Monday, July 6, 2015

இந்தியா ஏன் இன்னும் வல்லரசாகவில்லை? பாகம் 2




ஏன்னா யாரும் தன்னை,தனது குறைகளைக் கண்டறிந்து தன்னை சீர்திருத்தத் தயாராக இல்லை;அடுத்தவர் மீது பழியைப் போட்டு தன்னை,தனது பதவியைத் தக்க வைக்கவே பார்க்கிறார்கள்;இது மேற்குநாடுகளுக்கு வசதியாகப் போய்விட்டது;

1000 ஆண்டுகளுக்கு முன்பு இந்தியாவில் பிச்சைக்காரி கூட 5 கிலோவுக்கு தங்க நகைகள் அணிந்திருந்தாள்;எந்தவீட்டிற்கும் கதவே கிடையாது;ஏன்னா இங்கே திருட்டே கிடையாது;என்று மார்க்கோ போலோவும்,யுவான் சுவாங்கும் எழுதியிருப்பதைப் பார்த்து நாம் பெருமைப்படுகிறோம்;இன்று இந்தப் பெருமைகளை ஏன் நம்மால் மீண்டும் நிலைநிறுத்த முடியவில்லை;

பங்களாவில் வசிப்பவர்களும் இலவச மிக்ஸி,கிரைண்டருக்கு ஆசைப்படுவதன் காரணம் என்ன?

கடந்த 6 தலைமுறையாக சுமாராக 300 ஆண்டுகளாக நமது தேசத்தின் பெருமைகளும்,செல்வங்களும் மேற்கு நாடுகளால் சூறையாடப்பட்டுவிட்டன;இப்போது மிஞ்சியிருப்பது சூதுவாது தெரியாத அப்பாவி இந்தியர்களின் அயராத உழைப்பு மட்டுமே!

திட்டமிட்டும்,ஒருங்கிணைந்தும் நமது பாரதப் பண்பாட்டின் வேர்களில் வெந்நீரும்,ஆசிட்டும் ஊற்றப்பட்டு வருகின்றன;இதை நாம் உணருவதில்லை;

இங்கிலீஷ் மீடியம் படித்தவர்களுக்கு அவர்களின் குலதெய்வத்தின் பெருமை,மகிமை,வழிபடுவதன் அவசியம் இன்று தெரிகிறதா? எனக்குத் தெரிந்த 9 வயது சிறுமி தனது அன்னையிடம் கூறுகிறாள்; “நான் இங்கிலீஷ் மீடியத்தில் படிக்கிறேன்;நான் ஏன் நீ சாப்பிட்ட எச்சில் தட்டை கழுவ வேண்டும்?” என்று.

தனது குறைகளைத் தானே கண்டறிந்து தன்னை சீர்திருத்துபவர்கள் வெகு வேகமாக இல்லாவிட்டாலும்,நிதானமாகவும்,உறுதியாகவும் உயர்ந்த பதவிகளுக்கு வந்துவிடுகின்றனர்;நிர்வாக அடுக்கில் தனது அதிகாரத்தின் மூலமாகவே அவர்கள் தன்னை பாதுகாத்துக் கொள்ள வேண்டியிருக்கிறது.

திரைப்படங்களும் விதிகளை மீறுபவர்களை ஹீரோவாக சித்தரிக்கின்றன;அப்படி சித்தரிக்கத் துவங்கி 100 ஆண்டுகள் ஓடிவிட்டன;சுமாராக 10000 திரைப்படங்கள் பொதுமக்கள் மனதில் க்ரிமினல்களை ஹீரோ என நம்ப வைக்கின்றன;பிறகு எப்படி தர்மம்,நீதி,நியாயப்படி வாழ்பவர்களுக்கு அங்கீகாரம் கிடைக்கும்?

எலிஸெபத் டெய்லர் என்று ஒரு பெயரை 1980க்கு முன்பு பிறந்தவர்கள் அடிக்கடி கேள்விப்பட்டிருப்பர்;இதற்கு விளக்கம் என்ன தெரியுமா?

எலிஸெபத் இப்போது டெய்லர் என்பவரின் மனைவியாக இருக்கிறார் என்று அர்த்தம்;(அப்போ இதற்கு முன்பு எலிஸெபத் ஜேம்ஸ் ஆக இருந்திருக்கலாம்;இன்னும் சில காலம் கழித்து எலிஸெபத் மார்ட்டினாகவும் மாறலாம் என்றும் அர்த்தம்)

இதை அப்படியே ஈயடிச்சான் காப்பியாகி நம்ம நாட்டில் நிர்மலா பெரியசாமி,சந்தியா ராஜகோபால் என்று தன்னை அறிமுகப்படுத்திக் கொள்வதுதான் இந்துப் பண்பாடா?



No comments:

Post a Comment