இந்தியா-சீனா இடையே போர் ஏற்படும் வாய்ப்பு உள்ளதா?
ஜோதிட ரத்னா முனைவர் க.ப.வித்யாதரன்:
புதன், 20 ஜனவரி 2010( 17:56 IST )
இந்தியா, சீனா இடையே சமீபகாலமாக உரசல்கள் அதிகரித்து வருகிறது. உதாரணமாக அருணாச்சலப் பிரதேசத்தில் சீனா ஆக்கிரமிப்பு செயல்களை நடத்தியது, பிரதமரின் அருணாச்சலப் பயணத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்தது, ஜம்முவில் இருந்து சீனாவுக்கு விமானப் பயணம் செல்லும் இந்தியர்களுக்கு முறையான விசா வழங்காமல் வெற்றுக் காகிதத்தில் விசா அளிப்பது என்று விவகாரங்கள் தொடர்கிறது. இந்த நிலை படிப்படியாக உயர்ந்து போரில் முடிவடையும் சாத்தியம் உள்ளதா? ஜோதிட ரீதியாக இதற்கு விளக்கம் தாருங்கள்?
பதில்: இந்தியா கடக ராசி, ரிஷப லக்னம் என்பதால் அதன் ஜாதக நிலை தற்போது நன்றாக இருக்கிறது. மே மாதம் முதல் குருவும் சாதமாகி விடுவார் என்பதால், தசா புக்திகளும் நல்ல பலன்களைக் கொடுக்கும்.
அதே நேரத்தில் 2011 டிசம்பர் 21 முதல் இந்தியாவுக்கு 4ஆம் வீட்டில் சனி வருவதால், புத்த மத நாடுகளாலும், இஸ்லாமிய நாடுகளாலும் இந்தியா பாதிக்கப்படுவதற்கு வாய்ப்புகள் உள்ளது. இனக் கலவரம், மதக் கலவரம் அதிகரிக்கும்.
நடப்பாண்டில் ஜூலை, ஆகஸ்ட், செப்டம்பரில் அண்டை நாடுகளுடனான இந்தியாவின் உறவில் பாதிப்பு ஏற்படும். சர்வதேச அரங்கில் இருந்து சிறிது சிறிதாக இந்தியா தனிமைப்படுத்தப்படுவதற்கும் சாத்தியங்கள் உள்ளன. அதனைத் தவிர்க்க இந்தியாவும் பெரிய விலையைக் கொடுக்க முன்வரும்.
ஜூலை, ஆகஸ்ட், செப்டம்பரில் இந்தியாவின் மீது போர் திணிக்கப்படுவதற்கான வேலைகள் நடைபெறலாம். ஆனால் இந்தியா போரை ஏற்காது. இதேபோல் ஜம்மு-காஷ்மீர் விவகாரமும் (சுயாட்சி) விஸ்வரூபம் எடுக்கும்.
தற்போது கடக ராசியில் உள்ள செவ்வாய், மே 27ஆம் தேதி வரை அங்கேயே இருப்பார். இதன் காரணமாக தனி மாநிலம் கோரும் குரல்கள் உயர்கின்றன. எல்லைகளிலும் பதற்றம் நிலவுகிறது. ஜோதிட ரீதியாகக் கூறவேண்டுமானால் இந்தியாவின் எல்லைப் பகுதிகளில்தான் ஆபத்துகள் அதிகம் உள்ளது.
தற்போது செவ்வாய் நீச்சம் பெற்றதால் அண்டை நாடுகளான சீனா, பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம் ஆகியவை நட்புறவுடன் இல்லை. சில வேற்று நாட்டுத் தலைவர்கள் இந்தியா எதற்கும் லாயக்கற்ற நாடு என்ற ரீதியிலான கருத்துகளைக் கூட வெளியிடுவார்கள்.
No comments:
Post a Comment