Tuesday, August 30, 2011

விஜயபாரதம் கேள்விபதில் 26.8.2011




?:பகவத் கீதை ஒரு அமைதியான இடத்தில் இல்லாமல் ஏன் போர்க்களத்தில் போதிக்கப்பட்டது?



!! மனிதனின் வாழ்க்கையே ஒரு போராட்டம்தான் என்பதை புரிய வைப்பதற்காக.ஸ்ரீகிருஷ்ணன் போர்க்களத்தை தேர்ந்தெடுத்திருப்பார் என்றே தோன்றுகிறது.



?:பரதனாரே, தாயின் அன்பு,இறைவனின் அன்பு எதற்கு முதலிடம் கொடுப்பது?



!! உங்கள் கேள்வியிலேயே முதலில் தாயின் அன்பைத்தானே குறிப்பிட்டுள்ளீர்கள்.மாதா,பிதா,குரு,தெய்வம் என்பதுதானே நமது முன்னோர்களின் வாக்கு.



?:காமன்வெல்த் ஊழல் விஷயத்தில் ஷீலா தீட்சித் மீது நடவடிக்கை எடுக்காமல் காங்கிரஸ் இரட்டை வேடம் போடுவதாய் கூறுகிறாரே நிதின் கட்காரி?



!!:டெல்லியில் கன்னாட் பிளேஸ் பகுதியை நவீனப்படுத்த பட்ஜெட் போடப்பட்டது 76 கோடி ரூபாய்க்கு! ஆனால் செலவோ ரூ.671 கோடிகள்.பதில் சொல்ல வேண்டிய டெல்லி முதல்வர் ஷீலா தீட்சித் ஏன் ஓடி ஒளிகிறார்? அவர் மீது நடவடிக்கை எடுக்காமல் காங்கிரஸ் இரட்டை வேடம் போடுவது அப்பட்டமாகத் தெரிகிறதே.



?:மும்பையில் நமது பாதுகாப்புப்படைக்கும் தெரியாமல் ஆள் இல்லாத ஒரு கப்பல் வந்துள்ளதே,இது பற்றி?



!!:ஆஹா,பிரமாதம் நமது கடலோரப்பாதுகாப்பு.ஆயிரம் டன் எடையுள்ள பனாமா நாட்டுக்கொடியுடன் எம்.வி.பாவிட் என்ற எண்ணெய்க்கப்பல் மும்பை அருகில் உள்ள வர்சோவாவின் கடற்கரையில் வந்து தரை தட்டி நிற்கிறது.இது வந்து 12 மணி நேரத்திற்குப்பிறகுதான்,போலீஸ் வருகிறது.கடலோரக் காவல்படை தூங்குகிறதா? எப்படி நமது பாதுகாப்பு? சபாஷ் சைலன் டு மோடு அரசு(மன் மோகன் அரசு)



?:அமெரிக்காவில் பெரிய பொருளாதார நெருக்கடியாமே?



!!:ஒபாமா,திஹார் சிறையில் இருக்கும் ராஜா,கல்மாடி போன்றவர்களைப் பார்த்து தொகை குறிப்பிடப்படாத ஒரு காசோலை வாங்கினால் ஒரு வேளை சரியாகுமோ என்னவோ!

No comments:

Post a Comment