Saturday, July 25, 2015

அமெரிக்கா ஒரு இந்து நாடாக கூட உருவெடுக்கலாம் !!!

மதவெறி கொண்ட கிறிஸ்தவ மதயானைக் கூட்டங்களை மண்டியிடச் செய்த இந்து போராளி வீரத்துறவி சுவாமி விவேகானந்தர் அவர்கள். தன் கிறிஸ்தவ மதத்தின் வலிமையை காட்ட அமெரிக்கா 1893 ம் ஆண்டு சிகாகோ மாநகரில் உலகமகா மத மாநாட்டைக் கூட்டியது. இதில் கலந்து கொண்ட நம் விவேகானந்தர் அவர்கள் இந்து மத தத்துவம், வேதம், கலாச்சாரம், பண்பாடு என அனைத்தையும் விளக்கி இந்து மதத்தின் பெருமையை உலகறியச் செய்தார். அதுவே மதவெறியில் ஆடிய அமெரிக்காவின் ஆணவத்தை அழித்து இந்து மதத்திற்கான விதையை விதைத்தது.
மேலும் இந்து மதம் சார்பாக பல சொற்பொழிவுகளை சுவாமி விவேகானந்தர் அமெரிக்காவில் உரையாற்ற அமெரிக்கா இந்து மதத்தினை அரவணைக்கத் தொடங்கியது. இந்தியர்கள் பலர் அமெரிக்காவில் குடியேறி பல இந்துக் கோவில்களை அமெரிக்காவில் கட்டி பூஜிக்கவும் தனது முழு ஆதரவு அளித்த அமெரிக்கர்கள் இந்து மதத்தை அறிந்து இந்துவாக மதம் மாறினார்கள். உலகின் மிகப்பெரிய புதிய இந்துக் கோவில் நியூஜெர்சியில் கட்டப்பட்டது இதற்கு ஒரு சான்று.
அமெரிக்கர்களை முற்றிலும் ஈர்த்த நம் யோகக்கலை உணர்த்தியது நம் மதத்தின் உன்னத நிலையை. இந்து மதம் அறிவியல், ஆயுர்வேதம் ,வாழ்க்கைமுறை, கலை, பண்பாடு என அனைத்து சிறப்புகளையும் கொண்டது என புரிந்து கொண்டனர். பலர் இந்தியா வந்து யோகா மற்றும் ஆண்மீகங்களை கற்று இந்துவாகி இந்து மதத்தின் தொன்மையை உலகறியச் செய்கின்றனர்.
அமெரிக்காவில் குடியேறும் இந்துக்களிடம் மிக நட்புடன் பழகும் இவர்கள் தேடியடைகின்றனர் உண்மை மதத்தை! அன்பையும், அறிவியலையும், ஆண்மீகத்தையும் ஒரு சேர கொண்டுள்ளது இந்து மதம். நான் தான் கடவுள் என்னை மட்டும் வணங்கு என மார்தட்டித் திறியும் கபட மதங்களுக்கிடையே இந்து மதமானது இயற்கையின் படைப்புகள் (ஐம்பூதங்கள்) அனைத்தும் கடவுளே என்கிறது. என்னை வணங்கு, என்னை மட்டுமே வணங்கு என தன்னை பிறரிடம் புகுத்தாத மதம், வாழ்க்கை நெறிமுறைகளை கற்பிக்கும் இராமாயணம், மகாபாராதம் என பட்டியல் நீண்டு கொண்டே போகும்.
அமெரிக்காவில் இந்து மக்கள் தொகையானது (தோராயமாக) .....
1910 ல் 2545 ஆகவும்
1980 ல் 3,61,531 ஆகவும்
1990 ல் 8,15,447 ஆகவும்
2000 ல் 1,678, 765 ஆகவும்
2010 ல் 2,843, 391 ஆகவும் இதுவே
2015 ல் 3,103,000 (0.9%) ஆகவும் அதிகரித்திருக்கலாம் என நம்பப்படுகின்றது.
இந்து மதமானது இரண்டு மடங்கு வேகத்தில் வளர்ச்சி பெறுகின்றது அமெரிக்காவில்!
ISKCON அமைப்பு இங்கே மாபெரும் இந்து மதத் தொண்டாற்றுகின்றது.
இந்துக்களின் வளர்ச்சியானது இதுபோலவே பலமடங்கு பெருகிக் கொண்டே போகும் என்றால் 2100 ஆம் ஆண்டு காலகட்டத்தில் அமெரிக்கா ஒரு இந்து நாடாக கூட உருவெடுக்கலாம் என ஒரு ஆய்வு தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment