Friday, January 8, 2010

என்னை உருவாக்கிய புத்தகங்கள்-1

என்னை சிந்தனையாளனாகவும்,செயல்புயல்(?!)ஆகவும் மாற்றிய புத்தகங்கள்:நீங்களும் செயல்புயலாக மாற வேண்டுமா?=பாகம் 1

கி.பி.1986-நான் எட்டாம் வகுப்பு படிக்கும்போது என்னை அதிகம் பாதித்த புத்தகம் சுவாமி விவேகானந்தர் எழுதிய கர்ம யோகம்,ராம கிருஷ்ணமிஷன் வெளியீடு.அப்போது இதன் விலை ரூ.15/-இன்று விலை ரூ.25/- இன்று வரை நான் இந்த புத்தகத்தை சுமார் 100 முறைக்கும் மேலாக வாசித்திருப்பேன்.
இந்த புத்தகத்தில் கருத்திலிருந்து எனக்கு சிந்திக்கும் முறைகள் தெரிந்தன.

கி.பி.1991-1994 நான் பி.ஏ.பொருளாதாரம் படித்துவந்தேன்.அப்போது விழிமின்;எழுமின் என்ற பெயரில் சுவாமி விவேகானந்தரின் பேச்சுக்களை தொகுத்து விவேகானந்த கேந்திரம் வெளியிட்டுஇருந்தது.
இந்த மூன்று வருடங்களில் இந்த ஒரு புத்தகத்தை மட்டும் 50 முறையாவது திரும்ப திரும்ப வாசித்திருப்பேன்.எனக்குள் ஆழ்ந்த தன்னம்பிக்கையும்,உந்துசக்தியும் பிறந்தது.
தற்போது இந்த புத்தகம் எந்த புத்தகக்கடையிலும் கிடைப்பதில்லை.விவேகானந்த கேந்திரம்,கன்னியாக்குமரியில் மட்டுமே கிடைக்கிறது.விலை தற்போது ரூ.20/-

அடுத்தபடியாக எண்ணங்கள் ,எம்.எஸ்.உதயமூர்த்தி ,நிறுவனர், மக்கள் சக்தி இயக்கத்தின் தலைவர்,நிறுவனர் எழுதிய தன்னம்பிக்கை நூல்.

ஆனால்,இந்த புத்தகத்தில் அமெரிக்காவுக்கு ஓவராகவே இவர் ஜால்ரா அடித்துள்ளார்.மனித எண்ணங்கள் எப்படி உருவாகின்றன?அது எப்படி செயல்படும்?நம்மை எப்படி இயக்கும்? என்பது பற்றியெல்லாம் எம்.எஸ்.உதயமூர்த்தி இந்த புத்தகம் முழுக்க எழுதியுள்ளார்.ஒழுங்காக எண்ணங்களை எழுதிக்கொண்டு வரும்போதே, அமெரிக்காவில். . . என ஆரம்பிப்பார்.நம்மை சிந்தனை ரீதியாக அமெரிக்காவின் அடிமையாக மாற்றிட செய்யும் தந்திரம் இது.இவரது மகள் வெள்ளைமாளிகையில் வேலைபார்ப்பவராம்.போன வருடம் தான் கேள்விப்பட்டேன்..

நமது எண்ணங்களுக்கு சக்தி உண்டு என்பதை இந்த புத்தகம் வாசித்தபின்பே உணர்ந்தேன்.
மேலும்,சிந்திப்பதிலேயே ரொம்ப கவனமாக இருக்க வேண்டும் என்பதை இந்த புத்தகம் உணர்த்தியது.இந்த புத்தகத்தின் பின்புலம் வெறும் அமெரிக்கா மட்டுமே.இந்த புத்தகம் படிப்பதற்கு ஷிவ்கெரா எழுதிய உங்களால் வெல்ல முடியும் என்ற புத்தகத்தை வாசிக்கலாம்.விலைரூ250/-

என்னை பிரமிக்க வைத்த புத்தகம் ஓஷோ எழுதிய மறைந்திருக்கும் உண்மைகள்.தற்போது விலை ரூ75/-
முதன்முதலில் இந்த புத்தகம் வாசித்ததும் சில நாட்களுக்கு என்னால் சரியாக தூங்க முடியவில்லை.நமது புராதன இந்து தர்மம்,இந்து ஜோதிடம்,இந்து பண்பாடு,இந்து வாழ்க்கைமுறை,இந்து பழக்கவழக்கம் எவ்வளவு விஞ்ஞானபூர்வமானது என்பதை நினைத்து பிரமித்தே போனேன்.
ஜோதிடம் ஒரு அறிவியல்,கோவில்கள் இறைவனையும் மனிதனையும் இணைக்கும் ஊடகம் இந்த பகுதிகள் எனக்கு நமது(எனது )இந்து தர்மத்தின் மீது ஆழ்ந்த மரியாதையை உருவாக்கின.

ஆனந்த விகடனின் கார்ட்டூனிஸ்ட் மதன் அவர்கள் எழுதிய வந்தார்கள் வென்றார்கள் என்ற தொடர் நமது நாட்டின் ஆயிரம் ஆண்டு வரலாற்றை ஓரளவு உணர உதவியது.
நமது பெருமைகளை இஸ்லாமியர்கள் கூட அவ்வளவாக சிதைக்கவில்லை;கிறிஸ்தவர்கள் சிதைத்து,சின்னாபின்னப்படுத்தினர் என்பதை ஆதாரங்களோடு எழுதியுள்ளார்.ரொம்ப சுவாரசியமாக எழுதியுள்ளார்.கி.பி.1000 முதல் கி.பி.1992 வரை எழுதியுள்ளார்.

தமிழ் சரித்திர நாவலாசிரியர் சாண்டில்யன் எழுதிய விலை ராணி நாவல், சாணக்கியரின் அரசியல் தந்திரங்களை விலாவாரியாக விவரித்துள்ளது.பேராசைபிடித்த மகத மன்னனின் பேரரசை வீழ்த்தி ஒரு வலிமையான சம்ராஜ்ஜியத்தை உருவாக்கியவிதத்தை விவரித்துள்ளார்.

சாண்டில்யன் எழுதிய கடல்புறா 3 பாகங்கள் தமிழர்களின் போர்க்கலை,வீர வரலாறு,பிராணயாமத்தின் மகிமைகள்,மனோதத்துவ உண்மைகளை நாவல்வடிவில் விவரித்திருப்பது ஒவ்வொரு தமிழனும் வாசிக்க வேண்டிய நாவல்கள் ஆகும்.

எழுத்துச்சித்தர் பாலகுமாரன் எழுதிய கூடு என்னை ரொம்பவும் யோசிக்க வைத்த நாவல்.இப்படியும் ஒருவரால் எழுத முடியுமா? என்று.ஆதி சங்கரர் இறந்த மன்னனின் உடலுக்கு கூடுவிட்டு கூடு பாய்ந்து ஒரு நாட்டையே சீர்திருத்திய வெற்றிக்கதை!
விபச்சாரம்,லஞ்சம்,ஒழுங்கீனம் என சிதைந்து போன ஒரு உருப்படாத அரசாங்கத்தை சில வாரங்களில் எப்படி சரி செய்கிறார் என்பதை இந்த நாவல் விவரிக்கிறது.

தேசப்பிரிவினையின் சோக வரலாறு என்ற புத்தகத்தை ஹெ.வே.ஷேசாத்திரி எழுதியுள்ளார்.கி.பி.1940 முதல் 1949 வரை நடந்த அரசியல் நிகழ்வுகளை நடுநிலையோடு எழுதியுள்ளார்.நமது நாடு சுதந்திரம் பெற்றதே பரிதாபமான நிலையில்தான்.
பிடிவாதம் என்ற குணமாகவே வாழ்ந்த நேரு,ரொம்ப நல்லவராக வாழத்துடித்த காந்திஜி, நயவஞ்சகத்துடன் நாட்டை வெட்டிய மவுண்ட் பேட்டன்,மூர்க்கத்துடன் வாழ்ந்த முகமது அலி ஜின்னா என தனி நபர்களின் குறைகளால் குறைப்பிரசவமாகவே இந்தியா பிறந்தது.அதன் விளைவுகளை இன்றும் நாம் அனுபவிக்கிறோம்.இந்தியாவை நேசிக்கும் அனைவரும் வாசிக்க வேண்டிய நூல்.

1 comment:

  1. நல்ல புத்தகங்களையே கூறியுள்ளீர்கள். இதனுடன் ஓஷோவின் வெற்றுப் படகு -2 சேர்த்துக் கொள்ளுங்கள்.

    ReplyDelete