லண்டன்:""இந்தியாவை ஆட்சி செய்த போது செய்த அநீதிக்கு, பிரிட்டன் நஷ்ட ஈடு தர வேண்டும்'' என பேசி பரபரப்பை ஏற்படுத்தினார் முன்னாள் மத்திய அமைச்சர் சசி தரூர்.
லண்டனில் சமீபத்தில் "ஆக்ஸ்போர்டு யூனியன்' என்ற அமைப்பு சார்பில் கருத்தரங்கு நடந்தது. இதில் கலந்துகொண்டு சசிதரூர் பேசினார்.
லண்டனில் சமீபத்தில் "ஆக்ஸ்போர்டு யூனியன்' என்ற அமைப்பு சார்பில் கருத்தரங்கு நடந்தது. இதில் கலந்துகொண்டு சசிதரூர் பேசினார்.
அப்போது அவர் கூறியதாவது:இருநூறு ஆண்டு ஆட்சியில் இந்தியாவுக்கு ஏராளமான அநீதிகளை இங்கிலாந்து செய்துள்ளது. இதற்கு பிரிட்டன் பொறுப்பேற்க வேண்டும். பொருளாதாரம் மற்றும் சமூக ரீதியில் நிறைய சேதாரங்களை பிரிட்டன் ஏற்படுத்தியது.
பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்தில் சூரியன் அஸ்தமனமாகுது. ஏனெனில் இருட்டில், கடவுள் கூட பிரிட்டனை நம்ப மாட்டார்.
பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்தில் சூரியன் அஸ்தமனமாகுது. ஏனெனில் இருட்டில், கடவுள் கூட பிரிட்டனை நம்ப மாட்டார்.
பிரிட்டன் ஆக்கிரமிப்பில் நிறைய நாங்கள் இழந்து விட்டோம். பிரிட்டிஷ் ஆட்சியில் வங்காளத்தில் ஏற்பட்ட பஞ்சத்தால் 40 லட்சம் பேர் இறந்தனர். இவர்களுக்கு கிடைக்க வேண்டிய உணவுகளை ஐரோப்பாவுக்கு கொண்டு சென்றது பிரிட்டன். இது பற்றி ஆங்கிலேயேர்கள் கவலைப்படவே இல்லை.
இந்தியாவில் இருந்த செல்வத்தை கொள்ளையடித்து தான், தனது நிதி நெருக்கடியை பிரிட்டன் சமாளித்தது. அதற்கு அவர்கள் நஷ்ட ஈடு தர வேண்டும்.தனது நாட்டு நலனுக்காகவே இந்தியாவை பிரிட்டன் ஆட்சி செய்தது.
முன்பு உலக பொருளாதாரத்தில் இந்தியாவின் பங்கு இருபத்து மூன்று சதவீதமாக இருந்தது. நாட்டைவிட்டு பிரிட்டன் சென்றபோது, அது 4 சதவீதமாக குறைந்து விட்டது.
உலகப் புகழ் பெற்ற மெல்லிய மஸ்லின் துணி தயாரித்த இந்திய கைத்தறியாளர்களை அழித்தது பிரிட்டன். நெசவாளர்கள், பிச்சைக்காரர்களாக மாற்றப்பட்டனர்.
இவ்வாறு அவர் பேசினார்.
உலகப் புகழ் பெற்ற மெல்லிய மஸ்லின் துணி தயாரித்த இந்திய கைத்தறியாளர்களை அழித்தது பிரிட்டன். நெசவாளர்கள், பிச்சைக்காரர்களாக மாற்றப்பட்டனர்.
இவ்வாறு அவர் பேசினார்.
சசிதரூரின் இந்த பேச்சு அடங்கிய வீடியோ, சமூக வலைதளங்களில் பரபரப்பரப்பாக பகிரப்படுகிறது.
No comments:
Post a Comment