திருச்சி:முன்னாள் அமைச்சர் நேரு, தான் கைதாகாமல் இருப்பதற்காக, கட்சி அலுவலகமாகச் செயல்பட்ட, தன் சொந்த வீட்டு வாசலை வாஸ்துப்படி மாற்றியும், வாடகை வீட்டுக்கு குடி புகுந்தும், பல்வேறு கோவில்களில் பரிகார பூஜை செய்தும் பலன் அளிக்கவில்லை. டாக்டர் ஒருவர் அளித்த புகாரின் பேரில், நேரு கைது செய்யப்பட்டதால், அவரது ஆதரவாளர்கள் விரக்தியில் உள்ளனர்.
திராவிட பாரம்பரியத்துடன், பகுத்தறிவு பாசறையில் வார்த்தெடுக்கப்பட்ட, தி.மு.க.,வில் இன்று பெரும்பாலானோர் தீவிர கடவுள் பக்தர்களாக மாறி வருகின்றனர். தி.மு.க., மூத்த தலைவர்களில் ஒருவரான முன்னாள் அமைச்சர் நேரு, திருவேங்கடமின் தீவிர பக்தர். இதை அவர் வெளிக்காட்டிக் கொள்ளாவிட்டாலும், பல தருணங்களில் அவரது பக்தி முகம் வெளியுலகுக்கு தெரிந்து விடும்.ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பிறகு, ஏராளமான தி.மு.க., பிரமுகர்கள், நில அபகரிப்பு புகாரில் சிக்கி கைதாகி வருகின்றனர். நில அபகரிப்பு புகாரில் சிக்கிய முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் முதல், கடைக்கோடி தொண்டன் வரை கம்பி எண்ணிக் கொண்டிருக்கின்றனர்.
திருச்சி மாவட்ட தி.மு.க., செயலரும், முன்னாள் அமைச்சருமான நேருவின் தீவிர ஆதரவாளர்கள் பலர் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளனர். "நேருவின் தம்பி ராமஜெயம் கொடுத்த, "டார்ச்சர்' காரணமாக, மணப்பாறையைச் சேர்ந்த மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் ராமசாமி இறந்தார்' என, கட்சியினர் பரவலாக புலம்பி வருகின்றனர்.தன் தம்பி ராமஜெயத்தால், கட்சிக்குள் ஏற்பட்ட குளறுபடிகளை சமாளிக்கவும், கட்சிக்குள் மேலும் பூசல் ஏற்படாமல் இருக்கவும், தான் கைதாவதை தவிர்க்கவும், திருச்சி, தில்லை நகர் ஐந்தாவது கிராசில், தி.மு.க., கட்சி அலுவலகமாகச் செயல்பட்டு வந்த, தன் வீட்டு வாசலை முன்னாள் அமைச்சர் நேரு, சமீபத்தில் வாஸ்துப்படி மாற்றியமைத்தார்.
ஜோதிடர்களின் ஆலோசனைப்படி, தில்லை நகர் 10வது கிராசில் சொந்த வீட்டில் இருந்த அவர், ஏழாவது கிராசில் வாடகை வீட்டுக்கு, குறைந்த வாடகையில் குடி புகுந்தார். இதற்கிடையே காஞ்சனா ஓட்டல் அபகரிப்பு வழக்கில் முன்னாள் அமைச்சர் நேரு, துணை மேயர் அன்பழகன் உட்பட ஐந்து பேர் மீது, போலீசார் வழக்கு தொடர்ந்தனர்.இது தொடர்பாக தங்களை கைது செய்யக்கூடாது என, நேரு உட்பட அனைவரும் மதுரை ஐகோர்ட்டில் மனு செய்தனர். மூன்று முறை கைது நடவடிக்கை தள்ளிப்போனது. "25ம் தேதி வரை அவர்களை கைது செய்யக் கூடாது' என, மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவிட்டது.

இதற்கிடையே, திருநெல்வேலி, சங்கரன் கோவிலில் உள்ள சங்கர நாராயணன் கோவிலில் உள்ள கோமதி அம்மாள் சன்னிதியில் சிறப்பு வழிபாடு, பூஜை செய்தார். ஆனால், எதுவும் பலனளிக்கவில்லை.திருச்சி மாவட்டம் துறையூரைச் சேர்ந்த டாக்டர் சீனிவாசன் அளித்த புகாரின் பேரில், முன்னாள் அமைச்சர் நேரு, 25ம் தேதி காலை கைது செய்யப்பட்டார். இது, நேருவின் ஆதரவாளர்களுக்கு வேதனையை அளித்தாலும், "இது பொய் புகார் தான். அண்ணன் சீக்கிரம், "ரிலீஸ்' ஆயிடுவார்' என்று நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.அதேநேரம், "என்ன தான் வாஸ்து, பரிகார பூஜை நடத்தினாலும், கைதாக வேண்டும் என்று தலைவிதி இருந்தால் யாரால் மாற்ற முடியும்' என, ஜோதிட நம்பிக்கை கொண்ட தி.மு.க.,வினர் புலம்புகின்றனர்.thanks:dinamalar 29.8.11
நாத்திகவாதியாக இருந்தாலும் தன் வினை தன்னையே டுமீல்
அழகான ஸ்ரீ ரங்கம் கோவில் முன்பு பெரியாரின் சிலையை திறந்து வைத்து கடவுள் இல்லை கடவுள் இல்லை
ReplyDeleteஎன்ற வாசகத்தை எழுதி வைத்து இருக்கும் திமுகவினர் அனைவரும் சிறையில் குறிப்பாக சிலையை திறந்து
வைத்த ஆ.ராசா,கே.என்.நேரு,அன்பில்பொய்யாமொழி உட்பட அனைவரும் சிறையில் வாடுகின்றனர் கடவுள்
இல்லை என்பது உங்கள் கொள்கையானால் அந்த கொள்கையை நீங்களே வைத்து கொள்ளுங்கள். ஒருபோதும்
நீங்கள் இந்து மதத்தை அழிக்க முடியாது. அழகான பாரம்பரியமான அதிகம் பேர் வந்து செல்ல கூடிய கோவிலில்
வேண்டும் என்றே அந்த சிலையை திறந்தது போல்தான் தெரிகிறது

A.ABIRAM