Monday, February 22, 2010

யாருக்கு எந்த ராசிக்கல்லை அணிவது?அதை எப்படி தேர்வு செய்வது?


சூரியக்கிரக ஆகர்ஷணசக்தி பூமிக்கு சிவப்பு நிறத்திலும், சந்திரக்கிரக ஆகர்ஷண சக்தி வெள்ளை நிறத்திலும், சுக்கிரக்கிரக ஆகர்ஷண சக்தி வெண்பட்டு நிறத்திலும்,செவ்வாய்க்கிரக ஆகர்ஷணசக்தி சிவப்பு நிறத்திலும், குரு கிரக ஆகர்ஷண சக்தி மஞ்சள் நிறத்திலும், புதன் கிரக ஆகர்ஷண சக்தி பச்சை நிறத்திலும், ராகு மற்றும் கேதுவின் ஆகர்ஷண சக்தி சாம்பல் நிறத்திலும் பூமிக்கு வருகின்றன.அதே போல், மேற்படி கிரகத்தின் நிறத்தில் இருக்கும் கற்களும்,கடல்பாசிகளும் கிரக சக்தியை ஈர்க்கும் என அறிந்து வகைப்படுத்தினர்.

இங்கே தான் குழப்பம் வருகிறது.ஒருவர் கும்ப லக்னம், மேஷ ராசி,ராகு மகா திசை நடக்கிறது என வைத்துக்கொள்ளுவோம்.
கும்ப லக்னம் சனியின் லக்னம், மேஷ ராசி செவ்வாயின் ராசி, ராகு மகா திசை 18 வருடங்கள்.இப்போது அந்த ஒருவர் எந்த விதமான ராசிக்கல்லைப் பயன்படுத்துவது?
கும்ப லக்னம் என்பதால், சனியின் கிரகத்தின் நீலக்கல்லைப் பயன்படுத்துவதா?
இல்லை
மேஷ ராசியின் அதிபதி செவ்வாய்க்கிரகத்தின் பவளக்கல்லைப் பயன்படுத்துவதா?
இல்லை
ராகு மகாதிசையின் அதிபதி ராகு.ராகுவின்
கோமேதகத்தைப் பயன்படுத்துவதா?

இங்கே தான் ஒரு அனுபவமுள்ள ஜோதிடரின் ஆலோசனை தேவைப்படுகிறது.அந்த அனுபவமுள்ள ஜோதிடரும் நடுநிலையுள்ளவராக இருக்க வேண்டும்.
என்னிடம் மேலே கூறிய ஒருவர் நேரில் சந்தித்தார்.அவருக்கு கும்ப லக்னாதிபதியான சனி (ஜோதிடப்படி)கெடவில்லை;மேஷராசிப்படி ராசியதிபதி (ஜோதிடப்படி) நல்ல இடத்தில் அமையவில்லை;
ஆனால்,திசை அதிபதி நன்றாக இருக்கிறார்.அவருக்கு 2015 ஆம் ஆண்டுவரை, கோமேதகம் அணியும்படி ஆலோசனை கொடுத்தேன்.ஒரே வாரத்தில்,அவரது வாழ்க்கைப்பாதை மாறிப்போனது.இப்போது அவர் ரொம்ப பிஸியாகிவிட்டார்.
சிலர் நீலக்கல்,பவளக்கல்,கோமேதகம் மோதிரம் என அனைத்தையும் அணிகிறார்கள்.இதனால்,பலன்கள் ஏற்படுவது அபூர்வம்.
லக்னம்,லக்னாதிபதி,ராசி,ராசியாதிபதி,திசா புக்தி,கோசாரம் என கணக்கிட்டு சரியான ரத்தினக்கல்லைத் தேர்வு செய்ய வேண்டும்.

1 comment:

  1. Dear sir
    I am Devaraj shall i send my kundali?
    will you suggest a good stone for me.
    rdevaraj081@gmail.com

    ReplyDelete