Monday, January 4, 2010

உபயோகமான கேள்வி பதில்கள் பகுதி

கேள்வியும் பதிலும்:இந்தியாவை நேசிப்பவர்களுக்கு

?: நம்பிக்கையை உருவாக்குவதும், வளர்த்து எடுப்பதும் எளிதானது இல்லை.அது நம் வேலை இல்லை என்றே பெரும்பாலும் நம்புகிறோம்.இந்த சிந்தனை பற்றி தங்கள் கருத்து?

! இது தவறான சிந்தனை.நம்பிக்கை உருவாக்குவது நமது வேலைகளில் முக்கியமான விஷயம்.நம்பிக்கை உள்ளவன் தனது வேலைகளை அவனே செய்து கொள்வான்.


?: வெற்றியடைந்த மனிதர்கள் நாற்காலிகளில் ஓய்வெடுப்பதில்லை.அவர்களுடைய பணிகளிலேயே ஓய்வெடுக்கிறார்கள்.இது சரியா?

! நூற்றுக்கு நூறு சரி.

? சேமிப்பின் ஒரு பகுதியை மருத்துவச்செலவுகளுக்குத் தனியே ஒதுக்கி வைக்க வேண்டும் என்கிறார் எனது நண்பர்.இது சரியான யோசனையா?

! இல்லையெனில் கடன் வாங்கி அவதிப்பட நேரிடும்.நோயைவிடக் கொடியது கடன் இல்லையா?

?இன்றைய மருத்துவச்செலவுகள் அதிகமாகிப்போவதற்கு என்ன காரணம்?மருத்துவமனைகளின் பேராசையா?

! மருத்துவச் செலவுகள் அதிகரிப்பதற்குக் காரணம் ஒன்று உணவில் கட்டுப்பாடு இல்லை.எதைச் சாப்பிட வேண்டும்,எதைச்சாப்பிட வேண்டாம் என்று யோசித்து ருசிக்குச் சாப்பிடாமல் பசிக்குச் சாப்பிட வேண்டும்.

ஜோதிட ரீதியாக, வாங்கும் லஞ்சம்,அளவற்ற விலைக்கு நமது சேவை மற்றும் பொருட்களை விற்றல், ஏமாற்றிச் சம்பாதித்தல் போன்றவைகளால் பெரும் செல்வம் சேர்ந்தாலும் அத்துடன் கர்மமும் நம்மை வந்தைடைகிறது.அதுவே கர்ம வியாதியாக உருவெடுக்கிறது.
பேராசைப்பட்டு பெருமளவு நேர்மையில்லாமல் சம்பாதிப்பவர்கள்,ரூ.1000/-க்கு மருத்துவச்செலவு செய்வதற்குப்பதிலாக ரூ.15,000/- மருத்துவச்செலவு செய்தே ஆக வேண்டும்.இதுவே கலிகால விதி.

இரண்டு, போதிய உடற்பயிற்சி கிடையாது.(அட, தினமும் ஒரு பர்லாங்கு தூரம் நடந்தாலே எந்த நோயும் வராது)

இவை இரண்டையும் சரி செய்தால் மருத்துவச்செலவைக் குறைக்க முடியும்.
தொட்டதற்கெல்லாம் ஸ்கேன் செய்வது, தேவையில்லாமல் நூறு மருத்துவ பரிசோதனைகள் செய்ய வைப்பது என சில மருத்துவர்கள் பணத்தையே குறிக்கோளாகக் கொண்டு வேலை செய்வதால் எழுந்த போக்கு இது.

No comments:

Post a Comment