அகிலாண்ட கோடி நாயகியாம் அன்னை பராசக்தி,சர்வேஸ்வரனின் கட்டளைக்கிணங்க,ஒரு சமயம் தட்சாயணி என்னும் திருப்பெயரைத் தாங்கி தட்சனின் மகளாகப் பிறந்து வளர்ந்து வந்தாள்;அப்போது ஈசனையே இதயத்தில் இருந்து ஈடிணையற்ற தவம் புரிந்து, சர்வேஸ்வரனையே மணந்து சர்வேஸ்வரியும் ஆனாள்;
அப்போது தாட்சாயணியின் தந்தை நடத்திய ஒரு மாபெரும் யாகத்திற்கு,சர்வேஸ்வரனுக்கு முறைப்படி அழைப்பு அனுப்பாததால்,தட்சன் நடத்திய யாகத்துக்குப் போகக்கூடாது என்று தடுத்த ஈசனின் கட்டளையையும் மீறி,தந்தையின் மீதுள்ள பாசத்தால் தாட்சாயணி யாகத்துக்குச் சென்றாள்;ஆனால்,கணவனின் சொல்லை மீறிச் சென்ற பராசக்தியை அங்கே கவனிப்பாரில்லாமல் போனது மட்டுமல்லாமல் ஏளனச் சொற்களுக்கும் ஆளானாள்;இதனால் மிகுந்த சினமும் அவமானமும் கொண்ட பராசக்தி யாக குண்டத்தில் விழுந்து மாண்டாள்;
அதையறிந்த சர்வேஸ்வரன் ஒடோடி வந்து,தாட்சாயணியின் உடலைத் தம் தோளின் மேல் கிடத்திக் கொண்டு கோர நர்த்தனம் ஆடி பிரபஞ்சம் எங்கும் நடை போட்டார்;அப்போது தேவியின் உடல்பாகங்கள் பூமியில் அங்கங்கே சிதறி 51 பாகங்களாக பாரத புண்ணிய பூமியில் விழுந்தன;பெரும்பாலும் கேரளா,வங்காளமாநிலத்தில் விழுந்திருக்கின்றன;
51 வது இடமாக தேவியின் உடற்பகுதி வீழ்ந்த இடமே ஐம்பத்தோராவது ஊர் என்று பெயர் பெற்றது;அதுவே நாளடைவில் அம்பத்தூர் ஆனது;
வாழ்க பைரவ அறமுடன்! வளர்க வராகி அருளுடன்!!!
No comments:
Post a Comment