Thursday, August 18, 2011

ஆன்மீக அதிசயங்கள்

இரண்டு நாட்களுக்கு முன்பு லைவிங் எக்ஸ்ட்ரா வில் வள்ளிமலை முருகன்


கோவில் கிரிவலப்பாதையில்

பாம்பன் சுவாமிகள் அவர்களின் ஆன்மா தோன்றிய புகைப்படத்தை பார்த்து

பரவசமுற்றேன் .இதை பார்த்தவுடன்

நான் சமீபத்தில் படித்த ஒரு புத்தகத்தில் உள்ள சில தெய்வீக ஆன்மாக்களை

பற்றி பகிர்ந்து கொள்ளவேண்டும்

என்று ஆசைப்பட்டு இதை எழுதுகிறேன்.



ராகவேந்திர சுவாமிகளின் ஆவி



ராகவேந்திர சுவாமிகள் சமாதி அடைந்துள்ள மந்திராலயத்தையும் அதனை சார்ந்த

இடத்தையும் திரும்ப‌

பெறுவதற்காக பிரிட்டிஷ் அரசாங்கம் தாமஸ் மன்றோ என்ற ஆங்கில கவர்னரை

அனுப்பியது .மன்றோ

பிருந்தாவனத்தை நெருங்கியதும் அவர் எதிரே ராகவேந்திரசுவாமிகள் ஆவியுடலில்

வெளிப்பட்டார்

சில நிமிடங்கள் மன்றோவுடன் ஆங்கிலத்தில் உரையாடினார் இந்தசம்பவம் மன்றோவின் மனதை

மாற்றிவிட்டது ராகவேந்திரசுவாமிகள் ஆவி வடிவில் காட்சி அளித்ததை அவரே

தன் கைப்பட எழுதி

வைத்துள்ளார்



அன்வாரிமாதவராவ் என்ற முன்னாள் எம்.பி ஒரு சமயம் அமெரிக்காவில்

நியுயார்க் நகரில் தங்கி இருந்தபோது

அவருக்கு மார்புவலிகண்டது மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர்

பிழைக்கமாட்டார் என்று முடிவு செய்து

விட்டனர்.இப்படி கைவிடப்பட்ட கேஸ்களை ஒதுக்கிவைத்து ஒரு அறையில்

போட்டுவிடுவார்கள்.இவரது

உடலும் அவ்வாறு கிடத்தப்பட்டது.நள்ளிரவில் கண்விழித்த மாதவராவ் தாம்

பிணங்களின் நடுவே இருப்பது

கண்டு அதிர்ச்சி அடைந்தார் துக்கம் தாங்காமல் ராகவேந்திர சுவாமிகளை

நினைத்து பிரார்த்தித்தார்.பாதுகைகளின்

ஒளி கேட்டு நிமிரந்த மாதவராவ் தன் முன்னே ராகவேந்திரர் நேரில் வருவதை

கண்டு மகிழ்ச்சி அடைந்தார்

சுவாமிகள் அவரது உடலை மூன்று முறை தடவி கொடுத்து நோய் குணமாகி விடும் என்று சொல்லி

அபயம் அளித்துவிட்டு மறைந்துவிட்டார்.மறுநாள் அறையில் ஆரோக்கியமான நிலையில் இருந்த‌

இவரை பார்த்துவிட்டு மருத்துவர்கள் ஆச்சரியம் அடைந்தனர் இந்த விஷயத்தை இன்றும் நோய்

தீர்த்த தென்னிந்திய மகான் என்ற தலைப்பில் மருத்துவமனை பதிவேட்டில்

எழுதிவைத்துள்ளனர்.

THANKS;NARMADHA PIRASURAM AVIGALUDAN NANGAl

BOOK.



A.ABIRAM

1 comment:

  1. தாமஸ் மன்றோவுக்கு ஏற்பட்ட இந்த விபரத்தினை இருநூறு வருடங்கள் முந்திய சென்னை மாகாண கெசட்டில் பதினைந்தாம் பிரிவில் அதோனி தாலுகா பக்கம் 213 இல் இன்றும் காணலாம்.நன்றி :ஜோதிடபூமி மே 2000 pg.no:58.
    சுந்தரலட்சுமி

    ReplyDelete