Sunday, January 24, 2010

எனது ஜோதிட அனுபவத்தில் கிடைத்த ஒரு ஆராய்ச்சி முடிவு

எனது ஜோதிட அனுபவத்தில் ஒரு ஆராய்ச்சி முடிவு:


கொஞ்ச காலத்துக்கு முன்பு தனம் என்ற தமிழ்ப்படம் வெளிவந்தது.
இந்தப்படத்தில் 'உயிர்'சங்கீதா நடித்திருந்தாள்.இந்தப்படத்தில் ஒரு
ஜோதிட உண்மையை மையக்கருவாக வைத்திருக்கின்றார் இப்படத்தின்
இயக்குநர்.படம் பார்க்காதவர்களுக்கு அதன் திரைக்கதை சுருக்கமாக:

ஆசாரமான பிராமணக்குடும்பத்தில் நமது ஹீரோ சுமார் 22 வயதுடன்
வாழ்கிறார்.அவருக்கு இரண்டு அண்ணன்கள்.அவனது அப்பா ஒரு மர
அரவை ஆலை வைத்திருக்கிறார்.ஒழுக்கம்,குடும்பத்தில் அனைவரும்
அப்பாவை மதித்தல் என்பவை காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

அப்படிப்பட்ட குடும்பத்தில் பிறந்த கூச்சமும்,படிப்புக்களையும் உள்ள
ஹீரோ மேல்படிப்பிற்காக ஆந்திரமாநிலத்தின் தலைநகரமான
ஐதாராபாத்துக்குச் செல்கிறான்.

அங்கே இவன் தங்கும் இடத்தில் அருகில் தனம் என்ற பெண் இருக்கிறாள்.
இவள் ஒரு விபச்சாரியாக அப்பகுதியில் வாழ்கிறாள்.அவளிடம் புதிதாக
ஒரு ஆண் எவன் பேசினாலும் ரூ.500/-வைத்திருக்கிறாயா? என்று
மட்டும் கேட்பாள்.ஆமாம் என சொன்னதும் உடனே அவனுடன்
மறைவிடத்திற்குப்போய் விடுவாள்.அதே சமயம்,அவள் நிராகரித்த ஆண்களும்
உண்டு.

இந்நிலையில் நமது ஹீரோ ரொம்ப கூச்சமுள்ளவர்.ஆனாலும்,அவருக்கு
தனத்தின் மீது ஒரு 'இது'.அதாங்க காதல்.பல நாட்களாக அவளை பின் தொடர்ந்து
அவளிடம் தனது காதலைச் சொல்ல அவள் விழுந்து,விழுந்து சிரிக்க இறுதியாக
இருவரும் இணைகிறார்கள்.அப்போது,மற்ற வாடிக்கையாளர்களை விட
நம்ம ஹீரோவிடம் ரொம்ம்பவே நெருக்கம் காட்டிவிடுகிறாள் தனம்.

விளைவு?இந்த நெருக்கம் அடிக்கடி நடக்க ஒரு கட்டத்தில் தனத்திடம்
நீ இல்லாமல் என்னால் வாழ முடியாது எனக்கூறுகிறான் நமது ஹீரோ!
(முதன் முதலில் எந்த ஒரு ஆணும் எந்த ஒரு பெண்ணிடமும் உறவு
கொண்டதும் அந்த ஆணுக்கு உருவாகும் எண்ணம் இதுதான்.
இதேபோலத்தான் பெண்ணிற்கும்!!!)

தனது நட்புவட்டத்தில் கலந்து ஆலோசித்தப்பின்னர்,தனம் ஹீரோவை திருமணம்
செய்ய ஒப்புக்கொள்கிறாள்.அதே சமயம்,ஒரு கட்டுப்பாடு விதிக்கிறாள்.
உனது வீட்டாரிடம் நான் இதுவரை ஒரு விபச்சாரியாக இருக்கிறேன் என்பதை
நானே சொல்லுவேன்.அதையும் மீறி அவர்கள் என்னை மருமகளாக ஏற்றுக்
கொண்டால் மட்டுமே நமது திருமணத்திற்கு நான் சம்மதிப்பேன் என்கிறாள்.
அதற்கு நம்ம ஹீரோ சம்மதிக்கிறான்.(சற்று சிந்தித்துப்பார்த்தால்,இந்த
சூழ்நிலை நம்மில் எவருக்கு வந்தாலும் ஏற்போமா?எல்லாம் முதல் காம அனுபவம்
படுத்தும் பாடு)

ஐதாரபாத்திலிருந்து ஹீரோவின் வீட்டுக்கு தனமும்,ஹீரோவும் செல்லுகின்றனர்.
ஹீரோவின் வீட்டார் யார் இவள்? எனக்கேட்கின்றனர்.

ஹீரோ 'நான் இவளைத் தான் கல்யாணம் செய்வேன்' எனக்கூறுகிறான்.
உடனே,நீ யாருமா? என தனத்திடம் கேட்கின்றனர்.
தனமோ 'நான் ஒரு விபச்சாரி' என்கிறாள்.அவ்வளவுதான்,ஹீரோவின் அப்பா
ஒரு குடம் தண்ணீர் எடுத்து தனது தலையில் ஊற்றிக்கொள்கிறார்.(ஹீரோவை
தலைமுழுகுகிறாராம்)உடனே,தனம் அங்கிருந்து ஐதாராபாத் புறப்பட்டுவிடுகிறாள்.

ஹீரோவின் வீட்டைவிட்டு தனம் வெளியேற,ஹீரோவின் ஆஸ்தான ஜோதிடர்
அதே சமயம் ஹீரோவின் வீட்டுக்கு வருகிறார்.ஹீரோவின் அப்பாவை
சமாதானப்படுத்துகிறார்.
அந்த ஜோதிடர் பிரசன்னம்,(இப்போது இந்த விநாடியை ஜாதகமாகக் கணித்தல்) என்ற ஜோதிட முறையைப் பயன்படுத்தி சில ஜோதிட உண்மைகளைக் கூறுகிறார்.

"சில குறிப்பிட்ட கிரக நிலைகளில் பிறக்கும் பெண்ணை எவன் மணம் செய்கிறானோ
அவன் தனது பிறந்த ஜாதகப்படி,யோகங்கள் இல்லாவிட்டாலும்,அந்த யோகமான
பெண்ணை திருமணம் செய்வதால், அவன் கோடீஸ்வரனாகிறான்.
அதேசமயம்,அந்தப் பெண் தங்கள் வீட்டு மருமகளாக வருவதால்,அவள் (கூட்டுக்
குடும்பம் என்பதால்) தங்கள் வீட்டில்தான் வாழப்போகிறாள்.அப்படி அவள்
தங்கும் வீடும்,அந்த வீட்டுக்காரர்கள் செய்யும் வேலை அல்லது தொழிலும்
கொழிக்கும்.
இந்த ஜோதிட ரகசியத்தை உணர்ந்த முற்கால மன்னர்கள்,தனது அந்தப்புரத்தில்
இப்படிப்பட்ட யோகங்கள் நிறைந்த பெண்களை நிரந்தரமாக தங்கி வாழ
வைத்திருந்தனர்.அதனால்,அந்த மன்னர்களின் கஜானா எப்போதும்
நிரம்பி வழிந்தது."
கதைப்படி, ஹீரோவின் மொத்தக்குடும்பமும் ஐதாராபாத்துக்குப்போய்,
தனத்தை அழைத்துவந்து, தனது மகனுக்கு(நமது ஹீரோவுக்கு) மணம் செய்து
வைக்கின்றனர்.திருமணத்திற்குப்பின்னர், அவர்களின் ஆஸ்தான ஜோதிடரின்
வாக்குப்படி, ஹீரோவின் அப்பாவின் மர அரவை ஆலை லாபம் சம்பாதிக்கிறது.

இதற்குமேல் இருக்கும் காட்சிகள் சினிமாத்தனமானவை.
இந்த சம்பவம் எந்த அளவுக்கு நிஜம் என்பதை சுமார் இரண்டு ஆண்டுகளாக
ஆராய்ந்தும்,எனது ஜோதிட குருநாதர்களிடம் கலந்து ஆலோசித்தும்,சில சினிமா
நட்சத்திரங்களை ஆராய்ந்தும் பார்த்ததில் இவை அனைத்தும் உண்மை என
தெரிகிறது.

பெண் இனத்தின் சிறப்பே அவள் கருவை சுமப்பதால்தான்.அதனால்தான் இந்த
யோகம் அவளது கணவன்/காதலனை யோகங்கள் நிறைந்தவனாக ஆக்குகிறது.

சினிமா உலகத்தைப் பொறுத்த வரையில் எத்தனையோ காதல் ஜோடிகளை நாம்
பார்த்திருக்கிறோம்.அதில் ஜோதிட விபரங்கள் கிடைத்து,அதன் அடிப்படையில்
தனம் போன்ற யோகம் உடைய பெண் நடிகை நயன் தாரா ஆவாள்.சிம்புவுக்கும்
நயன் தாராவுக்கும் காதல் இருந்த காலத்தில் சிம்புவின் படங்கள் பெரும் வெற்றி
பெற்றுள்ளன.அதே சமயம்,சிம்புவை வம்பு என பத்திரிகைகள் எழுதித்தீர்த்தன.
நயன் தாராவைப் பிரிந்தது முதல் சிம்புவைத் தேட வேண்டியிருக்கிறது.சிம்புவால்
வெற்றிப்படம் தர முடியவில்லை.

நயன் தாராவின் பிறந்த ராசி மேஷம் ஆகும்.லக்னம் துலாம் ஆகும்.துலாம்
லக்னத்தின் ஏழாம் இடமாக மேஷம் வருகிறது.இதுவே நயன் தாராவின்
கணவன் ஸ்தானத்தைக் குறிக்கின்றது.மேஷ ராசியின் அதிபதியான செவ்வாய்
நயன் தாரா பிறக்கும் போது உச்சமாக இருக்கின்றது.(அவளின் பிறந்த ஜாதகத்தை
பார்த்தால் தெரியும்.அது என்னிடம் இருக்கிறது.பல ஜோதிட இதழ்களில்
பல முறை வந்திருக்கிறது)
நயன் தாராவின் காதல் நயன் சிம்பு தம்பதிகளாகும் அளவுக்குச் சென்றது.
செவ்வாய் உச்சமாக இருந்ததால்,சிம்பு நயனைக் காதலிக்கும்(?!)வரையிலும்
டென்ஷன் பார்ட்டியாகவே இருந்திருந்திருக்கிறார்.(ஒரு திரைப்பட
இயக்குநர் அப்படி இருப்பது தவறு.படைப்பாளி இல்லையா?)அதே சமயம்,
சிம்புவால் வெற்றிகரமான இயக்குநராக செயல்பட முடிந்தது.

இதே யோகமுள்ள பெண்ணை ஒரு அரசியல் வாதி நிரந்தரமாக மனைவியாக்கி
அடிக்கடி முதலமைச்சராகியிருக்கிறார்.அந்தப் பெண்ணின் தொடர்பு இருக்கும்
வரை அரசியலில் அவரை வீழ்த்த ஆளில்லை.

இதே யோகமுள்ள கிரக நிலையில் பிறந்த ஒரு பெண்ணை திருமணம் செய்த
ஒரு சராசரி மனிதன்,வெறும் ஐந்து வருடங்களில் ரூ.100 கோடி சொத்துக்களுக்கு
அதிபதியாகிவிட்டார்.

இதேயோகமுள்ள கிரகநிலையில் பிறந்த ஒரு பெண்ணை தனது நிரந்தர
மனைவியாக வைத்திருக்கும் விளையாட்டுவீரரை நான் அறிவேன்.

ஆக,ஜோதிடத்தை ஒரு வருமான வாய்ப்பாக கற்றுக்கொண்ட நான்,இந்த 22
வருடங்களில் ஜோதிடம் ஒரு வருமான வாய்ப்பு மட்டுமல்ல;அது
மனிதனின் தலையெழுத்தையே மாற்றும் துல்லிய விஞ்ஞானம் என்பதை
உணர்ந்து கொண்டேன்.இன்று,என்னால்,நிம்மதியாக சாப்பிட முடியவில்லை;
நிம்மதியாக குளிக்க முடியவில்லை;அந்தளவுக்கு எனது செல்போன்கள்
ஒலித்துக்கொண்டே இருக்கின்றன.

அதே சமயம், மேலே சொன்ன யோகத்திற்கு எதிரான கிரக நிலையில்
பிறந்த பெண்களையும் நான் கடந்த 11 ஆண்டுகளாக ஆராய்ந்து
வருகிறேன்.கணவனுக்குரிய கிரகம் நீசமானால்,அந்தப் பெண்ணை
எவன் திருமணம் செய்கிறானோ,அவன் தனது பிறந்த ஜாதகப்படி,
எவ்வளவு யோகக் காரனாக இருந்தாலும்,அவன் தனது
வாழும் இடத்தில் சகலவிதமான மரியாதைகளையும் இழக்கிறான்.
அவன் எவ்வளவுதான் உலகப்புகழையும்,பெரும் செல்வத்தையும்
தனது உழைப்பால் பெற்றாலும், அவன் வாழும் தெரு,நட்பு வட்டம்,
சொந்தங்கள் மத்தியில் எல்லாவிதமான அவமானங்களையும்
தினமும் அடைகிறான்.

1 comment:

  1. என்ன ஆராய்ச்சி இதெல்லாம்.?
    என்னென்னவோ சொல்ரீங்க.
    தல சுத்துது.
    இவ்லோ ஆராய்ச்சியா.

    ReplyDelete