Monday, August 29, 2011

விஜயாபதியும்,மக்களின் மனநிலையும்









நெல்லை மாவட்டம் ,ராதாபுரம் தாலுக்காவிலிருந்து பத்துகிலோ மீட்டர் தூரத்தில் இருக்கும் கடலோர கிராமம் விஜயாபதி ஆகும்.கீழ விஜயாபதி,மேல விஜயாபதி என்று இரண்டு பகுதிகள் இங்கே இருக்கின்றன.



ஒரு ஆறு விஜயாபதியில் கடலில் கலக்கிறது.அந்த ஆறு இரண்டாகப்பிரிந்து கடலோடு சேரும் பகுதியில் ஒன்று சேர்ந்து கடலில் கலக்கிறது.இந்த இரண்டாகப் பிரிந்த நிலப்பகுதியில்தான் 17,50,000 ஆண்டுகளுக்கு முன்பாக விஸ்வாமித்ர மகரிஷி,தனது சீடர்களான ஸ்ரீஇராமபிரானுக்கும்,ஸ்ரீஇலட்சுமணபிரானுக்கும் நவகலசயாகம் செய்தார்.அப்படி செய்வதற்காக ஸ்ரீவிஸ்வாமித்ர மகாலிங்க சுவாமி திருக்கோவிலை இவரே நிர்மாணித்தார்.இந்தக் கோவிலுக்கு மேற்குப்பக்கத்தில் ஸ்ரீவிஸ்வாமித்ர மகரிஷியின் கோவிலும் இருக்கிறது.இந்தக் கோவிலுக்கு அருகில் ஓமகுண்ட கணபதி அருள்புரிகிறார்.

கால பைரவரின் ஆளுகைக்குட்பட்ட பகுதியாக விஜயாபதி இருப்பதால்,இந்தக் கோவிலின் வழிபாட்டு முறைகளை முறைப்படி செய்வதே நல்லது.விஜயாபதி கோவிலுக்கு பூர்வ புண்ணியம் உள்ளவர்களே போக முடியும்,சும்மா டூர் போல போய் வருவது எந்த விதத்திலும் நன்மையைத் தராது.







ஓம்சிவசிவஓம்










No comments:

Post a Comment