மரபணுப்பயிர்களை அறிமுகப்படுத்தும் மான்சாண்டோவின் வரலாறு:
கி.பி.1901 ஆம் ஆண்டு ஜான் எஃப் க்யூனி என்பவரால் தனது மனைவி ஓல்கா மான்சாண்டோவின் பெயரால் துவங்கப்பட்ட நிறுவனமே இது.சாக்கரின் தயாரிக்கும் நிறுவனமான இது பிற்காலத்தில் உலகின் மோசமான பிராடுக்கம்பெனி என அமெரிக்காவிலேயே ‘பெயர்பெற்ற’நிறுவனமாக வளர்ந்தது.
கடந்த 108 ஆண்டுகளில்,பல்வேறு தில்லுமுல்லுகளைச் செய்து 55 நாடுகளில் கிளைபரப்பி நிற்கிறது.இதன் கிளைகள் பாகிஸ்தான்,சீனா,டென்மார்க்,பிரேசில்,பெரு,பிலிப்பைன்ஸ்,இந்தியா என பலநாடுகளில் ஆளும் வர்க்கத்தை தனது வர்த்தகப்பேராசைக்கு வளைத்துப்போட்டுவருகிறது.இதன் நடவடிக்கைகள் பெரும்பாலும் மர்மமானவை.
உலகம் முழுவதும் இந்த நிறுவனம் மரபணு மாற்றம் செய்யப்பட்ட உணவுப்பொருட்களை அறிமுகம் செய்து கி.பி.2100க்குள் உலக உணவுச்சந்தையில் ஒரே ஒரு வல்லரசு நிறுவனமாக ,சர்வாதிகார நிறுவனமாக மாறத்துடிக்கிறது.உலகம் முழுவதும் வாழும் 700 கோடி மக்களும் உணவுப்பொருட்களை பயிரிட இந்த நிறுவனத்தின் விதைகளை மட்டும் சார்ந்திருக்கும் நிலையை உருவாக்கிட திட்டமிட்டு செயல்பட்டுவருகிறது.வடபாரதத்தில் பி.டி.பருத்தி விதைகளை அறிமுகம் செய்ததால் (பிடி பருத்தி எனப்படும் மரபணு பருத்தியை அறிமுகம் செய்ததே) இந்த மான்சாண்டோதான்.இதனால்,பீகார்,உத்திரப்பிரதேசம்,மத்தியப்பிரதேசம் முதலான மாநிலங்களில் வருடத்திற்கு ஒரு லட்சம் விவசாயிகள் தற்கொலை செய்துள்ளனர்.அந்த வரலாற்றை நாம் முழுமையாகப் படித்தால்,மான்சாண்டோ நிறுவனத்தையே தகர்த்தெறியும் ஆத்திரம்தான் வரும்.அவ்வளவு நயவஞ்சகம்!!!
பருத்தியில் மரபணுப்பயிரை அறிமுகம் செய்ததால் இதன் நயவஞ்சகத்தை நாம் உணரவில்லை;தற்போது பிடி கத்திரிக்காய்,பிடி சோயா,பிடி அரிசி,பிடி வெண்டைக்காய் என ஒட்டு மொத்த இந்தியர்களின் சோற்றுத்தட்டில் 100% விஷமுள்ள உணவுவகைகளை வைக்கத் துடிக்கிறது.இதையெல்லாம் அறிந்தும் கூட மத்திய அமைச்சரவையானது இந்த நிறுவனத்திற்கு சிகப்புக்கம்பளம் விரித்து வரவேற்கிறது.
தற்போதைய மான்சாண்டோவின் தலைவர் ஹக் கிராண்ட்.இவரைத் தவிர, 12 நிர்வாகிகள் மேற்பார்வையில் செயல்பட்டுவரும் மான்சாண்டோவின் லாபவளர்ச்சியைப் பார்த்தால் இதன் அசுர வளர்ச்சி புரியும்.
எத்தகைய உணவுதொடர்பான சோதனையும் செய்துபார்க்கப் படாமலேயே மான்சாண்டோ மகிகோ கம்பெனி உற்பத்தி செய்த பிடி கத்தரிக்காய்க்கு இந்தியாவில் அனுமதி வழங்கப்பட ஏற்பாடுகள் நடந்துகொண்டிருக்கின்றன.12 கோடி இந்து உழவர்க் குடும்பங்கள் பயிர்செய்யும் உணவுப்பயிர் கத்தரிக்காய்.
உழவர் அல்லாத குடும்பங்களிலும் கூட தொட்டியில்,பெட்டிகளில்,மாடிகளில்,வீட்டுத்தோட்டங்களில் பயிர்செய்து உண்ணக்கூடிய காய்கறியான கத்தரிக்காய் 112 கோடி இந்தியர்களின் உணவுப்பண்டமாகும்.இதில்,மரபணுவைத் திணித்து,(மாற்றப்பட்டுள்ளதாகச் சொல்வது பொய்)இந்தியாவின் உணவுச்சந்தையை தனது கைக்குள் கொண்டுவர திட்டமிடுகிறது அமெரிக்க பகாசுர மான்சாண்டோ.
மான்சாண்டோவின் 2009 ஆம் ஆண்டுக்கான நிகர விற்பனை ரூ.56,047 கோடிகள்.இதன் மொத்த லாபம் ரூ.32,326 கோடிகள்.இவ்வ்வ்வளவு லாபம் போதாதென்றுதான் இந்தியர்களின் தினசரி உணவில் கைவைத்து நம்மை அவர்களிடம் பிச்சையெடுக்கும் நிலைக்கு முயற்சியெடுக்கிறது.
No comments:
Post a Comment