Monday, January 25, 2010

சுற்றுச்சூழலையும் சிதைக்கும் உலக வர்த்தக அரசியல்



மனிதன் என்றாலே சுயநலம்தான்.சுற்றுச்சூழலைஉலகளவில் முறையாகப்

பராமரிக்காமல் இருந்ததால் கி.பி.2012 ஆம் ஆண்டில் உலகம்
அழியும் என்ற கருத்தின் அடிப்படையில் எடுக்கப்பட்ட ஹாலிவுட்
திரைப்படமே 2012 ருத்ரம்.இந்தப் படத்தில் காட்டப்படுவது போல்,
உலகத்தின் வெப்ப நிலையைக் குறைக்க சில தொழிற்கொள்கைகளை
வகுப்பதில் பிடிவாதம் பிடிக்கின்றன G 8 எனப்படும் வல்லரசு நாடுகள்.
இதிலும்,அமெரிக்காவே முன்னணியில் இருக்கின்றது.

அழிக்கப்படும் வனங்களுக்குப் பின் ஒரு உலகளவிலான அரசியல்
சுயநலம் இருக்கின்றது.முன்னொருகாலத்தில் இந்தியப் புவியியல்
பரப்பில் சுமார் 20% காடுகளாக நிரம்பியிருந்தது.தேசிய வனத்
திட்டத்தின்படி, மூன்றில் ஒரு பங்கு நிலம் மரங்களால் சூழப்பட்டு
இருக்க வேண்டும்.

45,000 தாவர இனங்கள், 81,000 உயிரினங்கல் மட்டுமே இருக்கும்
நம் காடுகளில்,
5,150க்கும் அதிகமான தாவர இனங்களும்,1837 க்கும் அதிகமான
உயிரினங்களும் மிக வேகமாக அழிந்துவரும் பட்டியலில் இடம்
பெற்றிருக்கின்றன.

95 தேசியப் பூங்காக்கள், 500 வன விலங்கு சரணாலயங்கள்,இரண்டு
பல்லுயிர்ப் பாதுகாப்பு மையங்கள் போன்றவைகளுக்காக சுமார்
5% காடுகள் ஒதுக்கப்பட்டாலும்கூட, நம் காடுகளில்தான் மிக வேகமாக
அழிந்துவரும் உயிரினங்களும் இருக்கின்றன.இதைப்புரிந்து கொள்ளுவதே
சுற்றுச்சூழல் அரசியலின் முதல் நிலை.(இதன் எளிய வடிவமே தமிழ்த்
திரைப்படமான பேராண்மை)

அமெரிக்கா,கனடா,ஜெர்மனி,இங்கிலாந்து,ஜப்பான்,ஆஸ்திரேலியா,பிரான்ஸ்
முதலான வல்லரசு நாடுகள் தனது நாட்டுக் காடுகளை முடிந்த வரையிலும்
பாதுகாத்து வருகின்றன.அதே சமயம்,இந்தியா போன்ற வளரும் நாடுகள்
தங்களின் காட்டு வளங்களை(மூலிகைகள், காட்டு உயிரினங்கள்,அவற்றின்
உடல் பாகங்கள்,மரங்கள்,வேர்கள்,கனிகள்,இலைகள்,பூக்கள். . .) ஏற்றுமதி
செய்வதை ஊக்குவிக்கின்றன.இந்த நயவஞ்சகத்தின் முழுப்பரிமாணத்தை
விளக்கவே இன்னொரு சுற்றுச்சூழல் கடல் டாட் பிளாக்ஸ்பாட் டாட் காம் என்ற
வலைப்பூ முகவரியை ஆரம்பித்து நிரப்பிவிட முடியும்.
இந்த நயவஞ்சகத்தினை புரிந்துகொள்ளுவது சுற்றுச்சூழலியல் அரசியலின்
இரண்டாம் நிலை!!

பெருகிவரும் மக்கள் தொகையால் சுற்றுச்சூழல் எவ்வாறு பாதிக்கப்படுகிறது?
என்ற விழிப்புணர்ச்சி இன்னும் மக்களிடையே ஏற்படவில்லை.(அப்படி
ஏற்பட்டால் பல பன்னாட்டு நிறுவனங்கள் திவாலாகும்).பொருளாதார
நிலைப்பாட்டிலிருந்தே மக்கள்தொகைப் பெருக்கம் பார்க்கப்படுகிறதே
தவிர, வாழ்வாதார நிலையில் இருந்து எந்த நடவடிக்கையும் (உலகளவில்
பெரும்பாலான நாடுகளில்) எடுக்கப்பட வில்லை.காடுகள் அழிக்கப்படுவது
மக்களின் குடியேற்றத்துக்காகவா அல்லது பன்னாட்டு நிறுவனங்களின்
லாபத்துக்காகவா என்ற கேள்வியை எழுப்பினால் சுற்றுச்சூழல் அரசியலின்
மூன்றாம் நிலை புரியும்.

இரண்டாம் உலகப்போர் முடிந்ததும்,உலகின் பல நாடுகள் அரசியல் சுதந்திரம்
பெற்றன.நாம் இந்தியாவாக கி.பி.1947 ஆம் ஆண்டில் சுதந்திரம் அடைந்தோம்.
கி.பி.1960 களில் கஞ்சித் தொட்டிக்காலம் என ஒரு பஞ்சகாலம் நம் நாட்டிலும்
தமிழ்நாட்டிலும் இருந்தது.அரசாங்கமே, ரேஷனில் எல்லா மக்களுக்கும்
கஞ்சி ஊற்றியது.அதிலும் கூட நயவஞ்சக அமெரிக்கா இந்தியாவை
நாசக்காடாக்கப் பார்த்தது.ஆம்! நமக்கு இலவசமாக கோதுமையை அனுப்பியது
அப்படி வந்த கோதுமையோடு பார்த்தீனியவிதைகள் இந்தியாவில் பரவியது.
(அதுவரை இந்தியா நீர்வளம் நிரம்ப இருந்தது.இதை அழிக்கும் நோக்கோடு
ஆகாயத்தாமரை,பார்த்தீனியவிதைகளை கோதுமையோடு கலந்து அப்படிப்பட்ட
நச்சுக்கோதுமையை இந்தியாவுக்கு அனுப்பியது அமெரிக்கா)

இதன் எதிரொலியாக,கி.பி.1967 முதல் கி.பி.1978 வரையில் பசுமைப் புரட்சி என்ற
பெயரில் உணவு தன்னிறைவுத்திட்டம் செயல்படுத்தப்பட்டது.இதனால்,நாம்
உணவில் போதுமான விளைச்சலை அடைந்தோம் என்பது நிஜம்தான்.ஆனால்,
நமது பாரம்பரியமான 4,00,000 நெல் ரகங்களை இழந்தோம்.சுமார் 10,000 வருடம்
விவசாய அனுபவத்தையும் இழந்தோம்.மிகவும் வலிமையும்,மிகவும் ஆரோக்கியம்
இவற்றை இழந்தோம்.அமெரிக்காவின் ரசாயன உரம் தயாரிக்கும் நிறுவனங்கள்
3000% அளவிற்கு வளர்ச்சியடைந்தன.இந்தியர்களின் ஆண்மைத்தன்மை 45%
அளவுக்கு குறைந்தது.இந்தியத் தாய்மார்களின் தாய்பாலில் கூட ரசாயன
உரங்களின் நச்சு 78% அளவுக்கு உயர்ந்தது.இந்நிலை இன்றும் தொடர்கிறது.
சுகப்பிரசவம் என்பது அபூர்வமாகி விட்டது.பணத்துக்காக,பிரசவ மருத்துவமனைகள் சுகப்பிரசவம் செய்யும் ஆரோக்கியம் உள்ள நிறைமாத
கர்ப்பிணிகளைக் கூட அரசு மானியத்துக்காக சிசேரியன் செய்யும் கொடூரம்
சகஜமாகிவிட்டது.
இந்திய விவசாய நிலங்கள் மலடாகிவிட்டன.இருந்த போதிலும்,ஒரு சிறு
நம்பிக்கை ஒளிக்கீற்று தென்படத்துவங்கிவிட்டன.ஆனால்,தமிழ்நாடு மாநில
அளவில் இந்த ஒளிக்கீற்று குறைந்தபட்சம் அளவுகூட பரவவில்லை.
இயற்கை விவசாயம்,பஞ்ச கவ்யம்,நவ கவ்யம் என இந்தியர்களாகிய
நாம் இழந்த விவசாய பாரம்பரியங்களை மீட்டெடுக்கத் துவங்கிவிட்டோம்.
கோ.நம்மாழ்வார் போன்ற இயற்கை விவசாய விஞ்ஞானிகளின் வழிகாட்டுதலால்
10,000 வருட இந்து விவசாய மரபுகள் மீண்டும் புனர்நிர்மாணம் ஆகத்
துவங்கிவிட்டன.இன்று,இயற்கை உரங்களால் விளைவிக்கப்பட்ட அரிசி,
காய்கறிகள் தமிழ்நாட்டில் பல மாநகரங்களில் விற்பனை செய்யப்படுகின்றன.
இவற்றைத் தொடர்ச்சியாக உண்பவர்களுக்கு சர்க்கரை நோய்,மன அழுத்தம்,
ரத்த அழுத்தம் போன்றவை முழுமையாக குணமடைகின்றன.(அட!
நிஜம் தான்ங்க)

இன்று மான்சாண்டோ போன்ற பன்னாட்டு நிறுவனங்கள் மரபணு திணிக்கப்பட்ட
காய்கறிகளை இந்தியாவில் சந்தைப்படுத்த முனைந்துள்ளன.மனிதன் உண்ணும்
உணவின் விதைகளை பயோ டெக்னாலஜியால் நவீனப்படுத்தி அதைக் கொண்டு
உலக மக்களின் வயிற்றில் அடிக்க திட்டமிடுகிறது பன்னாட்டு பயோடெக்
நிறுவனங்கள்.இதன் மூலமாக,இயற்கைக்கு எதிராக நமது வாழ்க்கையைத்
திருப்பப் பட்டு இருப்பதை உணர்ந்தால்,அது சுற்றுச்சூழல் அரசியலின்
நான்காம் அரக்கப் பரிமாணம் ஆகும்.


கி.பி.1875 ஆம் ஆண்டு வரையிலும் செல்வ செழிப்புள்ள நாடாக இருந்த
நமது பாரதம், இன்று உலக வல்லரசுநாடுகளின் குப்பைக்கிடங்காக மாறி
வருகிறது.முதுகெலும்பில்லாத மத்திய அரசு,தொலை நோக்கில்லாத
அரசியல் தலைவர்கள்,பேராசை பிடித்த ஒழுக்கமற்ற அரசு அதிகாரிகளால்
இந்நிலை தற்போது இருக்கிறது.

இவற்றையா நாம் நமது மகன்களுக்கும்,மகள்களுக்கும் தரப்போகிறோம்?

நன்றி:ஆனந்த விகடனின் இலவச இணைப்பு:காடு விகடன் பக்கங்கள் 124,125; 27.1.2010

ஆக,அரசியல்வாதிகளுக்கும்,அரசியலுக்கும் அளவற்ற சுதந்திரம் கொடுத்து
நாம் இன்று மன நோயாளிகளாக மாறி இருக்கிறோம்.

No comments:

Post a Comment