்பவர்கள் மட்டுமே செய்ய வேண்டும். மற்றவர்களால் இந்தக் கோவிலுக்கு சுற்றுலாவாக மட்டுமே வரமுடியும்.வீம்புக்குச் செய்ய நினைப்பவர்கள் தேவையற்ற சிக்கலில் மாட்டிக் கொள்வீர்கள்.ஜாக்கிரதை!!!


இந்த வழிபாடு 8 வெள்ளிக்கிழமைகள் செய்தபின்னர்,அவர்களின் குறைகள் எதுவாக இருந்தாலும் (அது நேர்மையாக இருந்தால் மட்டும்) நிறைவேறும்.முனீ என்ற பெயருடைய பெண்களும் இதைச் செய்யலாம்.அவர்களின் தீட்டுநாட்களில் வெள்ளிக்கிழமை வந்தால்,அதைத் தவிர்த்து விட்டுச் செய்யலாம்.இதைச் செய்பவர்களுக்கு யாராவது மாந்தீரீக ஏவல் வைத்திருந்தால்  அது விலகிவிடும்;மாத விலக்குப் பிரச்னைகள் இருந்தாலும் அது குணமாகிவிடும்;மிகவும் சக்திவாய்ந்த அதே சமயம் சூட்சும வழிபாடு இது.இதைச் செய்து வருபவர்களுக்கு அஷ்டமச்சனி,ஜன்மச்சனி தொல்லை தீர்ந்துவிடும்.


$ விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்திலிருந்து அடிக்கடி பேருந்து வசதிகள் உள்ளன.இங்கிருந்து தென்காசி,செங்கோட்டை,குற்றாலம் செல்லும் அனைத்துப்பேருந்துகளும் சிவகிரிவழியாக செல்பவை;


ஓம்சிவசிவஓம்
ஓம்சிவசிவஓம்
ஓம்சிவசிவஓம்






Friday, December 9, 2011

மாதவிலக்கு மற்றும் மாந்திரீகப்பிரச்னைகளைத் தீர்க்கும் தேரடி முனீஸ்வரர்,சிவகிரி,நெல்லைமாவட்டம்






$ உங்களின் குல தெய்வம் முனீஸ்வரரா?

$ உங்களின் பெயர் முனித் தொடர்புடையதாக இருக்கிறதா?

(உதாரணம்:முனிராஜ்,இசக்கிமுனி,ஜடாமுனி,பாண்டிமுனி,முனீஸ்வரி,முனீஸ்வரன்,முனிரத்ரன்,முனியாண்டி,முனிரத்தினம்,ரத்தினமுனி,ராஜமுனி. . .)

அல்லது

$ உங்களுக்கு/ உங்கள் வீட்டுப் பெண்களுக்கு மாதவிலக்குப் பிரச்னைகள் பல வாரங்களாக/மாதங்களாக/வருடங்களாக இருக்கின்றனவா?

அல்லது

$ உங்களுக்கு/உங்கள் குடும்பத்தாருக்கு மாந்திரீகப்பிரச்னைகள் இருந்து,அதிலிருந்து மீண்டு நிம்மதியாகவும்,நியாயமாகவும் வாழ விரும்புகிறீர்களா?

இவற்றில் ஏதாவது ஒன்றிற்கு ஆம் எனில்,நீங்கள் செய்ய வேண்டியது இது மட்டுமே!

 ஒன்பது வெள்ளிக்கிழமைகளுக்கு நீங்கள் நெல்லை மாவட்டம் சிவகிரிக்கு வர வேண்டும்.சிவகிரி பேருந்து நிலையத்துக்கு அருகில் தேரடி முனீஸ்வரர் கோவில் இருக்கிறது.இங்கே வர வேண்டும்;வந்து வெள்ளிக்கிழமை மாலை 5 மணி முதல் 7 மணிக்குள் பின்வரும் பொருட்களுடன் வந்து படையலிட்டு வழிபட வேண்டும்.வழிபட்டப்பின்னர்,வேறு எந்த கோவிலுக்கும் செல்லாமலும்,யார் வீட்டிற்கும் செல்லாமலும் உங்களுடைய இருப்பிடத்துக்குச் செல்ல வேண்டும்.நியாயமாக வாழ்ந்து வருபவர்களுக்கு உடனடிப்பலனை இந்த வழிபாடு செய்கிறது.தொலை தூர மாவட்டம்/மாநிலம்/நாட்டிலிருந்து வருபவர்கள் மாதம் ஒரு வெள்ளிக்கிழமை அல்லது மூன்று மாதங்களுக்கு ஒரு வெள்ளிக்கிழமை இவ்வாறு வருகை தந்து வழிபாடு செய்யலாம்.

தேரடி முனீஸ்வரரை வழிபட கொண்டு வர வேண்டிய பொருட்கள்: நான்கு வாழைப்பழங்கள்,பத்திகட்டு,டையமண்டு கல்கண்டு,கற்பூரம் கொஞ்சம்.
இந்த வழிபாட்டை ஆரம்பிக்க அசைவத்தை அடியோடு விட்டுவிட வேண்டும்.முறையற்ற உறவுகளை நீக்கியிருக்க வேண்டும்.வன்மம்,பழியுணர்ச்சி,பொறாமை குணங்களைக் கட்டுப்படுத்தி வேண்டினால்,ஓரிரு தடவைகளில் வழிபாடு செய்ததுமே பலன்கள் கிடைக்கத்துவங்கும்;முயன்று பார்க்கலாமா?

படத்தில் இருப்பது சிவகிரி தேரடி முனீஸ்வரர் சன்னதி***

ஓம்சிவசிவஓம் ஓம்ஹரிஹரிஓம்





Friday, September 3, 2010

இந்துதர்மத்தின் வேர்களில் ஒன்று

இந்து தர்மத்தின் வேர்களில் ஒன்று:







தமிழ்நாடு மாநிலம்,கல்லுப்பட்டி அருகில் அமைந்திருக்கும்முனியாண்டி கோவிலில் ஒரு சிறப்பு உண்டு.இந்த முனியாண்டியை குல தெய்வமாகக் கொண்டுள்ள இந்த பகுதி மக்கள் இந்தியா முழுக்கவும் பரவியுள்ளனர்.


இவர்கள் முனியாண்டி விலாஸ் என்ற பெயரில் உணவகங்களை தமிழ்நாடு,இந்தியா முழுக்கவும் நடத்தி வருகின்றனர்.இவர்களது உணவகத்தில் ஒவ்வொருநாளும் முதலில் யார் சாப்பிட வருகிறார்களோ,அவர்கள் தரும் பணத்தை தினமும் சேமித்து,ஆண்டுக்கு ஒரு முறை ஐந்துநாட்கள் வரை கடைக்கு விடுப்பு விட்டு விட்டு கல்லுப்பட்டிக்கு வருகின்றனர்.


முனியாண்டி கோவிலில் அன்னதானம்,கொடைவிழா நடத்துகின்றனர்.


அந்தத் திருவிழாவில் கூடும் மக்களில் பெரும்பாலானவர்களின் பெயர்கள் முனி என்று துவங்கும்;அல்லது பெயரிலேயே முனி இருக்கும்.

Monday, September 21, 2009

முனி என்றால் என்ன?




ஈஸ்வரன் பட்டம் என்பது மொத்தப்பிரபஞ்சத்திலும் இரண்டேபேருக்குத் தான் உண்டு.ஒருவர் ஈஸ்வரன் எனப்படும் சிவபெருமான்.மற்றவர் ஈவிரக்கமில்லாமல் தர்மத்தைக்காக்கும் சனீஸ்வரன்மூன்றாவதாக ஈஸ்வரப்பட்டம் பெற்றிருப்பது முனீஸ்வரன்.

சிவபெருமானின் அந்தரங்கக்காவலர்களில் ஒருவரே முனீஸ்வரன்.முற்காலத்தில் ஒரு கிராமத்தையே இரவுநேரங்களில் காப்பவர் முனிஆவார்.துஷ்டசக்திகளை அடியோடு ஒழித்துக்கட்டும் பொறுப்பு இவருடையது.
2000 வாட்ஸ் மின்சாரம் பாயும் மின்கோபுரங்களையே தூக்கி வீசி எறியும் சக்தியுடையவர் முனீஸ்வரன்.

இவர் செல்லும் பாதையில் இருக்கும் நிறுவனங்கள் விளங்காது.வேலைக்காரர்கள் வரமாட்டார்கள்.கட்டப்படும் வீடு பாதியிலேயே நிற்கும்.ஒருபோதும் அங்கே யாரும்குடியேற முடியாது.ஒருவேளை குடியேறினாலும் விரைவில் வேறிடம் செல்லும் நிர்ப்பந்தம் உண்டாகும்.அல்லது திடீர் மரணம் நிச்சயம்.

மகாராஷ்டிரபிராமணர்கள் மட்டுமே முனீஸ்வரனைக் கட்டுப்படுத்து சக்தியை அறிந்துள்ளனர்.

முனி என்ற பெயரைக்கொண்ட ஆண்கள்,பெண்கள் அளவற்ற குறும்பு செய்பவர்களாக இருக்கிறார்கள்.ஆனால்,இவர்களைப்போல்,பாசமுள்ள மனிதர்களைப் பார்ப்பது மிக அரிது.இவர்களை தம் வாழ்க்கைத்துணையாகக்கொண்டவர்களின் பாடு திண்டாட்டம் தான்.முனி என்ற பெயரை உடையவர் அன்புக்கு மட்டுமே கட்டுப்படுவார்.அதிகாரத்தால் இவர்களை சிறிதுகூடக் கட்டுப்படுத்தமுடியாது.
பல சந்தர்ப்பங்களில்,முனி என்ற பெயரைக்கொண்டவர்களின் நடத்தை மிக வினோதமானதாக இருக்கும்.சிலநேரங்களில்,இவர்கள் தன்னையறியாமல் கூறும் வார்த்தைகள் நிஜமாகும்.

ஒரு குடும்ப வம்சத்தை எடுத்துக்கொண்டால், அதில் சுமார் 100 கிளைகள் இருக்கும்.100 கிளைகள் என்பது 100 குடும்பங்களின் தலைமுறைகள் எனச் சொல்லலாம்.ஆனால்,ஒவ்வொரு தலைமுறையிலும்,ஒரே ஒரு குடும்பத்தில் உள்ள ஒரே ஒரு ஆண் அல்லது பெண்ணுக்கே அவர்களின் குலதெய்வத்தின் ஆசி கிடைக்கும்.அப்படி ஆசிகிடைத்தவர்கள் எப்போதும் மனதில் சோகமயமாகவே காணப்படுவார்.ஆனால்,அவருக்கு சகலசவுபாக்கியங்களும் இருக்கும்.இப்படி குலதெய்வ அருளாசி பெற்றவர்களுக்கு மட்டுமே முனி என்ற பெயரைக்கொண்டவர்கள் அருள்வாக்கு சொல்லுவார்.அல்லது ஜாதகப்பலன் கூறுவார்.

மதுரை,தேனி,கம்பம்,விருதுநகர்,சிவகாசி,சாத்தூர்,சங்கரன்கோவில்,குற்றாலம்,தென்காசி,ராஜபாளையம்,திருநெல்வேலி,நாகர்கோவில்,தூத்துக்குடி,திருச்செந்தூர்,மார்த்தாண்டம்,குளச்சல் முதலான பகுதிகளில் முனீஸ்வரரை குலதெய்வமாகக் கொண்ட குடும்பங்கள் பல லட்சங்கள் இருக்கின்றன.

முனீஸ்வரர் நள்ளிரவு 12 மணிக்கு மேல் 5 மணிக்குள் நகர்வலம் வருவார்.சுமார் 20 அடி உயரம் அதிகபட்சம் 1000 அடி உயரத்துக்கு வெண்புகை வடிவில் கண்கள் பஸ்ஸின் முன் விளக்கு(ஹெட் லைட்)அளவுக்கு அதாவது கால்பந்து சைசுக்கு பிரம்மாண்டமாக நெருப்புபோல பிரகாசிக்கும்.நேருக்குநேர் பார்த்தவர்கள் பலர் அதிர்ச்சியில் உடனே மரணமடைந்திருக்கிறார்கள்.

முனீஸ்வரர்கோவிலில் மேல்விதானம் இருக்காது.முனீஸ்வரன் கோவில் அருகே நிச்சயம் ஒரு விதவை குடியிருப்பாள்.நள்ளிரவில் முனி அவளுடன் தொடர்பு கொள்ளுவார்.முனீஸ்வரர் பூஜை என்றபெயரில் கிழக்குப்பதிப்பகம் ஒரு புத்தகம் வெளியிட்டுள்ளது.தொடர்புக்கு:www.nhm.in

சில முனிப் பெயர்களைப்பார்ப்போம்:
முனி,
முனிரத்தினம்,
முனிராஜ்.
நாகமுனி,
வீரமுனி
ஜடாமுனி
ராஜமுனி
முனிராஜா
அருள்முனி
முனிராம்
முருகமுனி
முனிக்கருப்பன்
முனிதங்கம்
முனிவைரம்
முனீஸ்வரன்
முனீஸ்வரி
ஜெயமுனி
பொன்முனி
வெண்முனி
நாகரத்தினமுனி
சிவமுனி
மகாமுனி
சக்திமுனி
சுந்தரமகாமுனிலட்சுமி
முனிலட்சுமி
முனிகாளி
முனியப்பன்
முனியப்பு
முனியப்பா
முனிவாணி
கலைமுனி
நிலாமுனி
வான்முனி
சகாமுனி
வேல்முனி
ராஜமுனி
ராம்முனி
முனிபிள்ளையார்