Saturday, July 25, 2015

பார்த்தீனியா..


வெளிநாட்டிலிருந்து கோதுமை
இறக்குமதி செய்தபோது இந்தியாவிற்கு
திட்டமிட்டே கலந்து விடபட்ட 
விஷ விதை..
ஒரு பூவிலிருந்து ஆயிரக்கணக்கானா
விதைகள் காற்றில் பரவுகிறது..
ஒருமுறை முளைத்தால் அதன் வீரியம்
கால் நூற்றாண்டுவரை நீடிக்கும்..
இந்த பார்த்தீனியம் வீட்டை சுற்றி வளர்ந்து கிடந்தால் குழுந்தைகளுக்கு தீராத சளி,
பெரியவர்களுக்கு தும்மல் போன்ற பிரச்சனைகள் இருந்து கொண்டே இருக்கும்.
இந்த விஷ செடியை பரப்பியதே நம் பாரம்பரிய கொழிஞ்சி செடியை அழிப்பதற்காதத்தான்..
இந்த விஷச்செடியை அழிக்க களைக்கொல்லியை நம் விவசாயிகள் தெளிக்கின்றனர்..
அப்படி தெளிக்கும் போது அழிவது கொழிஞ்சி மற்றும் வரப்புகளில் இருக்கும் அருகம்புல் போன்றைவையும்தான்..
இப்படி தொடர்ச்சியாக களைக்கொல்லிகளை தெளித்து வந்தால் வரப்புகளில் இருக்கும் அருகம்புல் அழிந்து வரப்பு வழுவை இழந்து
மழை பொழியும் போது வரப்பு மண்ணையும் மழை நீருடன் அடித்துக்கொண்டு போய்விடுகிறது..
மாறாக பார்த்தீனியம் இந்த களைக்கொல்லிகளால் விதைகள் வீரியம் பெற்று ஆரோக்கியமாக வளர்கிறது..
மூன்று வருடங்களுக்கு முன் யோசித்தேன்..
இந்த விஷ செடியை அழிக்க என்ன வழி என்று..
தேடினேன்..
பல புத்தகங்களில் தேடினேன்..
ஒரு சிறு தகவல் கிடைத்தது ..
பத்து லிட்டர் நீரில் ஒரு கிலோ கல் உப்பை கரைத்து தெளித்தால் இந்த பார்த்தீனியா அழிந்துவிடும் என்று..
முயற்சி செய்தேன்..
பத்து லிட்டர் தண்ணீரில் ஒரு கிலோ கல் உப்பு என்று..
விஷசெடி காயவில்லை..
இரண்டு கிலோவுக்கும் இல்லை
மூன்று இல்லை,
நான்கு கிலோவுக்கும் இல்லை,
ஐந்து கிலோ என்ற வீதத்தில் கலந்து தெளித்த பிறகுதான் இந்த விஷ செடி காய தொடங்கியது..
ஒரு கிலோ உப்பு மூன்று ரூபாய் என்பதால் இதற்கு செலவும் குறைவு..
பார்த்தீனியா பூ பிடித்த பின் தெளித்தால் முற்றிலும் அழிந்து விடுகிறது..
நான் இப்போது இந்த கல் உப்பை தெளித்த பிறகுதான் ஓரளவு அந்த விஷ செடியை அழிக்க முடிந்தது..
பத்து லிட்டர் தண்ணீரில் ஐந்து கிலோ கல் உப்பை கரைத்த பிறகு பூ பிடித்திருக்கும் பார்த்தீனிய செடி மீது தெளித்தால் அது முற்றிலும் கருகிவிடுவதுடன் அதனுடைய விதைகளும் வீரியம் இல்லாமல் போய்விடுகிறது..
வேறு எதுவும் இதனுடன் கலக்கத்தேவையில்லை..
தெளித்து அடுத்து ஒரு மணி நேரத்தில் காய்ந்து விடுகிது.
அடுத்த சில தினங்களில் முற்றிலும் காய்ந்து விடுகிறது..
அதிகமாக இந்த விஷ செடிகள் இருந்தால் விசைதெளிப்பானிலும்,
குறைவாக இருந்தால் கைத்தெளிப்பானிலும்
தெளிக்கலாம்..
நான் இந்த முறையை பயன்படுத்திய பிறகுதான் எனது தென்னை மரம் காய் அதிகமாகிமாக பிடிக்கத்தொடங்கியது..
தென்னைக்கு வருடம் ஒருமுறை இரண்டு கிலோ கல் உப்பு போட வேண்டும்..
ஆனால் நான் தண்ணீரில் கலந்து தெளிப்பதால் பார்த்தீனியா அழிவதுடன்
தென்னையின் மகசூலும் அதிகமாகிவிட்டது..
களைக்கொல்லி பயன்டுத்ததால் இப்போது கொழிஞ்சி விதையை வரப்புகளில் தூவி விட்டு கொழிஞ்சி விதையையும் மீண்டும் எனது பூமிக்கு மீட்டு விட்டேன்..
வாழைகாட்டில் இந்த பார்த்தீனிய செடி ஆரம்பத்தில் அதிகமாக இருந்தது.
வாழை இலைக்கு படாமல் இந்த உப்பை தெளித்து பார்த்தீனிய செடியை அழித்தேன்.
முடிந்த வரை வெள்ளாமை இல்லாத போது இந்த பார்த்தீனியாவை நன்கு வளர விட்டு பிறகு உப்பு தண்ணீரை தொடர்ந்து பத்து நாள் இடைவெளியில் இரண்டுமுறை தெளித்து விட்டால் இந்த விஷ செடியை முற்றிலும் அழித்து விடலாம்..
அதிகம் வேண்டாங்க..
ஒரு கிலோ பார்த்தீனிய பூ ஐம்பது பைசாவிற்கு விற்றாலே விவசாயிகள் ஆகிய நாங்க லட்சாதிபதி ஆகிடுவோம்...!!

No comments:

Post a Comment