சித்தர்களின் பிறந்த நட்சத்திரங்களும் அவர்களை வழிபடும் முறைகளும்
சித்தர்களின் அருளைப் பெறுவதற்கு ஏராளமான வழிமுறைகள் உள்ளன.ஏன் சித்தர்களின் அருளை நாம் பெற வேண்டும் ?
சைவ சித்தாந்தம் எனப்படும் சிவ வழிபாட்டுத் தத்துவப்படி, இறைவனை விட இறை தொண்டரே உயர்ந்தவராகிறார்.இறை தொண்டரின் பாசமானது இறைவனின் மீது மகன் அப்பாவாகவும், மகள் அப்பாவாகவும், மகன் அம்மாவாகவும்,மகள் அம்மாவாகவும் இருக்கிறது.அந்த பேரன்பு,பக்தர்களின் சொந்த வாழ்க்கையில் ஏற்பட்ட தாங்க முடியாத சோதனையின் விளைவாகவும், இனி இழப்பதற்கு என்று ஒன்றுமேயில்லை என்ற நிலை வரும்போதும் அந்த விரக்தியானது இறைவனின் மீது ஆழ்ந்த பக்தி உருவாகக் காரணமாகிறது.
ஆக,பின்வரும் சித்தர்களின் பிறந்த நட்சத்திரத்தன்று வழிபாடு செய்தால் உரிய சித்தரின் தொடர்பும்,ஆசியும் நமக்குக் கிடைக்கும்.பல கிறிஸ்தவ இஸ்லாமிய நண்பர்கள் இந்த வழிமுறையைப் பின்பற்றி பயனடைந்து வருகிறார்கள்.பலர் வறுமையை அடியோடு நீங்கி,செல்வ வளத்தோடு இருக்கிறார்கள்.
நீங்களும் முயன்று பாருங்கள்.
சித்தரின் பிறந்த நட்சத்திரமானது,ஒரு தமிழ் மாதத்தில் அதிக பட்சமாக இரு முறை வரும்.அது அதிக பட்சமாக இரண்டு நாட்களுக்கு வரும்.
அகத்தியர் - ஆயில்யம்
நந்தீசர் - விசாகம்
திருமூலர் - அவிட்டம்
கருவூரார் - அஸ்தம்
ராமதேவர் - பூரம்
பதஞ்சலி - மூலம்
கமலமுனி - பூசம்
குதம்பைசித்தர்- விசாகம்
கோரக்கர் - ஆயில்யம்
தன்வந்திரி - புனர்பூசம்
சுந்தரானந்தர் - ரேவதி
கொங்கணர் - உத்திராடம்
சட்டமுனி - மிருகசீரிடம்
வால்மீகி - அனுஷம்
இடைக்காடர் - திருவாதிரை
மச்சமுனி - ரோகிணி
போகர் - பரணி
பாம்பாட்டி - மிருக சீரிடம்
No comments:
Post a Comment