Monday, February 22, 2010

திருஅண்ணாமலை கிரிவலத்தின் மகிமைகள்

திருவாதிரை மண்டலமும் அண்ணாமலையும்

ஒருவர் திருஅண்ணாமலைக்கு வருவதும்,அவர் கிரிவலம் செல்வது அவரால் முடிவு செய்யப்படுவதில்லையாம்;பல நூற்றாண்டுகளுக்கு முன்பே அவரது அல்லது அவளது முன்னோர்கள் மற்றும் பித்ருக்களால் பித்ரு உலகங்களில் நிர்ணயிக்கப்பட்டுவிடுகிறது.ஒவ்வொருவரின் அண்ணாமலை எனப்படும் அருணாச்சல யாத்திரையும் விண்ணுலக அருணாச்சல திருவாதிரையில்தான் திட்டமிட்டு முடிவாகிறது.

திருவாதிரை என்பது நட்சத்திரம் என்றுமட்டுமே நாம் அறிந்திருக்கிறோம்.அருணாச்சல திருவாதிரை என்பது ஒவ்வொரு விநாடியும் அண்ணாமலையில் நிகழ்வதை விவரித்துக்காட்டும் நட்சத்திர மண்டலமாகும்.திரு அண்ணாமலையில் கிரிவலம் சென்றவர்கள்,செல்லுபவர்கள்,இனிமேல் செல்ல இருப்பவர்களின் கிரிவலப்பயணத்தை விநாடிதோறும் திரைப்படம்போல் விவரிப்பதே அருணாச்சல திருவாதிரை ஆகும்.
ஒருவர் கிரிவலம் நிறைவடைந்ததும் “அருணாச்சல திருவாதிரை மங்களம்” என்ற விஷேசமான மங்களத்துதியை ஓதி மூலவரின் வாசலுக்கு நேரில் நெடுஞ்சாண்கிடையாகத்தரையில் வீழ்ந்து வணங்குவர்.

இதுதவிர, திருவாதிரை நட்சத்திரம் நின்ற நாட்கள் அல்லது நாளன்று கிரிவலம் செல்லுவது,கிரிவலப் பயணத்தின் போது செய்யும் தர்மங்களுக்கு பல கோடி மடங்கு பலன் உண்டு என்பது சிவனாகிய அண்ணாமலை ரகசியமே!

ஒருவர் ஒரே ஒரு முறை திரு அண்ணாமலையில் குருபக்தியுடன்,மனப்பூர்வமாக கிரிவலம் சென்றால் அவருடன் நிறைவுபெறும் 64 தலைமுறையினருக்கு அதன் புண்ணியப்பலன்கள் சென்றடையும் என்பது அருணாச்சலரின் வாக்கு.

திருஅண்ணாமலையில் கிரிவலம் பவுர்ணமி,அமாவாசை நாட்களில் லட்சக்கணக்கானவர்கள் செல்லுகிறார்கள்.அப்போதுதான் கிரிவலம் செல்லவேண்டும் என்ற கட்டாயம் கிடையாது.அந்த நாட்களில் கிரிவலம் செல்லும்போது நம்மோடு சூட்சுமமாக (ரகசியமாக) பல சித்தர்களும் கிரிவலம் செல்லுகிறார்கள்.அதனால்,அந்த சித்தர்களில் ஒருவர் அல்லது சிலரின் அருட்பார்வை நம்மீது படுவதற்கு வாய்ப்பு உண்டு.
கூட்ட நெரிசலை வெறுப்பவர்கள்,ஒரு தியானமாக,ஒரு தவமாக கிரிவலம் செல்ல விரும்பும் அன்பர்கள் எந்த நாளிலும்,எந்த நட்சத்திரத்திலும்,எந்தக் கிழமையிலும் கிரிவலம் செல்லலாம்.அப்படிச்சென்றாலும் கிரிவலம் சென்ற புண்ணியம் நமக்கும் நமது முந்தைய 64 தலைமுறை முன்னோர்களுக்கும் கிடைக்கும்.மூன்று கோடி தடவை திருக்கார்த்திகை தீபத்திருநாட்களில் மட்டும் கிரிவலம் சென்ற சித்தர்கள் இருக்கிறார்கள்.நாமெல்லாம் எம்மாத்திரம்?
நன்றி:அகஸ்திய விஜயம்,டிசம்பர் 2009

1 comment:

  1. அய்யா திருவண்ணாமலை கிரிவலம் சம்பந்தமாக ஒரு சந்தேகம் , தயவுசெய்து விளக்குங்கள் .
    நான் சமீபத்தில் மாத சிவன்றாத்ரி அன்று (கார்த்திகை மாத தேய்பிறை சிவன்றாத்ரி அன்று குபேரன் இங்கு வந்து குபேர லிங்கத்தை வணங்கி க்ரிர்வலம் வருவதாகவும் அன்று நாமும் கிரிவலம் வந்தால் நல்ல பலன்கள் கிடைக்கும் சிவன் அருளும் குபேரன் அருளும் கிடைக்கும் என்று ஒரு நண்பர் மூலம் அறிந்து) சென்று கிரிவலம் வந்து குபேர லிங்கத்தையும் அண்ணாமலயரையும் வழிபட்டு வந்தோம். இதுவே எனது முதல் கிரிவலம். எனது சந்தேகம் - கிரிவலம் செல்லும் போது காலணிகள் (செருப்பு) அணிந்து செல்லலாமா?, ஏன் கேட்கிறேன் என்றால் வரும் வழியில் இரண்டு மூன்று கி மீ தூரம் பஜஜார் பகுதி அக உள்ளது அந்த வழியில் மிகுந்த அசுத்தமாக உள்ளது பலர் எச்சில் துப்பி அசுத்தம், அதன் மீது தான் நடக்கும் படி உள்ளது, எனவே தான் சந்தேகம்? அந்த காலத்தில் மலைபாதையாக சுத்தமாக இருந்திருக்கலாம் , தற்சமயம் கடை வீதி யாகவும் & பஸ் ஸ்டான்ட் அகவும் இருப்பதால் அசுத்தம், தயவு செய்து என் சந்தேகம் விளக்கவும். நன்றி அய்யா .
    sakthi ganesh - chennai.

    ReplyDelete