Thursday, January 28, 2010

குருகுலத் தென்றல் மாத இதழில் இருந்து

குருகுலத் தென்றல் மாத இதழில் இருந்து சில துளிகள்

1.பாரத நாட்டின் (நமது இந்தியாவின் நிஜப்பெயர்) உயிர் ஆதாரங்களாக
பசு,பெண்,விவசாயம்,ஆலயங்கள் இருந்தன.நம் நாடு ஆங்கிலேயரின்
ஆதிக்கம் அடையும்வரை இவை போற்றப்பட்டன.இதனால்,கடந்த
25,000 ஆண்டுகளாக உலகின் ஒரே வல்லரசாக இருந்தது.
நயவஞ்சகம் பிடித்த கிறிஸ்தவ ஆங்கிலேயன் இவற்றை சிதைக்கும்
விதமாக நமது பாடத்திட்டம்,கல்விக்கொள்கை,அரசு செயல்பாடு,
அரசியலை உருவாக்கினான்.அதன் விளைவுகளை நாம் இன்றும்
அனுபவிக்கிறோம்.

2.புராதனப் பொருளாதாரம் (கி.பி.1890 வரை) நமது நாட்டில் பசுவை
மையப்படுத்திக்கொண்டு இயங்கியது.விவசாயம் செல்வத்தை அள்ளித்
தரும் தொழிலாக இருந்தது.நமது நாட்டில் பிச்சைக்காரர்கள் என்ற
வர்க்கமே இல்லாமல் இருந்தது.(மகான்கள்,துறவிகள் பிச்சையெடுத்ததற்குக்
காரணம் : மாபெரும் செல்வச்செழிப்பான காலத்திலும் தானம் செய்யும்
குணம் இருக்க வேண்டும் என்பதற்காக. . .)


நவீன (மேலைநாட்டு)பொருளாதாரம் தங்கத்தையும்(டாலரையும்) மையம்
கொண்டு உலகளவில் செயல்பட்டுவருகிறது.இதனால்,பணம் என்ற
பொருள் கண்டுபிடிக்கப்பட்டது.இதனால்,உணவுக்காக கொள்ளை,
கொலை,விபச்சாரம் என மனிதன் இயல்பாகவே திசை திருப்பப்படுகிறான்.

3.பத்தொன்பதாம் நூற்றாண்டுவரை இந்தியாவில் ஓட்டலே கிடையாது.உணவு,
தண்ணீர்,கல்வி இவற்றை விற்பனை செய்வது பெரும் பாவம் என்ற
இந்துதர்மம் வடக்கே காபூலில் இருந்து தெற்கே கண்டி(இன்றைய இலங்கை)
வரையிலும்,கிழக்கே ஈரான் முதல் மேற்கே தாய்லாந்து வரையிலும்
பரவி நடைமுறை வாழ்க்கையாக இருந்தது.
இன்றைய நவீன கம்யூட்டர் காலத்திலோ,இந்த மூன்றுமே பணம்
கோடிக்கணக்கில் கொட்டும் தொழிலாக கருதப்படுகிறது.இப்படிப்பட்ட
மாபெரும் தீங்கான மாற்றத்தைக் கொண்டு வந்த கிறிஸ்தவமும்
அதனைப் பின்பற்றிவரும் (நம்மை அடிமைப்படுத்திய) இங்கிலாந்தும்
நல்ல நாடாக இருக்குமா?

4.பெண் ஆனவள் தெய்வத்திற்குச் சமமாக நமது பாரத நாட்டில் போற்றப்
பட்டனர்.இந்தக்கொள்கை ஆசியா முழுக்கவும் தற்போதும் ஒரு
பண்பாடாகவே இருக்கிறது.
பாரத நாட்டில் பெண் இனத்தில் ரிஷிகள்,துறவிகள்,அரசிகள்,ஆசிரியர்கள்,
போர்க்கலை நிபுணர்கள்,உளவுத்துறை அதிகாரிகள்,பெண்களுக்கு
வாக்குரிமை என உயர்ந்த அந்தஸ்தில் போற்றப்பட்டனர்.
இதற்கு நேர்மாறான கொள்கையுடையது இஸ்லாம்.இந்தியாவில் இஸ்லாம்
ஊடுருவத்துவங்கியப்பின்னர்தான்,சமுதாய அமைதி கருதி பெண்களுக்கு
இருந்த சுதந்திர உரிமைகள் தற்காலிகமாக குறையத்துவங்கின.
இதற்குமாறாக,1700 களில் உலகிலேயே முதன்முதலில் படிக்கவும்,வாக்களிக்கவும்
இங்கிலாந்தில் பெண்களுக்கு உரிமை வழங்கப்பட்டன என வரலாற்றில்
படிக்கிறோம்.
கோயில்களை மையமாகக் கொண்டே குடியிருப்புக்கள் உருவாகின.பக்தியுமஅன்புமே சமுதாயத்தை வழிநடத்தின.இதனால்,வியாபாரத்தையும் அரசியலையும் நேர்மையே வழிநடத்தியது.
கோயில்களைக்கொண்டு உருவான குடியிருப்புக்கள் பிற்காலத்தில்
நகரங்களாக உருவெடுத்தன.மும்பாதேவியம்மன் கோவிலை மையமாகக்
கொண்டு மும்பை மாநகரமும், டாக்கீஸ்வரியம்மன் கோவிலை மையமாகக்
கொண்டு டாக்கா(இன்றைய பங்களாதேஷ் நாட்டின் தலைநகரம்)வும், காமாட்சியம்மனின் கோயிலை மையமாகக்கொண்டு காஞ்சிபுரமும்
உருவானது.
நன்றி:குருகுலத் தென்றல்,அறிவியல்பூர்வமாக இந்துமதத்தை ஆராயும் மாத இதழ்,
நவம்பர் 2005.பக்கம் 12.

No comments:

Post a Comment