சீனா: குழந்தை பெற்ற 9 வயது சிறுமி
பீஜிங் , சனி, 30 ஜனவரி 2010( 18:00 IST )
சீனாவில் 9 வயது சிறுமி ஒருத்தி ஆரோக்கியமான குழந்தையை பெற்றெடுத்துள்ளாள்.
சீனாவின் ஜிலின் மாகாணத்தைச் சேர்ந்த சாங்சுன் என்ற இடத்தில் உள்ள மருத்துவமனையில், சிசேரியன் மூலம் அந்த சிறுமிக்கு குழந்தை பிறந்துள்ளது.
சீன சட்டப்படி 14 வயதுக்கு குறைவான பெண்ணுடன் பாலியல் உறவு வைத்தால் அது பாலியல் பலாத்கார குற்றமாகும்.இந்நிலையில் அந்த சிறுமியின் பெற்றோர் இது தொடர்பாக சட்ட உதவியை நாடியுள்ளதாக சாங்சுனிலிருந்து வெளியாகும் ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
இருப்பினும் அந்த சிறுமியின் கர்ப்பத்திற்கு யார் காரணம் என்பது குறித்தோ அல்லது அந்த் சிறுமி யார் என்பது குறித்தோ விவரம் எதுவும் வெளியிடப்படவில்லை.
இந்நிலையில் ஷாங்காய் மருத்துவமனை ஒன்று வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில், கருக்கலைப்பு செய்து இளம்பெண்களில் 30 % பள்ளி மாணவிகள் என்றும், இவர்களில் பாதிபேர் தொழிற் பயிற்சி பள்ளிகளிலும், மீதமுள்ளோர் கல்லூரிகளிலும் பயில்பவர்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் பள்ளி மற்றும் கல்லூரி விடுமுறை முடிந்தவுடனேயே இவ்வாறு கர்ப்பம் தரிக்கும் இளம்பெண்கள் அதிக அளவில் மருத்துவமனைக்கு வருவதாகவும், இதில் மூன்றில் ஒரு பகுதியினர் கர்ப்பம் உண்டாகி இடைநிலையிலோ அல்லது குழந்தை பிறக்கும் தருவாயிலோ வருவதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியா அல்லது சீனாவில் இதுவரை 9 வயது சிறுமி குழந்தை பெற்றதாக தகவல் இல்லை.11 வயது சிறுமி குழந்தை பெற்றதாகத்தான் தகவல் உள்ளது. நன்றி:தமிழ் வெப்துனியா 30.1.2010 நான் கேள்விப்பட்ட இந்துபுராணத்தகவல் என்னவெனில்,கலியுகத்தின் முடிவில் 10 வயதில் பேரன் பேத்தி பெற்றுக்கொள்ளுமளவிற்கு ஒழுங்கீனம் தலைவிரித்தாடும்.இந்த நிலையை நோக்கி பூமியுலக மக்களாகிய நாம் போய்க்கொண்டிருக்கிறோம் என்பதற்கு இந்த தகவல் ஒரு ஆதாரம் .இது மட்டுமா? கலிகாலத்தில் காமசுகத்துக்காக மட்டுமே திருமணம் நடக்கும்.அளவற்ற காமம்,எக்கச்சக்கமான பணம்,வரைமுறையற்ற அதிகாரம் இந்த மூன்றையும் அடைவதற்கே ஒவ்வொரு மனிதனும் விரும்புவான்.அப்படி எவன் அல்லது எவளாவது விரும்பாமல் இருந்தாலும்,மற்றவர்கள் மேற்கூறிய மூன்றில் ஏதாவது ஒன்றை மட்டும் கையில் வைத்துக்கொண்டு ஆடும் அகங்காரமான ஆட்டத்தால் அளவின்றி பாதிக்கப்படுவர்.அதன் முடிவாக,அவர்களும் அளவற்ற காமம்,ஏராளமான பணம்,வரைமுறையற்ற அதிகாரம் இவற்றில் ஏதாவது ஒன்றை தனது கட்டுப்பாட்டில் கொண்டுவரவே ஒவ்வொரு ஆண் மற்றும் பெண்ணின் வாழ்நாள் செலவழியும். இப்போதே இதுதான் நம்மைச்சுற்றிலும் உள்ள உலகத்தில் நடக்கிறது என்கிறீர்களா?
No comments:
Post a Comment