“என் அப்பா அம்மா மனிதக்கழிவுகளைத் தோளில் சுமந்து என்னைப் படிக்க வைச்சாங்க.அவங்க கஷ்டம் எனக்குத் தெரியும்.அவர்கள் போல சென்னையில் துப்புரவு வேலை செய்கிற 10,00,000 ஆதி ஆந்திர மக்கள் இருக்காங்க.அவங்க வாழ்க்கை முன்னேற்றம் அடைய அவங்க வேலை செய்யற அதே கழிவறை மூலமா போராடிக்கொண்டிருக்கிறேன்” என்கிறார் ஆதி ஆந்திர இளைஞர் சங்கத்தலைவர் வெங்கடேஸ்வரலு மாதிகா.
சென்னை காசிமேடு,உயர்நீதிமன்றம் போன்ற இடங்களில் இவர் பராமரித்து வரும் கழிவறைகல் பற்றிய வர்ணனை இதோ: காற்றில் மெலிதாகப்பரவும் பாடல்,ஆண்கள் பெண்கள் கழிப்பறைகளுக்கு நடுவில் உள்ள அறை முழுவதும் நறுமணம்,அறையில் விநாயகர் சன்னதி;பளிச்சென்று துடைத்த முகம் பார்க்கும் கண்ணாடி;நடப்பதற்கு சிவப்புக்கம்பளம்;சிறுநீர் கழிக்க ரூ.1/- மற்றதுக்கு ரூ.2/-
பணி செய்யும் இடத்தை கோயிலுக்குச் சமமாகக் கருதுவதால் பிள்ளையார் படம் வைத்திருப்பதாகச் சொல்லுகிறார் வெங்கடேஸ்வரலு.உயர்நீதிமன்றம் வந்த கடலூர் நீதிபதி,இந்தக் கழிவறை பராமரிப்பைஅ என்னிடம் ஒப்படைத்திருப்பதாகத் தெரிவித்தார் என்று இவர் சொல்வது இவரது தொழில் நேர்த்திக்கு அத்தாட்சி.
ஆதாரம்:தினமலர் 2.8.11.விஜயபாரதம் 26.8.11
No comments:
Post a Comment