ஆன்மீகக்கடல் ஆசிரியர் கை.வீரமுனி சுவாமிகள். .யின் அதிகாரபூர்வ வலைப்பூ இந்த மஹாவில்வம்;உங்களின் வாழ்க்கைச் சிக்கல்கள் தீர,ஜோதிட ரீதியாக ஆலோசனைகள் பெறவும், ஆன்மீகத் தேடல் உள்ளவர்கள் முறையான வழிகாட்டுதல் பெறவும் தொடர்பு கொள்க: வாட்ஸ் அப் எண்:+91 9092116990 செல் எண்:9629439499(இருப்பு:ஸ்ரீவில்லிபுத்தூர்=விருதுநகர் மாவட்டம்) மாதம் ஒருமுறை சென்னை,கோவையில் சந்திக்கலாம்!!!
Friday, January 8, 2010
இன்னொரு அடிமை சாசனம் எழுதிய மன்மோகன் அரசு
அணு எரிசக்தி பாதிப்பு சட்ட வரைவு: ஒரு தேசிய அவமானம்
ஹோபன்ஹேகன் புவி வெப்ப உச்சி மாநாட்டுக்குச் செல்லும் முன் இந்தியாவிற்கு அவமானம் தரும் ஒரு சட்டத்தை அவசரமாக மத்திய மந்திரி சபையை அங்கீகரிக்க வைத்துச்சென்றிருக்கிறார் நமது பிரதமர்.
கூனியூருக்குச் செல்வதற்கு இந்தியாவிலிருந்தே கூனிக்குறுகிச் சென்றிருக்கிறார் நமது பிரதமர்.
அணு ஆயுதச்சட்டம் 1962 இல் திருத்தம் செய்து அவர் முன்வைத்த சட்டம் நியூக்ளியர் லயபளிட்டிச் சட்டம்.
என்னதான் அந்த சட்டம்?
அமெரிக்க மின்னணு உற்பத்திக் கம்பெனிகள் இந்தியாவில் வந்து கடைவிரித்தால், அவர்களது அணு உலைகளில் கசிவு ஏற்பட்டு லட்சக்கணக்கில் மக்கள் இறந்துபோனால் அந்த கம்பெனிகள் 450 மில்லியன் டாலர்(2500 கோடி ரூபாய்கள்)நஷ்ட ஈடு கொடுத்தால் போதும்.மீதியை மத்திய அரசு வழங்கும் என்பதுதான் அந்த சட்டம்.(இந்தியா எப்போது அமெரிக்காவின் 53 வது மாநிலமாக மாறியது என தெரியவில்லை;)
(அமெரிக்காவின் 51 வது மாநிலம் துபாய், 52 வது மாநிலம் பாகிஸ்தான்)
4.12.1984 ஆம் நாளன்று அமெரிக்காவின் யூனியன் கார்பைடு கம்பெனியின் இந்தியக்கிளையான போபால் யூனிட்டில் அணுவிஷவாயுக்கசிவு ஏற்பட்டு உடனடியாக இறந்தவர்களின் எண்ணிக்கை 3,000. தொடர்ந்து நாளாவட்டத்தில் இறந்தவர்களின் எண்ணிக்கை 15,000.உடல் ஊனமுற்றோர்களின் எண்ணிக்கை 50,000.இன்னமும் அங்கே உடல் ஊனமுற்ற குழந்தைகளின் பிறப்பு தொடர்கிறது.
1984 ஆம் ஆண்டு போபாலில் நடந்த விபத்துக்கு நஷ்ட ஈடாக 470 மில்லியன் டாலர் வழங்கப்பட்டதாக பேச்சு உண்டு.ஆனால் அது இன்னும் மக்களுக்குப்போய்ச் சேரவில்லை.25 ஆண்டுகளுக்குப்பிறகு, அதைவிட குறைவாக ஒரு தொகையை நிர்ணயம் செய்து சட்டம் இயற்றுகிறது மத்திய அரசு. சரி! டாலரின் பரிவர்த்தனை விலை இப்போது போல எப்போதும் இருக்கப்போகிறதா என்ன? அது பற்றியும் சிந்தனை இல்லை.
இந்தச் சட்டமே ஜெனரல் எலட்ரிக்,அவெவா, வெஸ்டிங் ஹவுஸ், ரோசட்டோம் கார்பரேஷன் போன்ற அமெரிக்க கம்பெனிகளுக்காகத்தான் இயற்றப்படுகிறது.இவை அமெரிக்க அரசின் கம்பெனிகள் அல்ல.அமெரிக்க பகாசுர தனியார் நிறுவனங்கள்!!!
எனவேதான் அணு உலை என்ற பெயரில் இந்திய மக்களுக்கே உலை வைக்கும் இந்தச்சட்டம் வாபஸ் வாங்கப்பட வேண்டும்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment