Monday, August 8, 2011

விஜயபாரதம் கேள்வி பதில்:12.8.11




?:நான் தினசரி ஏதாவது ஒரு கோவிலுக்குச் சென்று சாமியை வணங்கி வருகிறேன்.ஆனாலும் எனக்கு கஷ்டங்களும்,தொல்லைகளும் வருகிறதே! ஏன்?

!:சாமியைக் கும்பிட்டால் கஷ்டங்கள் வராது என்று யாரும் சொல்லவில்லை.கஷ்டங்கள் வருவது நமது “கர்மா”வைப் பொறுத்தது.திருநாவுக்கரசருக்கு தீராத வயிற்றுவலி.அவர் இறைவனிடம் வலியைப் போக்கச் சொல்லி பிரார்த்தனை செய்யவில்லை;அதைத் தாங்கக் கூடிய சக்தியைக் கொடு என பிரார்த்தித்தார்.


?:விஞ்ஞான வளர்ச்சியில் உலகம் சுருங்கிவிட்டது என நான் கருதுகிறேன்.நீங்கள்?

!: உலகம் ஒன்றும் சுருங்கவில்லை. . . மனிதர்களின் மனம் தான் சுருங்கிவிட்டது.

?: பயங்கரவாதத்திற்கு எதிராக மத்திய அரசின் கொள்கைகள் மாறாவிட்டால் குண்டுவெடிப்பு தொடரும் என அத்வானி அரசுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது பற்றி?

!: அத்வானியின் கருத்து நூற்றுக்கு நூறு உண்மை.அமெரிக்காக்காரன் பாகிஸ்தானின் நண்பனாக இருந்தாலும்,அதற்குள் பாகிஸ்தானிடம் கேட்காமலும்,பாகிஸ்தானிடம் அனுமதிபெறாமலும் உள்ளே புகுந்து,தனது நாட்டை விமானங்களால் தாக்கிய பின்லேடனைக் கொல்கிறான்.நாமோ,நமது நாட்டில் தாக்குதல் நடத்திய அப்சல் குரு(ஸாரி)அகமது,கசாப்பிற்காக பிரியாணிக்கும்,பாதுகாப்பிற்கும் கோடிக்கணக்கில் கொட்டி வருகிறோம்.இந்நிலை மாறாவிட்டால்,குண்டுவெடிப்புகள் தொடர்கதையாகிவிடும்.

?:2G ஸ்பெக்ட்ரம் வழக்கில் மன்மோகன்சிங்கின் ஒப்புதலுடன் தான் அனைத்தும் நடந்துள்ளது என ராஜா தெரிவித்தப்பிறகும் பிரதமர் மவுனமாக இருப்பது ஏன்?

!: போகிறபோக்கைப் பார்த்தால் இனி புதியதாக வரும் செல்போனில் silent mode என்பதற்குப்பதில் manmohan mode என்று வந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

?: பிறந்த தேதியில் பிறந்த நாளைக் கொண்டாடலாமா?

!: நம்மில் பலர் ஆங்கிலத்தேதியில் தான் பிறந்த நாளைக் கொண்டாடுகிறார்கள்.அது தவறு.நமது பிறந்த தமிழ்மாதம்,பிறந்த நட்சத்திரம்,அது வளர்பிறையில் வரும் நட்சத்திரமா? அல்லது தேய்பிறையில் வரும் நட்சத்திரமா? என்பதை பஞ்சாங்கம் பார்த்து கொண்டாட வேண்டும்.அதுதான் நமது பாரம்பரிய முறை.

No comments:

Post a Comment