உங்களுக்கு கனவில் மண்டை ஒடு,எலும்புகள்,சிந்திய ரத்தம்,மாமிசம் அடிக்கடி
தென்படுகிறதா?
அல்லது
நீங்கள் உண்டு;உங்கள் வேலை உண்டு என்று இருந்தும் உங்கள் திறமையைப் புரிந்து
கொண்ட பலர் பொறாமைப்படுகிறார்களா?
அல்லது
நிம்மதியாக வாழ முடியாமல் தவிக்கிறீர்களா?
அல்லது
பணியிடத்தில்/தொழிலில் உங்கள் உழைப்புக்குரிய அங்கீகாரம் உடன் பணிபுரிபவரால்/தொழில்
போட்டியாளரால் தடுக்கப்படுகிறது என நம்புகிறீர்களா?
அல்லது
நீங்கள் எடுத்த காரியம் ஒவ்வொன்றும் தோல்வியில் முடிகிறதா? அப்படி தோல்வியில்
முடிவதற்கு யாரோ உங்களுக்கு பில்லி,சூனியம் வைத்திருப்பதாக நினைக்கிறீர்களா?
இதிலிருந்து மீள ஏதாவது ஒரு பக்தி மார்க்கம் உண்டா? என்று ஏங்கியிருக்கிறீர்களா?
ஆம் எனில்,
நீங்கள் இன்று முதல் வழிபட வேண்டியது அன்னை வராஹியைத்தான்!
சக்தி வழிபாட்டில் சர்வசக்தி வாய்ந்ததும்,மிகவும் எளிமையானதுமாக இருப்பது
வராகி வழிபாடுதான்;அசைவம் சாப்பிடுவதை நிறுத்திவிட்டு,மது அருந்துவதையும் கைவிட்டுவிட்டு
அன்னை அரசாலையைச் சரணடையுங்கள்;அவள் உங்களை பில்லி,ஏவலில் இருந்து இப்பிறவி முழுவதும்
காப்பாற்றுவாள்;
அரசாலை என்பது அன்னை வராகியின் 1008 பெயர்களில் ஒன்று;
தினமும் இரவுப் பொழுதில் 108 முறை ஓம் ஐம் க்லெளம் பஞ்சமியை நமஹ என்று எழுத வேண்டும் அல்லது ஒரு மணி நேரம் வரை ஜபித்து வர வேண்டும்;ஜபிக்க ஆரம்பித்த நாளில் இருந்து அசைவம்,மது இரண்டையும் கைவிட்டிருக்க வேண்டும்;
எழுத விரும்புவோர்,பச்சை நிற மையால் எழுத வேண்டும்;
இரவில் மட்டுமே எழுத வேண்டும்;
ஒரு நாளுக்கு குறைந்தது 108 எழுத வேண்டும்;
எழுத ஆரம்பித்த நேரத்தில் இருந்து 108 முறை எழுதி முடிக்கும் வரை போனில் பேசக் கூடாது;டிவி பார்க்கக் கூடாது;பாதியில் எழுந்து செல்லாமல் இருக்க வேண்டும்;
இப்படி தொடர்ந்து 5 ஆண்டுகள் வரை தினமும் எழுத வேண்டும்;பெண்கள் மாத விலக்கு நாட்களில் எழுதக் கூடாது;

No comments:
Post a Comment