Friday, January 1, 2010

இந்து தர்மத்தின் எழுச்சி துவங்கும் நாள்

கி.பி.2010:இந்துதர்மத்தின் எழுச்சிநூற்றாண்டுக்கான துவக்கம்

எழுதப்படாத வரலாற்றுக்கு முன்பிருந்து இந்த பூமி முழுவதும் இந்துதர்மம் எனப்படும் சனாதன தர்மம் பரவியிருந்தது.
2000 ஆண்டுகளுக்கு முன்பு அரபுப்பாலைவனத்தில் பிறந்த கிருஸ்தவம் அன்புப்பிரவாகமாகத்தான் இருந்தது.எப்போது அது மிஷனரியாக உருவெடுத்ததோ அப்போதே அங்கே அன்பு கடைச்சரக்காகிப்போனது.ஏசு நாதரின் ஆரம்பகால ரகசியங்கள் (அவர் இந்தியாவில் ஜோதிடம்,யோகா,சித்துக்கலைகள் கற்றது) ஆதாரபூர்வமாக நிரூபிக்கப்படும்.

1400 வருடங்களுக்கு முன்பாக அரபுப்பாலைநிலத்தில் முகமது நபி அவர்களால் உருவாக்கப்பட்ட மதம் இஸ்லாம்.இந்த இஸ்லாத்தை நாத்திகத்திற்கு எதிராகப்போராட வைத்தது கத்தோலிக்க அமெரிக்கா.நாத்திகம்(ருஷ்யா) சிதைந்தது.

இன்று இஸ்லாமுக்கும் கிருஸ்தவத்துக்கும் கடும்போட்டி! யார் இந்த பூமியை ஆள்வது என்று?விளைவு? உலகம் முழுவதும் போர்,இனப்படுகொலைகள்,அரசியல் யுத்தங்கள்,எல்லைத்தகராறுகள். . .

அதே சமயம்,மெளனமாக ஆனால் விஞ்ஞானபூர்வமான விளக்கங்களுடன் நமது இந்துதர்மம் மெல்ல மெல்ல அமெரிக்கக்கண்டங்கள்,ஐரோப்பாக்கண்டம்,ஆப்ரிக்கக் கண்டம்,ஆசியக்கண்டம் என உலக நாடுகள் பலவற்றில் மீண்டும் தனது அன்பான கரங்களால் அனைவருக்கும் நிம்மதியையும்,மன மகிழ்ச்சியையும்,பரிபூரணமான ஆரோக்கியத்தையும் தரத்துவங்கியுள்ளது.
இதற்கான ஆதாரங்களே நமது ஆன்மீகக்கடல் வலைப்பூ!!!
புதிய கிருஸ்தவ வருடம் 2010 இன்று பிறந்தே விட்டது.இப்போது சதுரகிரியில் சித்தர்களின் மாநாடு நடைபெற்றுவருகிறது.இம்மாநாட்டின் முடிவில்,இந்தியாவை சித்தர் ஆசிபெற்ற ஒரு மாவீரன் ஆளத்துவங்குவார்.
இந்தியாவின் அனைத்துக்கோவில்களின் குளங்களிலும் நறுமணம் கமழத்துவங்கும்.இதுவே நமது நாட்டில் சித்தர்களின் ஆட்சி துவங்குவதற்கான ஆதாரம்.
நமது நாட்டைத்தலைமையகமாகக் கொண்டு,சித்தர்கள் இந்த பூமியை ஆளத்துவங்குவர்.இதனால்,இந்துதர்மத்தின் கருத்துக்கள் ஆழிப்பேரலையாக உலகம் முழுக்கப்பரவத்துவங்கும்.சுமார் 300 ஆண்டுகளில் இந்த பூமி மீண்டும் இந்து பூமியாக மலரும்.

இஸ்லாம்,கிருஸ்தவ,சீக்கிய,ஜைன,புத்த,கன்பூஷியஸ் மற்றும் சிறு அளவிலான அனைத்து மதங்களும் இந்துதர்மத்தின் மேலாண்மையை ஏற்றுக்கொள்ளும் நிலை உருவாகும்.(அவர்கள் செய்த மதரீதியான ஆக்ரோஷமான தவறுகளை உணரத்துவங்குவர்)

இதுவரை கம்யூட்டர் ஸயின்ஸ்,பயோ டெக்,பயோ இன்பர்மேடிக்ஸ் போன்றவை படிப்பது உலக நாடுகளில் பெருமையாகக் கருதப்பட்டுவருகிறது.
இன்றுமுதல்,இந்துவியல் எனப்படும் indology,இந்து ஜோதிடம்,இந்து ஆயுர்வேதம்,இந்து யோகக்கலை,இந்து மரபுகள்,இந்துவேதம் படித்தல்,சமஸ்க்ருதம் பேசுதல் போன்றவைகளுக்கு உலகளவில் பெரும் மரியாதை வரப்போகிறது.இந்தியாவில் வசிப்பது பெருமை என உலக நாட்டுமக்கள் நினைக்கும் காலம் இன்று முதல் துவங்குகிறது.நம்ப முடியவில்லையா?

கி.பி.2100க்குள் இந்தியாவின் அனைத்து கோவில்களிலும் வெள்ளைக்காரர்கள் பூசாரிகளாக இருப்பார்கள்.
இந்தியாவைத்தவிர, உலக நாடுகள் அனைத்தும் ஒருவனுக்கு ஒருத்தி என்ற கொள்கையை தனது தேசிய கவுரவமாக அறிவிக்கும்;பின்பற்றும்;பரப்பும்.

அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்கு எதிர்பாராத மதத்தின் தலைவர்கள் பகிரங்க ஆதரவு தருவார்கள்.அமெரிக்காவுக்கு இது மாபெரும் அதிர்ச்சியாக இருக்கும்.ஆர்.எஸ்.எஸ்.ஸில் சேரும் இஸ்லாமியர்களின் எண்ணிக்கை பல மடங்கு பெருகும்.

நாம் நமது இந்துதர்மத்தைப்பற்றி நமது உறவுகளுக்கு விவரித்தால் போதுமானது.

அதேசமயம்,பெரும் அழிவுகள் காத்திருக்கின்றன.இப்போதே எய்ட்ஸ்ஸால் மரணமடையும் எண்ணிக்கை தமிழ்நாட்டில் மட்டும் ஒவ்வொரு ஊரிலும் சில ஆயிரங்களைத் தொடத்துவங்கியுள்ளன.
தென் இந்திய மாநிலங்களில் ஒவ்வொரு குடும்பமும் மாதம் ரூ.50,000/-சம்பாதிப்பது சகஜமாகப்போகிறது.வடமாநிலங்களில் மேல்நிலைப்பள்ளிகள் கி.பி.2020 வாக்கில் பரவலாகத்துவங்கும்.
இந்தியாவில் அரசியல்பதவிகளில் இருந்துகொண்டு அமெரிக்க டாலரின் வீழ்ச்சியைத் தடுத்துக்கொண்டிருக்கும் அமெரிக்க அடிவருடிகள் மோசமான முடிவுகளை சந்திப்பார்கள்.அமெரிக்கா மிகப்பெரிய பொருளாதார வீழ்ச்சியை சந்திக்கும்.
சீனா அடிக்கடி பொருளாதார சறுக்கலை சந்திக்கும்.இந்தியப் பொருளாதாரம் மட்டுமே இந்திய யானையைப் போல மெதுவாக ஆனால் வலுவாக முன்னேறும்.பெண்கள் வீடு புகுந்து ஆண்களைக் கற்பழிப்பார்கள்.தமிழ்நாட்டில் இது ஆரம்பமாகும்.போலியான கற்பழிப்புவழக்குகள் காவல் நிலையங்களில் அதிகரிக்கும்.

மனித தர்மம்,பாசம்,அன்பு ,நேசம் ,நேர்மை என இருப்பவர்களுக்கு செல்வ வளம் மிக்க வாழ்க்கை ஆரம்பமாகின்றது.
பிராடு,பித்தலாட்டம்,ஏமாற்றுதல்,போலியான பாசம்,போலியான மக்கள்நலனில் இருக்கும் அரசியல்வாதிகள்,பொதுமக்கள்,தனி நபர்கள், நிறுவனங்கள் மீள முடியாத சிக்கல்களை சந்திப்பர்.

நம்ப முடியவில்லையா? எவனோ லூசு நல்ல கற்பனை வளத்துடன் எழுதியிருக்கிறான் என நினைக்கிறீர்களா?1.1.2011 அன்று இதைச் சொல்லுங்கள்.நான் லூசு என்பதை ஏற்றுக்கொள்ளுகிறேன்.

1 comment: