10 வயதில் குழந்தைகள் பெறும் இங்கிலாந்து சிறுமிகள்
10.2.2010 ஆம் தேதியிட்ட தினத்தந்தி தினசரியில் மேலே கூறியுள்ள தலைப்பில் ஒரு செய்தி வந்துள்ளது.லண்டனைச் சேர்ந்த ஒரு தொண்டு நிறுவனம் இந்த உண்மையை ஆராய்ந்து வெளியிட்டுள்ளது.
கி.பி.2007 ஆம் ஆண்டில் 10 வயதுடைய இங்கிலாந்து சிறுமிகள் 33 பேர்கள் கர்ப்பமடைந்துள்ளனர்.கி.பி.2008 ஆம் ஆண்டில் இது 70 ஐத் தாண்டியுள்ளது.
இந்த சிறுமிகளின் வாக்குமூலங்களின் படி,இவர்கள் படிக்கும் கல்வி நிறுவனங்கள் இவர்களுக்கு ‘நீங்கள் பாலியல் நடவடிக்கைகளுக்கு தயாராகிவிட்டீர்கள்’ என்ற எண்ணத்தை விதைத்து வருகின்றன.(அப்பிடீன்னா,நாம் குரு என போற்றும் ஆசிரியர்கள் இங்கிலாந்தில் எப்பேர்ப்பட்ட பொறுக்கிகளாக இருந்தால் பிஞ்சுகளின் மனங்களை நஞ்சாக்கியிருப்பர்?!?)
நமது கருட புராணம் கலிகாலத்தில் என்ன நடக்கும்? என்பதை விவரித்துள்ளது.
கலிகாலத்தில் 10 வயதில் பேரன் பேத்தி எடுத்துவிடுவார்கள் என அறிவித்துள்ளது.இந்தத் தகவலின் முன்னோட்டமே மேலே சொன்ன செய்தியின் முன்னோட்டம்.
ஏற்கனவே, நமது நாட்டில் நாம் கேட்காமலேயே இண்டர் நெட்,கேமிரா செல்போன்கள்,செல்போன்கள்,ஆன் லைன் டிரேடிங் எனப்படும் இணைய வழியிலான பங்குவர்த்தகம், முன்பேர வர்த்தகம் எனப்படும் ஃப்யூச்சர் ட்ரேடிங், எம்.எல்.எம்.,மரபணு மாற்றப்பட்ட கத்தரிக்காய்,சிறிதும் சிந்திக்காமல் தடுக்கும் கேபிள் சேனல்கள், துரித உணவுகள் எனப்படும் ஃபாஸ்ட் புட் என கண்ட குப்பைகளுக்கும் அடிமையாகிவிட்டோம்.இவையெல்லாம் பணக்காரர்களை மேலும் பணக்காரர்களாக்கும் நரித்தனமான திட்டங்கள்,
No comments:
Post a Comment