Thursday, August 11, 2011

ஆன்மீகக்கடல் ஆசிரியருடன் ஒரு பேட்டி-8




கேள்வி:உங்களை உருவாக்கியவர்களைப் பற்றி விவரித்துவிட்டீர்கள்.உங்களை நாசமாக்க யாருமே முயலவில்லையா?

பதில்:கையைக் குடுங்கள்.நல்ல ஆழமான கேள்வி.நீங்கள் ஒரு சிறந்த நிருபர் என்பதை நிரூபித்துவிட்டீர்கள்.இதே கேள்வியை நமது அரசியல் தலைவர்களிடம் கேட்க முடியாது இல்லையா?

கேள்வி:ஆமாம் ஸார்,ஆனால்,உங்களிடமிருந்து இதற்கு பதில் கிடைக்கும் என நம்புகிறேன்.

பதில்:என்னை நாசமாக்கிட இன்று வரையிலும் ஒரு பெரிய கூட்டமே வேலை பார்க்கிறது.அவர்கள் மனதில் என்ன இருக்கிறது என்பது எனக்கு முன்பே தெரிந்துவிட்டதால்,அவர்களின் சதிகளை என்னால் முறியடிக்க முடிகிறது.

கேள்வி:அப்படி என்னதான் அவர்கள் நினைக்கிறார்களாம்?

எனது பேச்சில் பந்தா இராது;ஆனால்,பொறுப்புணர்ச்சி இருக்கும்.இந்த பொறுப்புணர்ச்சி,பிறரை சிந்திக்கத் தூண்டும் விதமான கேள்விகள் அடிக்கடி கேட்பேன்; நான் பிறந்து வளர்ந்த சமுதாயத்தில் இருப்பவர்கள் என்னைப் பற்றி நினைப்பது,  கவுண்டமணியின் கேலி வசனத்தை நினைவூட்டுகிறது.

கேள்வி:அது என்ன?

பதில்: கழுதை மேய்க்குற பையனுக்கு இவ்வளவு அறிவா? என்று அவர்கள் நினைக்கிறார்கள்.

ஹா ஹா ஹாஹா ஹாஹா ஹா ஹா

பதில்: நிருபரே,என்னை உருவாக்கியவர்களைப் பற்றி விவரிக்க எம்.எஸ்.வேர்டில் 14 பக்கங்கள் தேவைப்பட்டது.அதுவும் சுருக்கமான விளக்கமே! என்னைக் கெடுக்க நினைப்பவர்களைப்பற்றி சுருக்கமாக விவரிக்க 140 பக்கங்களாவது தேவைப்படும்.

கேள்வி:பரவாயில்லை;உங்களின் வாழ்க்கை விளக்கம் ஆன்மீகக்கடல் வாசகர்களுக்கும்,எங்களின் வாசகர்களுக்கும் ஒரு முன்மாதிரியாக இருக்கப்போகிறது.எனவே,சிரமம் பார்க்காமல் சொல்லுங்கள்.

பதில்:இந்துதர்மத்தில் சொந்த அவமானங்களை வெளியே சொல்லக்கூடாது;அப்படி சொன்னால் சொன்னப்பின்னர்,அவரைப்பற்றிய நன்மதிப்பு போய்விடும் என்ற கருத்து இருக்கிறது.

கேள்வி:இந்து தர்மம் என்று பொத்தம் பொதுவாக கூறாதீர்கள்.எதில் இந்தக் கருத்து கூறப்பட்டுள்ளது?

பதில்:சாணக்கியரின் அர்த்த சாஸ்திரத்தில் !

கேள்வி:எந்த பதிப்பகம்?

பதில்:நர்மதா பதிப்பகம்,நல்ல நூல் வெளியீட்டாளர்கள்,சென்னை


கேள்வி:அர்த்த சாஸ்திரத்தில் தனிமனித பழக்கவழக்கங்களைப் பற்றியெல்லாம் கூறப்பட்டுள்ளதா?

பதில்: ஆமாம்,அர்த்த சாஸ்திரம் இரண்டு பெரும் பிரிவுகளைக் கொண்டது.முதல் பகுதியில் தனிமனிதன்,குடும்பம்,சமுதாயம் பற்றிய இந்துதர்ம ஒழுக்க நெறிகளைப் பற்றி விவரித்திருக்கிறார் சாணக்கியர்.இரண்டாம் பகுதியில்தான் ஒரு அரசாங்கத்தை எப்படி உருவாக்குவது?அதில் அரசன்,மந்திரி,தளபதி,படைவீரன்,அதிகாரிகள்,தண்டனைகள்,விதிவிலக்குகள் பற்றி நுணுக்கமான விதிகளைக்கூட விளக்கமாக விவரித்திருக்கிறார்.இந்து மதத்துக்கு மட்டுமல்ல;மனித குலம் மொத்தத்துக்கும் அர்த்தசாஸ்திரத்தின் குறிப்புகள் தேவை.வெகு விரைவில் இந்துதர்மம் உலகம் முழுக்கவும் பரவப்போகிறது.அப்பேர்ப்பட்ட பெருமைக்குரிய மதத்தில் பிறந்தமைக்கு நான் பெருமைப்படுகிறேன்.இந்த பெருமித உணர்வு இந்தியாவில் பிறந்த அனைவருக்கும் தோன்ற வேண்டும் என்பதற்காகவே ஆன்மீகக் கடல் நடத்திவருகிறேன்.

கேள்வி: ஆக,அர்த்த சாஸ்திரம் சுமார் 1000 அல்லது 2000 பக்கங்களைக் கொண்ட புத்தகம் என சொல்லுங்கள்.

பதில்: இல்லையில்லை;வெறும் 120 பக்கங்கள்தான் அதில் இருக்கின்றன.விலைகூட ரூ.100/-க்குள் தான் வரும்.அதே சமயம் விரிவான விளக்கமுடன் ரூ.1000/-க்கு வேறு ஒரு பதிப்பகமும் வெளியிட்டிருக்கிறது.இந்துவாகப் பிறந்த ஒவ்வொருவரும் வாசிக்க வேண்டிய நூல் (வீட்டு நூலகத்தில் வைத்திருக்க வேண்டிய நூல்) சாணக்கியரின் அர்த்தசாஸ்திரம்! நாம் தான் தினமும் பேப்பர்கள் கூட வாசிப்பதில்லையே?

கேள்வி:நானும் இன்றே சாணக்யரின் அர்த்தசாஸ்திரம் வாங்கி வாசிக்கிறேன்.இருந்தாலும்,உங்களைக் கெடுக்க நினைத்தவர்களைப் பற்றிச் சொல்லுங்கள்.

பதில்:(மிக நீண்ட பெருமூச்சுடன்) சரி சொல்லுகிறேன்.இந்த பேச்சில் பல அதிர்ச்சிகள் இருக்கும்.என்னைக் கெடுக்க நினைத்தவர்களை நான் எதிர்கொண்டது எனது புத்தக வாசிப்பின் மூலமாகக் கிடைத்த அறிவின் மூலமாக மட்டுமே!

2000 ஆம் ஆண்டில் நான் ஒரு கணினி விற்கும் நிறுவனத்தில் பணிபுரிந்தேன்.அதற்கு முன்பு ஒரே நிறுவனத்தில் ஐந்து  ஆண்டுகளாக விற்பனைப்பிரதிநிதியாக பணிபுரிந்த அனுபவத்தினால்,இந்த கணினி விற்கும் நிறுவனத்தில் வேலை கிடைத்தது.கணினி நிறுவனத்தை எனது அண்ணன் ஒருவர் நடத்தி வருகிறார்.அவர் என்னை விடவும் சுமார் பத்தாண்டுகள் மூத்தவர்.

தினமும் காலை 9.30க்கே அலுவலகத்தின் வாசலுக்கு வந்துவிட வேண்டும் என வற்புறுத்துவார்.நானும் காலையில் சாப்பிடாமல் சரியாக 9.30க்கே அலுவலகம் வந்து,அலுவலக வாசலில் காத்திருப்பேன்.ஆனால்,அவரோ எப்போதுமே 10 மணிக்குத்தான் வருவார்.ஓரிரு மாதங்களில்,முதலாளி என்ற கெத்தில்,அவர் அலுவலகத்தை காலையில் திறக்கும்போது வேலைக்காரர்களாகிய நாங்கள் காத்திருப்பது அவருக்கு பெருமைக்குரிய விஷயம் என்பதைப் புரிந்து கொண்டேன்.அது ஒரு முதலாளிக்கே உரிய சுபாவம்.அதைப் பற்றி எனக்கு சிறிதும் வருத்தமில்லை;பொறாமையுமில்லை;

பல நாட்கள் காலையில் சாப்பிடாமல் வேலைக்குச் சென்றதால்,மதியம் வரை பட்டினியாகவே மார்க்கெட்டிங் செய்யும் சூழ்நிலை உண்டானது.எனக்கு அல்சர் உண்டானது.ஆனாலும்,உற்சாகமாகவே வேலை பார்ப்பேன்.ஒருவருடன் பழகத்துவங்கியபின்னர்,நாம் நம்மையறியாமல் நமது நோக்கங்கள்,சிந்தனைகள்,சிந்திக்கும் விதம் பற்றி நம்மிடம் பழகுபவரிடம் சொல்லிவிடுவது எங்கும் நடப்பதே!ஆனால்,அதன்பிறகுதான் வில்லங்கம் உருவாகிறது.நம்மிடம் பழகுபவர் நம்மைப்போலவே சுபாவம் உள்ளவர் எனில்,அவரே நமக்கு ஆத்ம நண்பர்.நம்மை அலுவலக அரசியலில் இருந்து பாதுகாப்பார்.அதுவே,நமக்கும் அவருக்கும் சிந்தனை ஒற்றுமை இல்லையெனில்,அக்கப்போர்தான்.அவர்தான் நாம் அலுவலகத்தை விட்டு வெளியேறக்காரணமாக அமைவார்.இது நமக்கு புரிவதற்குள் வேறு அலுவலகத்தில் வேலைக்குப் போயிருப்போம்.

ஒருநாள்,காலை 9.55க்கு அலுவலகம் வந்தேன்.ஆனால்,கணினி நிறுவன முதலாளி அன்று பார்த்து,நான் வரும் முன்பே அலுவலகத்தைத் திறந்து,என்னைத்தவிர,எல்லோரும் வேலைக்கு வந்திருந்தனர்.புதிதாக வேலைக்குச் சேர்ந்திருந்த ஒரு பெண் உள்பட!

இதுதான் சாக்கு என்று என்னை செம திட்டு திட்டினார்.நானும் பல முறை மன்னிப்பு கேட்டுவிட்டு,மார்க்கெட்டிங் சென்றுவிட்டேன்.ஆனாலும்,மனம் வலித்தது;

என்னடா,தினமும் நாம் நேரம் தவறாமல் அலுவலகம் வந்தது இவனுக்குத் தெரியவில்லை;இன்று ஒரே ஒரு நாள் தாமதமாக வந்தது இவனுக்கு வலிக்குதா? என்றே நினைக்க மனதில் துக்கம் ஊற்றெடுத்தது.உற்சாகமாக வேலை செய்யமுடியவில்லை; நேராக நூலகம் ஒன்றிற்குப் போய் உட்கார்ந்தேன்.

அன்று நான் படித்த ஆனந்த விகடனில் ஒரு ஜோக் வெளியாகியிருந்தது.எந்தப் புண்ணியவான் அதை படைத்தானோ தெரியாது.எனக்கு அது உற்சாகத்தையும்,ஒரு புதிய யோசனையையும் உருவாக்கியது.

ஒரு அலுவலகத்தின் வாசல்;வாசலில் ப்யூன் நிற்கிறார்.ஒருவர் சூட்கேஸீடன் அவசரமாக அலுவலகத்தினுள் நுழைகிறார்.

ப்யூன்: வாங்க சார், வாங்க; இன்னிக்கு தான் நீங்க லேட்டா வர்றதிலேயே சீக்கிரமா ஆபீஸீக்கு வர்றீங்க

இதுதான் அந்த ஜோக்.

நொந்துபோயிருந்த எனது மனதுக்கு இந்த ஜோக் இதமளித்தது.இனி ஒரு நாளும் சரியான நேரத்துக்கு அலுவலகத்துக்குப் போகக் கூடாது.(நான் தான் பல நாட்கள் சாப்பிடாமல் கூட சரியாக காலை 9.30க்கு அலுவலகம் வந்திருக்கிறேன்.அப்படியும் கூட,இன்று ஒரே ஒரு நாள் தாமதமாக அதுவும் பத்துமணிக்குள் வந்துவிட்டேன்.இருந்தும் ,எனது முதலாளி & அண்ணன் இவனை திட்ட முடியலையே,என நினைத்து எல்லோரையும் சீக்கிரம் வரச் சொல்லியிருக்கலாம் என்ற எண்ணம் அந்த ஜோக்கை வாசித்ததும் உண்டானது)என முடிவெடுத்தேன்.

அடுத்த சில வாரங்களிலேயே எனது முதலாளி,என்னை ஒருநாள் தனியாக கூப்பிட்டார்.அப்போது அலுவலகத்தில் யாருமே இல்லை.ஏன் எப்போதுமே லேட்டாக ஆபிஸீக்கு வர்றீங்க? இனிமே அந்த தப்பைச் செய்யாதீங்க என கெஞ்சினார்.நான் சரிங்க சார் என்றேன்.ஆனால்,நான் அவரது கெஞ்சலுக்கு மரியாதை தரவில்லை.

கேள்வி:அட,சுவாரசியமாகவும்,பலருக்கு வழிகாட்டும் விதமாகவும் இருக்கிறதே.ரொம்ப நன்றிங்க.

தொடரும். . .

ஓம்சிவசிவஓம்

2 comments:

  1. ஆஹா பிரமாதம், அடிக்கடி இது போன்ற கேள்வி பதிலகள் நிச்சயம் எதிர்பார்க்கிறோம்.

    ReplyDelete