ராகு காலம், எமகண்டம்:
ராகு காலத்தில் நல்ல காரியங்கள் தொடங்கக்கூடாது. எமகண்டத்தில் கெட்டகாரியங்கள் செய்யக்கூடாது. என்பது ஜோதிட சாஸ்திர விதி!
ராகு காலத்தில் இறை வழிபாடு, தங்க நகை வாங்குதல்,பட்டு ஆடைகள் வாங்குதல்,திருமணம் அல்லது வீடு வாங்கிட பேச்சை ஆரம்பித்தல், சொத்துக்கள் வாங்குதல்,புதிய நிறுவனம் ஆரம்பித்தல் கூடாது.இதை மீறிச்செய்தால் அந்த காரியங்கள் வெற்றி பெறாது.
ஏனெனில்,ஜோதிடப்படி நவக்கிரகங்களுக்கு தலா ஒரு நாள் ஒதுக்கப்பட்டுள்ளன.அவையே ஞாயிறு,திங்கள்,செவ்வாய்,புதன்,வியாழன்,வெள்ளி,சனி.ஆனால்,ராகு கேதுக்களுக்கு என தனிக்கிழமைகள் ஒதுக்கப்படவில்லை.
இவற்றில் ஒரு நாளில் ஒன்றரை மணி நேரத்தை ராகு பகவான் ஆளுகிறார்.
மேலே சொன்னவை எல்லா மனிதர்களுக்கும் பொருந்தும்.ஒரே ஒரு விதிவிலக்கு என்ன வெனில்,ராகு திசை நடக்கும் ஜாதகர்களுக்கும்,திருவாதிரை,சுவாதி, சதயம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கும் மேலே சொன்ன விதிகள் பொருந்தாது.
இவர்கள் ராகு காலத்தில் சுப காரியங்கள் செய்யலாம்.காதலிக்கத் தொடங்க(!?!), திருமணப்பேச்சு எடுக்க, சொத்துக்கள் வாங்கிட, புதிய நிறுவனங்கள் வாங்கிட,பங்குச் சந்தையில் முதலீடு செய்ய,மியூச்சுவல் பண்டில் முதலீடு செய்ய, பட்டு ஆடைகள்,செல்போன்,வாகனங்கள் என எதையும் வாங்கிட மிக நன்று.
எமகண்டத்தில் கெட்டது செய்யக்கூடாது.அதென்ன கெட்டது. . . நமக்குப்பிடிக்காத நமது சக ஊழியரைப்பற்றி இன்னொரு ஊழியரிடம் போட்டுக்கொடுப்பது,மேலதிகாரியிடம் போட்டுக்கொடுப்பது,
அப்புறம் இங்கு அச்சில் ஏற்ற முடியாத சகல கெட்ட காரியங்களையும் செய்ய ஆரம்பிக்கக்கூடாது.
No comments:
Post a Comment