Wednesday, August 17, 2011

ஸ்ரீவில்லிபுத்தூர் பத்திரகாளியின் பெருமைகள்-2



2009 ஆம் ஆண்டு ஆன்மீகப்பதிவுகளில் எப்படி என்னை எனது அன்னை பத்திரகாளி ஆட்கொண்டாள் என்பதை எழுதியிருக்கிறேன்.
அதுவரையிலும் ஏழரைச்சனியும்,இராகு மகாதிசையும் என்னை,எனது கவுரவத்தை சின்னாபின்னமாக்கியிருந்தது.மனித உறவுகள் அனைத்துமே சுயநலப்புலிகள்;ஆனால்,அவைகளில் பெரும்பாலானவை ஆன்மீகமுகமூடியை அணிந்துகொண்டு,எப்படியெல்லாம் ஏமாற்றுகின்றன? என்பதை உணராத அப்பாவியாகவே இருந்தேன்.

8.8.2004 இந்த நாள் எனது வாழ்நாளில் மறக்க முடியாத நாள்.இந்த நாள் முதல் இன்று 17.8.2011 வரையிலும் ஒருநாள்கூட விடாமல்,தினமும் எனது அன்னை பத்திரகாளியை வழிபட்டுவிட்டு,அதன்பிறகே,வேலைக்குப் போவதை எனது கடமையாக ஆக்கிக் கொண்டேன்.ஆனால்,அதே சமயம்,2004 முடிவதற்குள்ளாகவே,என்னிடம் தனது அருட்பார்வையை நேரடியாக செலுத்த ஆரம்பித்துவிட்டாள் அன்னை.(யாரெல்லாம் என்னிடம் ஆன்மீக முகமூடியை அணிந்துகொண்டு எப்படியெல்லாம் என்னை,எனது திறமையைப் பயன்படுத்தி,அவர்கள் தன்னை வளப்படுத்திக்கொண்டார்கள் என்பதை வெகு சீக்கிரமே உணரவைத்ததோடு,அவர்களிடமிருந்து என்னைப் பிரித்துவிட்டாள்.அதே சமயம்,அவளால்தான் நான் அந்த நயவஞ்சகக் கூட்டத்திடமிருந்து பிரிந்தேன் என்பதையும் பல முறை நிரூபித்திருக்கிறாள்)

பல நாட்களில் காலை 8.00 மணி முதல் 9.30க்குள் வீட்டிலிருந்து புறப்படுவேன்.வீட்டு வாசலைத் தாண்டிய உடனே,எனது மனதில் ஒரு எண்ணம் தோன்றும். “இன்று கோவிலுக்கு வரவேண்டாம்” இதுதான் அந்த எண்ணம்!மிகத் தெளிவாக யாரோ மெஸ்மரிஸம் செய்தது போல் இந்த ஒரு வரி எனது மனதில் தோன்றும்.இருந்தும்,அடுத்த விநாடியே நான் யோசிப்பேன். ‘நம்மை பத்திரகாளி சோதிக்கிறாள்’  ‘நாம் இப்படி சொன்னாலும் கோவிலுக்கு வருகிறானா? இல்லையா? என்பதை பத்திரகாளியே சோதிக்கிறாள் என்றே நினைத்தேன்.அப்படி நினைத்தவாறு,அருகில் இருக்கும் முதலியார்பட்டித்தெருவில் அமைந்திருக்கும் பத்திரகாளி கோவிலுக்குச் செல்வேன்.கோவில் பூட்டி இருக்கும்.காரணம் முதலியார்பட்டித்தெருவில் யாராவது சிவனடி சேர்ந்திருப்பர்.இப்படி பல நாட்களாக எனது மனதில் எனது அன்னை பத்திரகாளியே அறிவித்தாலும்,எனது கடமையைச் செய்தபின்னரே(பத்திரகாளியம்மாளின் கோவில் வாசல் வரை வந்து,பூட்டிய கோவில் வாசலில் நின்றவாறு சில நொடிகள் வழிபட்டப்பின்னரே) வேலைக்குப் போவதை வழக்கமாக்கிக் கொண்டேன்.
பல மாதங்களுக்குப்பின்னரே,என் மீதும்,எனது நேரத்தின் மீதும் எனது அன்னை பத்திரகாளி எவ்வளவு பாசம் இருந்தால்,நான் வீட்டைவிட்டுப் புறப்படும்போது,
‘நீ நேராக உனது வேலைக்குப் போ;காலையில் என்னைத் தேடி வராதே’ என்ற அர்த்தம் வருமாறு ‘இன்று கோவிலுக்கு வராதே’ என்று எனது மனதில் பேசியிருப்பாள்  என்பது புரிந்தது.இப்பேர்ப்பட்ட அன்னை பத்திரகாளியை விட வேறு தெய்வம் உண்டா? என்ற எண்ணமே இன்னும் தோன்றுகிறது.


ஏன் எனில், கொடூரம் நிறைந்த இந்த கலியுகத்தில் என்னை இந்த நொடிவரைக் காப்பாற்றிவருவது எனது அம்மா பத்திரகாளி மட்டுமே! அவள் செய்த முக்கிய அதிசயங்கள். . .விரைவில்!

ஓம்சிவசிவஓம்

No comments:

Post a Comment