126) 4- ஆம் அதிபதி, சுக்கிரன் - இவர்கள் நாற்கால் ராசிகளில் நிற்க, நாற்கால் கிரகங்களுடனே கூட - 4 -ம் இடத்தில் நாற்கால் கிரகங்கள் நிற்க- நாற்கால் வாகனம் வாங்குவான்.
( நாற்கால் ராசிகள் ::- மேஷம் - ரிஷபம் - சிம்மம் - தனுசு .
நாற்கால் கிரகங்கள் ::- சூரியன் - செவ்வாய் - சனி. )
நாற்கால் கிரகங்கள் ::- சூரியன் - செவ்வாய் - சனி. )
127) 4 - ஆம் அதிபதியும் - செவ்வாயும் - உச்ச, ஆட்சி, நட்பு, கேந்திரம் , திரிகோணம் - வீடுகளில் இருப்பது - இவர்களை சுபர் நோக்குவது, லக்னாதிபதியுடன் - 4 -ம் அதிபதி மற்றும் செவ்வாய் சம்பந்தப்படுவது- இந்த ஜாதகனுக்கு - பூமி லாபம் உண்டு. ஒரு தலைமைப் பண்பை அனுபவிக்கக்கூடிய தகுதியும் கிடைக்கும்.
128) மேற்கூறிய கிரக அமைப்புகள் - 6 -8 - 12 - ஆம் பாவங்களில் இருப்பது மற்றும் பகை- நீச வீடுகளில் நிற்பது - பூமி நாசம் ஏற்படும்.
129) 4 -ஆம் அதிபதியும், சந்திரனும் - 6 - 8 -12 -ல் இருப்பது, பாவர் சம்பந்தம் ஏற்படுவது பகை - நீச ஸ்தானங்களுக்கு சம்பந்தப்படுவது- இப்படிப்பட்ட ஜாதகர் - தன் தாயை பேணிக் காத்திடார்.
130) 4 -ஆம் அதிபதி + சுக்கிரன் + லக்கனாதிபதி - இவர்கள் உச்ச, ஆட்சி, நட்பு , கேந்திர , திரிகோணங்களில் சம்பந்தம் மற்றும் சேர்க்கை பெற்ற ஜாதகன் இப்பூவுலகில் சகல செளபாக்கியங்களையும் பெற்று வாழ்வான்.
No comments:
Post a Comment