ஆன்மீகக்கடல் ஆசிரியர் கை.வீரமுனி சுவாமிகள். .யின் அதிகாரபூர்வ வலைப்பூ இந்த மஹாவில்வம்;உங்களின் வாழ்க்கைச் சிக்கல்கள் தீர,ஜோதிட ரீதியாக ஆலோசனைகள் பெறவும், ஆன்மீகத் தேடல் உள்ளவர்கள் முறையான வழிகாட்டுதல் பெறவும் தொடர்பு கொள்க: வாட்ஸ் அப் எண்:+91 9092116990 செல் எண்:9629439499(இருப்பு:ஸ்ரீவில்லிபுத்தூர்=விருதுநகர் மாவட்டம்) மாதம் ஒருமுறை சென்னை,கோவையில் சந்திக்கலாம்!!!
Saturday, January 30, 2010
துவாதசி திதியன்று அண்ணாமலையில் அன்னதானம் செய்யுங்கள்;நிம்மதியாக வாழ்க வளமுடன்!!!
அண்ணாமலையில் அன்னதானம் செய்யுங்கள்;நிம்மதியாக வாழுங்கள்
சாதாரண கோயில்களில் ஒரு வருடம் தொடர்ந்து செய்யப்படும் அன்னதானத்தால்
என்ன புண்ணியம் கிடைக்குமோ, அதை விட அதிகமான புண்ணியம் காசியில்
ஒரே ஒரு நாள் ஏழை ஒருவனுக்கு அன்னதானம் செய்தால் கிடைத்துவிடும்.
காசியில் ஒரு ஆண்டு முழுக்க செய்யப்படும் அன்னதானம் தரும் புண்ணியத்தை
விட அதிக புண்ணியம் திரு அண்ணாமலையில் ஒரே ஒரு சாதாரண நாளில் அன்னதானம் செய்தால் கிடைத்துவிடும்.
திருஅண்ணாமலையில் துவாதசி திதியன்று ஏழை ஒருவருக்கு செய்யப்படும்
அன்னதானமானது, அன்னதானம் செய்தவரின் வாழ்நாள் முழுக்க அன்னதானம்
செய்த பலனைத் தரும் என்பது அண்ணாமலையாரின் வாக்கு.ஆதாரம்:
அருணாச்சல புராணம்.
சரி அதையும் செய்து பார்த்து நிம்மதியாக வாழ்வோம் என பஞ்சாங்கத்தைப் பார்த்தால், ஒரு தமிழ் மாதத்தில் இரண்டு முறை துவாதசி திதி வருகிறது.வளர்
பிறை துவாதசி மற்றும் தேய்பிறை துவாதசி என இருமுறை வருகிறது.
ஜோதிடம் பற்றி அடிப்படை அறிந்தவர்களால் மட்டுமே இதைக் கண்டறிய
முடியும்.அந்த சிரமம் நமது ஆன்மீகக்கடல் வாசகர்களுக்கு இருக்க வேண்டாமே
என விக்ருதி தமிழ் வருடத்தில் (14.4.2010 முதல் 13.4.2011 வரை) வரும்
துவாதசி திதி நாட்களை இங்கு அட்டவணையிட்டுள்ளோம்.
கடன் அல்லது நோய் அல்லது எதிரி அல்லது வறுமை அல்லது முன்வினை
இவற்றில் ஏதாவது ஒன்றால் நாம் அல்லது நம்மைச் சார்ந்தவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது உண்மை!
இந்த வலைப்பூவை வாசிக்கும் அனைவரும் பின்வரும் நாட்களில் ஏதாவது ஒரு நாளில் ஒரே ஒரு முறை
திரு அண்ணாமலைக்கு வந்து அன்னதானம் செய்து உங்களின் கஷ்டங்கள்,
முன்வினைகளை நீக்கி நிம்மதியாகவும்,செல்வச் செழிப்புடனும் வாழ்க வளமுடன்!!!
25.4.2010 ஞாயிறு இரவு 11.39 முதல் 26.4.2010 திங்கள் இரவு 9.40 வரை
10.5.2010 திங்கள் காலை 6.00 முதல் 11.5.2010 செவ்வாய்காலை 6.43 வரை
25.5.2010 செவ்வாய்காலை8.25 முதல் 26.5.2010 புதன் காலை 6.59 வரை
9.6.2010 புதன் இரவு மணி7.44 முதல் 10.6.2010 வியாழன் இரவு 7.29 வரை
23.6.2010புதன் மாலைமணி5.53 முதல் 24.6.2010 வியாழன் மாலை 5.19 வரை
9.7.2010 வெள்ளிகாலைமணி6.29முதல் 10.7.2010 சனி விடிகாலை 4.52 வரை
22.7.2010 வியாழன் காலை 4.56 முதல்23.7.2010 வெள்ளி காலை 5.10 வரை
7.8.2010 சனி மதியம் 3.26 முதல் 8.8.2010 ஞாயிறு மதியம் 1.35 வரை
21.8.2010 சனி மாலை 5.49 முதல் 22.8.2010 ஞாயிறு இரவுமணி7.08 வரை
5.9.2010 ஞாயிறு இரவு 11.42முதல் 6.9.2010 திங்கள் இரவு 9.26 வரை
20.9.2010 திங்கள் காலை 9.11முதல் 21.9.2010 செவ்வாய் காலை 11.08 வரை
5.10.2010 செவ்வாய் காலை8.04 முதல் 6.10.2010 புதன் விடிகாலை 3.36 வரை
19.10.2010 செவ்வாய் நள்ளிரவு2.34 முதல் 21.10.2010 வியாழன் விடிகாலை 4.32 வரை
3.11.2010 புதன் மாலை மணி 5.09 முதல் 4.11.2010 வியாழன் மதியம் 2.57 வரை
18.11.2010 வியாழன் இரவு 8.48 முதல் 19.11.2010 வெள்ளி இரவு 10.12 வரை
3.12.2010 வெள்ளி விடிகாலை 3.33 முதல் 4.12.2010 சனி விடிகாலை 1.32 வரை
18.12.2010 சனி மதியம் 2.18 முதல் 19.12.2010 ஞாயிறு மதியம் 2.49 வரை
17.1.2011 திங்கள் காலை 6.09 முதல் 18.1.2011 செவ்வாய் காலை5.24 வரை
31.1.2011 திங்கள் விடிகாலை 5.38 முதல் 1.2.2011 செவ்வாய் காலை6.00 வரை
15.2.2011 செவ்வாய் இரவு 7.35 முதல் 16.2.2011 புதன் மாலை 6.06 வரை
1.3.2011 செவ்வாய் இரவு 9.40 முதல் 2.3.2011 புதன் இரவு 10.48வரை
17.3.2011 வியாழன் காலை 6.52 முதல் 18.3.2011 வெள்ளி விடிகாலை3.52வரை
31.3.2011 வியாழன் மதியம் 2.38 முதல் 1.4.2011 வெள்ளி மாலை 4.29 வரை
பின்குறிப்பு:இந்த வலைப்பூவை வாசிக்கும் யாராக இருந்தாலும்,எந்த மதத்தைச் சேர்ந்தவராக இருந்தாலும் திரு அண்ணாமலையில் இந்த நாட்களில் வரும் நேரத்தில் ஒரு முறை அன்னதானம் செய்தாலும் போதும்.நமக்கு மறுபிறவி
கிடையாது.
அன்னதானத்தைப் பொறுத்தவரையில் திரு அண்ணாமலைக்கு இதில் குறிப்பிடப்பட்டுள்ள நாளுக்கு முதல் நாளில் வந்து,சமைத்து அவற்றை பொட்டலங்களாக கட்டிவிடுவது நன்று.அப்படி கட்டப்பட்ட உணவுப்பொட்டலங்களை கிரிவலப்பாதையில் வசிக்கும் துறவிகளுக்கு வழங்கலாம்.
பெரிய அளவில் செய்ய முடியாதவர்கள்,சுமார் ரூ.1000/- கொண்டு வந்து இங்கு கோவிலைச் சுற்றியுள்ள உணவகங்களில் ரூ.1000க்கும் உணவுப்பொட்டலங்கள்
விலைக்கு வாங்கியும் அன்னதானம் செய்யலாம்.உணவுப்பொட்டலங்களின் விலைகள்
ரூ.10/-லிருந்து துவங்குகின்றன.
நான் கேள்விப்பட்ட வரையில் நாட்டுக்கோட்டைச் செட்டியார் சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் நித்திய அன்னதான மடங்களை கிரிவலப்பாதையில் நிறுவியுள்ளனர்.
தவிர,பல இனத்தைச் சேர்ந்தவர்களும் அன்னதான சாலைகளை நிறுவியுள்ளனர்.
நம்மிடம்,உணவுப்பொட்டலத்தைப் பெறும் துறவிகளில் சில போலிகளும் இருப்பது நிஜம்.அவர்கள் நம்மிடம் வாங்கிய உணவுப்பொட்டலத்தை விற்கும் பழக்கமும்
இருக்கிறது.அது நம்மை எந்த விதத்திலும் பாதிக்காது.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment