Thursday, July 30, 2015

இந்து மஹாசமுத்திரமும்,இந்து தர்மமும்=1


பிரான்ஸ் நாட்டு ஜோதிட மாமேதை நார்ஸ்டர்டாமஸ் இன்றும் உலகப் புகழ் பெற்றவராக இருக்கிறார்;ஏனெனில்,அவர் எழுதிய நூற்றாண்டுகள் என்ற ஜோதிடப் புத்தகமே அவரை நிரந்தரப் புகழுக்கு இட்டுச் சென்றது;அதில் கி.பி.2100 வரை உலகில் நடக்க இருக்கும் முக்கியமான சம்பவங்களை விரிவாக,துல்லியமான வருடத்தோடு எழுதியிருக்கிறார்;
அதில் இந்திரா காந்தி பிரதமராக இருக்கும் போது அவரது பாதுகாவலர்களாலேயே கொல்லப்படுவது, இந்தியா பாகிஸ்தான் பிரிவினை,அப்துல்கலாம் ஜனாதிபதியாவது,மன்மோகன்சிங் பிரதமராவது,நரேந்திரமோடி பிரதமர் ஆவது முதலான பல விஷயங்களை சரியான வருடத்துடன் எழுதியிருக்கிறார்;அதில் மஹாசமுத்திரத்தின் பெயரைக் கொண்ட மதம் உலகம் முழுக்கப் பரவும்;பின்னர் மற்ற மதங்களை மனிதர்களே கைவிடுவர்;என்றும் எழுதியிருக்கிறார்;
அட்லாண்டிக் மஹா சமுத்திரம் இருக்கிறது;அட்லாண்டிக் மதம் இல்லை;பசிபிக் மஹா சமுத்திரம் இருக்கிறது;பசிபிக் மதம் இல்லை;ஆர்டிக் பெருங்கடல் இருக்கிறது;ஆர்டிக் மதம் இல்லை;இந்து மஹா சமுத்திரம் இருக்கிறது;இந்து மதமும் இருக்கிறது;
அவரால் எப்படி இப்படி ஒரு நூலை எழுத முடிந்தது? அவர் வாழ்ந்த கி.பி.1400 களில் அவர் இந்தியாவுக்கு வருகை தந்தார்;காசியில் 3 ஆண்டுகள் தங்கியிருந்து ஜோதிடம் கற்றுக் கொண்டார்;அதனால் தான் இப்பேர்ப்பட்ட நூலை எழுத முடிந்தது;என்பது மேற்கு நாடுகளால் மறைக்கப்பட்ட ப்ளாட்டின உண்மை;

No comments:

Post a Comment