Friday, January 8, 2010

சுதேசிச்செய்தி ஜனவரி 2010:கேள்வி பதில் பகுதி

சுதேசி கேள்வி பதில்கள்:ஜனவரி 2010 வெளியீட்டிலிருந்து

1.காசியைப் பற்றி கேவலமாக சித்தரித்து நிஜம் நிகழ்ச்சியினை சன் டிவி வெளியிட்டுள்ளதே?

இதில் செய்தி ஏதும் இல்லை.கலைஞர்(டி.வி)பிரிந்து வந்ததால் சன் டிவி ஹிந்து ஆதரவு டிவியாக மாறிவிடாது.
இந்த மார்கழியிலும் காலையில் (காலங்காத்தாலே. . . ) தொப்புள் நடனம் வரும் சானல் இந்த ரெண்டும் தான்.



2.சவூதி அரேபியாவில் 75 வயது மூதாட்டி ஒருவருக்கு, “அறிமுகமில்லாத இளைஞர்கள் இருவருடன் காணப்பட்டார்” என்ற காரணத்திற்காக 40 கசையடிகள் தண்டனை கொடுக்கப்பட்டுள்ளதே. அது பற்றி. . .

75 வயதில் 40 கசையடிகள்.! என்னே ஒரு ஜீவ காருண்யம்? இரு ஆடவர்களுக்கும் விடுதலையோ?
எங்கே நமது பெண் உரிமை இயக்கங்கள்? எங்கே நமது ‘இனிய மார்க்க’ பிரச்சாரகர்கள் ஆதரவாளர்கள்?

3. கோவாவின் பாராளுமன்ற உறுப்பினர் சாந்தாராம் நாயக்(காங்கிரஸ்), ரஷ்யப்பெண் கற்பழிப்பு விவகாரத்தை ஊடகங்கள் பூதாகரமாக்கி, கோவாவின் சுற்றுலாப்பயணிகள் வரவைக்குறைக்க வழி செய்துவிட்டனர் என்றும், இது போன்ற விஷயத்தில் முன்பின் அறிமுகமில்லாத ஆடவருடன் நள்ளிரவு வரை தங்கியிருந்த பெண் என்று வரும்போது அத்தகைய கற்பழிப்புச்சம்பவத்தை மற்ற பலவந்த கற்பழிப்புச் சம்பவங்கள் போல பார்க்கக்கூடாது என்றும் பாராளுமன்றத்தில் பேசியுள்ளாரே?

நியாயமாகத் தான் பேசியுள்ளார்.ஆனால் அவர் மன்னிப்புக் கேட்க வேண்டும் என்றும், “முடியாது” என அவர் கூறியவுடன் Times Now அருண் கோஸ்வாமி, Small men, Big Ego என்று குதிப்பதும், இவர் எம்.பி.யாக இருக்க தகுதி படைத்தவரா எனக் கேள்வி எழுப்புவது அசிங்கமாக உள்ளது.
மீடியாக்களுக்கும் பெண் உரிமையாளர்களுக்கும் மட்டுமல்ல,அந்த எம்.பி.உள்பட அனைவருக்கும் கருத்துச் சுதந்திரம் உள்ளது.

4. சீன நாட்டு நிறுவனங்கள் இந்தியாவில் தயாரிக்கப்பட்டவை என போலி மருந்துகளை ஆப்ரிக்க நாடுகளுக்கு ஏற்றுமதி செய்துள்ளதாமே?

ஆம்.ஆனால்,சீனாவின் மீது உள்ள பயத்தால் நமது அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.முதுகெலும்பில்லாத அரசு.

5.அயராத உழைப்பிருந்தும், அத்வானி பிரதமராக இயலவில்லை.ஆனால், கருணாநிதியால் பல முறை முதல்வராக முடிகிறதே.எப்படி?

இருவர் உழைப்பும் அயராததுதான்.வித்தியாசம் இல்லை.ஆனால் ஒற்றுமைப்படுத்தி மேலே வருவது கடினம்.
வேற்றுமைப்படுத்தி, கலகம் விளைவித்து மேலே வருவது சுலபம்.
இருவரின் வரலாற்றையும் அறிந்தவர்களுக்கு இது புரியும்.


6.பஞ்சாயத்து தேர்தல்களில் கட்டாயம் வாக்களிக்க வேண்டும் என குஜராத் முதல்வர் நரேந்திர மோடி சட்டம் கொண்டு வந்துள்ளாரே,இது சாத்தியமா?

ஜனநாயக விரோதம் என்கிறார் தேர்தல் கமிஷனர்.கடினம் என்கிறார் மற்றொருவர்.அவரவர் இஷ்டம் என்றால் சட்டம் ஒழுங்கிற்கு என்ன அவசியம்.
தேர்தல் சாவடிக்கு போய்,ஓட்டுப்போடுவதை கட்டாயம் ஆக்கும் போது 49 ஓ கூட வெற்றி பெரும் வாய்ப்பு ஏற்பட்டு புதிய மாற்றங்கள், சட்டங்கள் வருவது ஆரோக்கியமாக இருக்கும். நல்லது நடக்கிறது.

No comments:

Post a Comment