வீரபாண்டிய கட்டபொம்மன் அவர்களைப்பற்றி இரு நல்ல செய்திகள்:
சுதந்திரப்போராட்ட காலத்தில், வீரபாண்டிய கட்டபொம்மன் ஆங்கிலேயர்களிடமிருந்து தப்பித்து புதுக்கோட்டை மாவட்டம்
பொன்னமராவதிக்கு அருகில் உள்ள காட்டில் மறைந்திருந்தார்.
அவர் மறைந்திருந்த காடு நூற்றாண்டுகளைக் கடந்தப்பின்னரும்
இப்போதும் அப்பகுதி மக்களால் பாதுகாக்கப்பட்டு வருகிறது.
அங்கு யாரும் மரம் வெட்டவோ,சுள்ளி பொறுக்கவோ
போவதில்லை.அந்தக் காடு அவர்களுக்கு தெய்வம்!!!
ஆதாரம்:காடு விகடன் பக்கம் 130,இணைப்பு:ஆனந்தவிகடன்
27.1.2010 வெளியீடு.
வீரபாண்டிய கட்டபொம்மன் வாழ்ந்துவந்த எட்டயாபுரம் பகுதி
தற்போது கோவில்பட்டி அருகில் இருக்கிறது.அப்பகுதி மக்கள்
இன்றும் தமது மன்னர் மீது இருக்கும் அபிமானத்தால் ஒரு
விஷயத்தில் உறுதியாக இருக்கின்றனர்.அது என்ன வென்றால்,
தனது மன்னரான வீரபாண்டிய கட்டபொம்மன் அவர்களைக்
ஆங்கிலேயனுக்குக் காட்டிக்கொடுத்த எட்டப்பனை மறந்தும்கூட
பேச்சில் பயன்படுத்துவதில்லை.
உதாரணமாக,எண்களைக் கூறும்போது,1,2,3,4,5,6,7,மகாராஜா,9 என்றே
கூறிவருகின்றனர்.
80 என்பதை மகாராஜா பத்து என்றும்
88 இரட்டை மகாராஜா என்றும்
800 என்பதை மகாராஜா நூறு என்றும் பேசுகின்றனர்.
இந்துபாரம்பரியத்தின் ஒரு சிறு அடையாளமே இது என்பது எனது
தாழ்வான கருத்து.நன்றி;ஆனந்த விகடன் 1981.
No comments:
Post a Comment