நமது ஆன்மீகக்கடலின் வாசகரான அவர், வளைகுடா நாடு ஒன்றில் பணிபுரிந்துவருகிறார்.விடுமுறையில் இந்தியா திரும்பிய அவர்,மனவளக்கலை மன்றத்தில் தீட்சை எடுத்திருக்கிறார்.நமது மூலாதாரம் எனப்படும் உட்காருமிடத்தினுள் சுருண்டிருக்கும் மூலக்கனலை மனவளக்கலைமன்றத்து ஆசான்கள் மூலமாக சில நாட்களிலேயே புருவமத்திக்குக் கொண்டுவருவர்.அதன்பிறகு,ஓரிரு நாட்களுக்குப் பிறகு,அதை மீண்டும் புருவமையத்திலிருந்து,மூல மையத்திற்கு இறக்கிவிடுவர்.இதன்பிறகு,தினமும் மனவளப்பயிற்சி செய்து,நமது ஜீவ ஆற்றலை வளப்படுத்திட வேண்டும்.சில பயிற்சிகட்டங்களைத் தாண்டிவிட்டால்,நமது பிறந்த ஜாதகத்திலிருக்கும் கர்மாக்கள்,தோஷங்கள்,பாவங்களைக்கூட நீக்கிவிடமுடியும்.அப்படி நீக்கியவர்களே,இன்று மனவளக்கலையில் பேராசிரியர்களாக இருக்கிறார்கள்.பல பேராசிரியர்கள் சொன்ன வார்த்தைகள் இவை.
இந்த சூழலில்,நமது வளைகுடா வாசகருக்கு,ஆன்மீகக்கடலும்,ஓம்சிவசிவஓம் மந்திர ஜபமும் அறிமுகமானது.முயன்று பார்ப்போமே என களத்தில் இறங்கியிருக்கிறார்.அவரது முன் ஜன்ம புண்ணியப்படி,அவரது 15 ஆவது நாளிலிருந்து அவருக்கு ஆக்ஞாச்சக்கரம் நெற்றி மையத்தில் சுற்றித்துவங்கியிருக்கிறது.
தவிர,என் ஜினியரிங் துறையில் 16 ஆண்டு கால அனுபவமிருந்தும்,நேர்காணலுக்குச் செல்லும்போதெல்லாம் அவரது தாழ்வு மனப்பான்மையால் சிறந்த நிறுவனத்தின் வேலை கிடைக்காமலே போய்விட்டது.ஓம்சிவசிவஓம் மந்திர ஜபத்தின் விளைவாக,மாபெரும் பன்னாட்டு நிறுவனத்தில் வெறும் 32 நிமிடத்திலேயே வேலை நியமன ஆணையை வாங்கிவிட்டார்.இன்னும் விடாமல் அவர் ஓம்சிவசிவஓம் ஜபித்துக்கொண்டிருக்கிறார்.
ஓம்சிவசிவஓம்
please vedic pandits give your suggestion to this blogger it is extreme
ReplyDelete