சுதேசிச் சிந்தனைகள்:3 மரபணு உணவு உலகிற்கு தேவையா?
மான்சாண்டோ: இந்த அமெரிக்க நிறுவனம்தான் மரபணு மாற்றம் செய்யப்பட்ட உணவுப்பொருட்களுக்கான விதைகளை உருவாக்கும் பன்னாட்டு பிசாசு.மரபணு மாற்றம் செய்யப்படும் கத்தரிக்காய் பி.டி.கத்தரிக்காய் என அழைக்கப்படுகிறது.இந்த பி.டி.கத்தரிக்காயில் நோய் எதிர்ப்புத்திறன் அதிகமாக இருக்கும்.வயலில் வளரும்போது எந்த வித பூச்சித்தாக்குதலும் இராது.எந்த வித நோயும் தாக்காது.அதே சமயம் அளவற்ற விளைச்சல் தரும் என மான்சாண்டோ அறிவித்துள்ளது.ஆனால்,உண்மை நிலை அதற்கு நேர்மாறாக இருக்கிறது.
ஒவ்வொருமுறையும் மரபணு மாற்றம் பெற்ற பயிர்களை பயிரிட மான்சாண்டோ நிறுவனத்திடம் மட்டுமே விதைகளை வாங்க வேண்டும்.(முதல் முறை வாங்கிய விதைகளை சேமித்து வைக்கக்கூடாது.அப்படி வைத்தால் கைது செய்யப்படுவீர்கள்)அதன் விலை பலமடங்கு அதிகம்.
நிஜத்தில் மரபணு மாற்றம்செய்யப்பட்ட பயிர்கள் ,மரபணு திணிக்கப்பட்டவையே!
மான்சாண்டோவின் வரலாற்றைக் கொஞ்சம் பார்ப்போம்:ஜெரால்டு ஆர்.ஃபோர்டு,ஜேம்ஸ் கர்ட்,ரொனால்டு ரீகன் இந்த மூன்று அமெரிக்க ஜனாதிபதிகளும் மான்சாண்டோவின் அக்குளில் இருந்தனர்.அந்தளவுக்கு வெள்ளைமாளிகையையே தனது பணசெல்வாக்கால் வளைத்திருந்தனர்.
அக்காலத்தில்,அதாகப்பட்டது கி.பி.1985 வரை மரபணு திணித்த பயிர்களை அமெரிக்காவில் பயிரிட வற்புறுத்தப்பட்டனர்.அந்த பயிர்கள் பயிரிடப்பட்ட வயலின் அருகே இருக்கும் வேறு ஒருவரின் பயிரில் மகரந்தச்சேர்க்கையால் அல்லது பூச்சிகளால் மரபணு திணித்த பயிர்கள் பரவியிருந்தால்,பக்கத்துவயலின் விவசாயி கைது செய்யப்படுவார்.இதற்கு விவசாயக்காவல்துறையை மான்சாண்டோ அமெரிக்காவில் உருவாக்கியிருந்தது.இதன் தொடர்ச்சியைப் பார்ப்போம்:
கி.பி.2001 ஆம் ஆண்டில் நியூயார்க் டைம்ஸ் என்ற பத்திரிகை ஒரு செய்தியை வெளியிட்டது.அமெரிக்காவில் நோய்கள் இரட்டிப்பானதற்கு மரபணுத்திணித்த உணவுப்பொருட்களின் பரவலே காரணம் என அப்பத்திரிகை குற்றஞ்சாட்டியது.இப்படியொரு குற்றச்சாட்டிற்கு நோய்க் கட்டுப்பாட்டு மையம் வெளியிட்ட ஆவணத்தை நியூயார்க் டைம்ஸ் மேற்கொள் காட்டியது.
அமெரிக்க விஞ்ஞானிகள் நோய் இரட்டிப்பானதற்கு மரபணு திணித்த மக்காச்சோளம் மற்றும் சில உணவுப்பொருட்களே! என்றும் இவற்றை பரவவிட்ட மான்சாண்டோ நிறுவனமே காரணம் என விவரித்தது.
ஆவணங்கள் கொடுத்த தகவல்கள் அதிர்ச்சிகரமானவை.மரபணு திணிப்பு உணவுப்பொருட்களை உண்டதால் பாதிப்புக்குள்ளானவர்கள் ஒரு லட்சத்து இருபத்தைந்தாயிரம் பேர்கள்.இவர்களில் மருத்துவமனை சிகிச்சைகளால் பலனளிக்காமல் இறந்தவர்கள் 5000 பேர்கள்.
இங்கிலாந்தில் “யார்க்” சத்துணவு ஆய்வுக்கூடம் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது.அதில் சோயா மொச்சை உண்டதால் ஏற்படும் ஒவ்வாமை 50% அதிகரித்துள்ளது.அத்தகைய நோய் அதிகரித்த காலமும் மரபணு திணிக்கப்பட்ட சோயா மொச்சை புகுத்தப்பட்ட காலமும் ஒத்துப்போனது.
இத்தனைக்கும் உலகின் நம்பர் 1 பிராடு கம்பெனி என்ற மாபெரும் பெயரை பெற்ற நிறுவனமே மான்சாண்டோ நிறுவனம் ஆகும்.
அமெரிக்காவின் ஹார்வேர்டு பல்கலைக்கழகத்தில் டாக்டர் பட்டம் பெற்ற நமது பிரதமர் மன்மோகன்சிங் அமெரிக்காவிற்குப்போய் இந்திய அமெரிக்க வேளாண் அறிவியல் ஒப்பந்தம் அமெரிக்க வியாபார நிறுவனங்களுக்கு பெரும் ஆறுதலாக இருக்கும்.மரபணு திணிப்புப் பயிர்களால் மனிதர்களின் மரணம் நிச்சயிக்கப்படுவதால் ஐரோப்பிய நாடுகள் அவற்றை அனுமதிக்கவில்லை. நிலைமை இப்படி இருக்க இந்தியாவில் தலைகீழாக இருக்கிறது.
எந்தவகையான உணவு தொடர்பான சோதனையும் செய்துபார்க்கப்படாமலேயே மான்சாண்டோ மகிகோ கம்பெனி உற்பத்தி செய்த பி.டி.கத்தரிக்காய்க்கு அனுமதி வழங்கப்படுகிறது.ஏறத்தாழ 11 கோடி உழவர் குடும்பங்கள் பயிர் செய்யும் பயிர் கத்தரிக்காய்.
உழவர் அல்லாத குடும்பங்களிலும் கூட தொட்டியில்,பெட்டிகளில்,மாடிகளிலும்,வீட்டுத் தோட்டங்களிலும் பயிர்செய்து பறித்து உண்ணக்கூடிய காய்கறியான இது 112 கோடி இந்தியர்களின் உணவுப்பண்டமாகும்.
இதில் மரபணுவைத் திணித்து,இந்தியாவின் உணவுச்சந்தையை தனது கைக்குள் கொண்டுவர திட்டமிடுகிறது அமெரிக்க பகாசுர மான்சாண்டோ.
எதிர்காலத்தில், இந்தியாவின் உணவுப்பயிர்கள் அனைத்தும் கிலோ ரூ.10,000/-க்கு விற்றால் சாதாரண இந்தியர்களின் நிலை என்னவாகும்?
No comments:
Post a Comment