Wednesday, August 17, 2011

ஆண்கள் ஏன் உணர்ச்சிகளை அடக்கிக் கொள்கிறார்கள்.




ஆண்கள் தங்களதுஉணர்ச்சிகளை வெளியே கொட்டாமல் அடக்கிக் கொள்கிறார்கள்.அதனால் பல பிரச்சினைகள்என்றும் ஒரு தகவலை படித்தேன்.உண்மையில் கோபமோ,ஆத்திரமோ எந்த உணர்வும் உள்ளேயேஅடக்கப்படுவது நல்லதல்ல.இருந்தும் ஏன் வெளியே கொட்டுவதில்லை? காரணம்சாதாரணமானது.அள்ளிக்கொள்ள ஆளிருந்தால் கொட்டுவார்கள்.

                                    ஆண்தனக்குள்ளேயே முடங்கிப்போவது அதிகம்.பெண்களுக்கு இந்த பிரச்சினைகள்குறைவு.பெரும்பாலும் எல்லாவற்றையும் வெளியே சொல்லிவிடுகிறார்கள்.அம்மா,சகோதரிகள்,தோழிகள் என்று அவர்களுக்கு நெருக்கமான உறவுகள்அதிகம்.ஆனால் ஆணுக்கு அப்படியெல்லாம் இல்லை.
                                     சகோதர உறவுஎன்பது முக்கியமானது.பெண்களைப்போல ஆண்களுக்கு இது அமைவதில்லை.சண்டை பிடித்துகோர்ட்டுக்கு போகும் அண்ணன் தம்பிகளை நீங்கள் பார்க்க முடியும்.அண்ணன் தம்பி உறவுவலுவாக இருப்பது மிகவும் குறைவு.பெண்களைக் கவனித்துப் பார்த்தால்தெரியும்.அக்கா,தங்கை உறவு என்பது மிக நெருக்கமானது.வேறெங்கும் இவ்வளவு பாசமானஉறவு நிலையை நீங்கள் காண முடியாது.

                                    மற்றவர்களிடமும்,பொருளாதரத்திலும் அந்தஸ்து பெறுவதற்காக ஆண்வெளியுலகத்துடன் அதிக உறவு நிலைகளை ஏற்படுத்தவேண்டியிருக்கிறது.போட்டி,பொறமை,துரோகம்,போட்டுக்கொடுப்பது போன்றவற்றை சமாளிக்க வேண்டியிருக்கிறது.அலுவலகத்திலோ,தொழில்செய்யும் இட்த்திலோ இதெல்லாம் சகஜம்.யாரிடமும் பகிர்ந்து கொள்வதுகூட கஷ்டம்தான்.
                                     நண்பர்களும் தெரிந்தவர்களும் ஒருவனது உணர்வுகளைப் பற்றி பகிர்ந்து கொள்வதைகேட்க விரும்புவதில்லை.நான்கு பேர் சந்தித்தால் ஆண்கள் ,அரசியலைப்பற்றியோ,சினிமாபற்றியோ,பெண்களைப்பற்றியோ பேசுவார்களே தவிர கஷ்ட்த்தை சொன்னால் ஓடிப்போய்விடுவார்கள்.ஜோக் சொல்லிக்கொண்டிருந்தால் வெகு நேரம் அங்கே இருப்பார்கள்.

                                      அரசியல்,சினிமா போன்றவற்றை அதிகம் தெரிந்து கொள்ள ஆசைப்படுவதற்கும் இதுவேகாரணம்.நான்கு பேர் முன்னால் விஷயம் தெரிந்தவன் என்று காட்டிக்கொள்வதற்கு என்றுஒரு ஆசிரியர் சொன்னார்.உண்மைதான்.ஆண்கள் கூடினால் உள்ளே அரித்துக்கொண்டிருக்கும்விஷயத்தை வெளியே விடாமல் ஏதேதோ பேசிவிட்டு டாஸ்மாக் தேடி போய் விடுகிறார்கள்.
                                      உள்ளேஇருப்பதை வெளியே சொல்லாமல் சரக்கு உள்ளே போன பிறகு உளறிக்கொண்டிருப்பார்கள்.மனிதஉறவுகளில் இணக்கமோ,நெருக்கமோ இல்லாதநிலை பெரும் நெருக்கடி.இந்த நெருக்கடி ஆணுக்குஅதிகம்.மது,சிகரெட் என்று ஒளிந்து கொள்வதற்கு இவை முக்கியமான காரணம்.பல நேரங்களில்குழந்தைகள்மீதும்,பெண்கள்மீதும் பாய்கிறான்.இதனால் வீட்டு உறவுகளும்துண்டிக்கப்பட்டுவிடுகின்றன.

                                      ஆண்கள்அனைத்தையும் பகிர்ந்து கொள்ளும் உறவுகளை கண்டுபிடிப்பது முக்கியமானது.பல ஆண்களும்மனைவியிடம் தங்கள் பிரச்சினைகளை பகிர்ந்து கொள்வதில்லை.மனைவிக்கு போதுமான அளவுக்குஇதைப்பற்றி தெரியாது என்று நினைக்கிறான்.இது ஒரு பிரச்சினை.குறைந்தபட்சம்வெளியேவிட்ட திருப்தியாவது இருக்கும்.உணர்வு பூர்வமான ஆதரவு வீட்டில் கிடைக்கவாய்ப்புண்டு.

thanks:mr.prakash

No comments:

Post a Comment