Sunday, August 7, 2011

வசீகரிக்கும் காந்தசக்தியைத் தரும் ஓம்சிவசிவஓம்




டாக்டர்கள்,வக்கீல்கள்,ஜோதிடர்கள்,மெயின் ரோட்டில் கடை வைத்திருப்போர்,வாஸ்து பார்ப்பவர்கள்,சிவில் என் ஜினியர்கள்,தொலைபேசி கடை வைத்திருப்போர்கள்,பத்திரிகை நடத்துபவர்கள் மற்றும் வெகுஜனத் தொடர்பில் இருப்பவர்களுக்கு ஓம்சிவசிவஓம் வசீகரிக்கும் காந்த சக்தியைத் தரும்.

அனுஷ்கா,நீலிமாராணி,சிம்பு மற்றும் பலரது மனதில் வாழும் சூப்பர் ஸ்டார் மற்றும் பலதுறைகளைச் சேர்ந்த பிரபலமானவர்கள் பல பிறவிகளில் சேமித்து வைத்த புண்ணியத்தினால்,இன்று சில கோடி மனங்களில் வாழ்ந்துவருகின்றனர்.இதையே இந்தப்பிறவியிலேயே சில மாதங்களிலேயே நீங்களும் வசீகரிக்கும் காந்த சக்தியை ஓம்சிவசிவஓம் மந்திர ஜபத்தின் மூலமாகப் பெறமுடியும்.

மஞ்சள் பட்டு விரிப்பில் அமர்ந்து,கழுத்தில் ருத்ராட்சம் அணிந்துகொண்டு,நெற்றியிலும்,மார்பிலும் விபூதி அணிந்துகொண்டு,இரு உள்ளங்கைகளிலும் தலா ஒரு ருத்ராட்சம் வைத்து கைகளை மடக்கி,ஓம்(குல தெய்வமே) நமஹ=இந்த இடத்தில் உங்கள் குலதெய்வத்தின் பெயரை நினைக்கவும்.குல தெய்வத்தின் பெயர் தெரியாதவர்கள் தங்களின் இஷ்ட தெய்வத்தின் பெயரை சொல்லலாம்.அதுவும் இல்லாதவர்கள் தாங்கள் விரும்பும் சித்தரின் பெயரையோ,துறவியின் பெயரையோ ஜபிக்கலாம்.இப்படி ஒரே ஒரு முறை ஜபிக்க வேண்டும்.பிறகு ஓம் கணபதியே நமஹ என ஒரு முறை ஜபிக்கவும்.அதன்பிறகு,நான் எனது தொழில் ரீதியாக வசீகரிக்கும் காந்த சக்தியைப் பெறுகிறேன்.இந்த காந்தசக்தியால் எனது வருமானம் ஐந்து மடங்காகப் பெருகுகிறது என ஒரு முறை ஜபிக்க வேண்டும்.அதன் பிறகு ஓம்சிவசிவஓம் ஜபிக்க வேண்டும்.
இப்படி ஒரு நாளுக்கு ஒரு மணி நேரம் வீதம் ஓராண்டு வரையிலும் தினமும் ஓம்சிவசிவஓம் ஜபிக்கவும்.மூன்று அல்லது நான்கு மாதங்களில் இந்த மந்திரஜபத்தின் சக்தியை உணரத்துவங்குவீர்கள்.ஆனால்,அதோடு நிறுத்திவிடக்கூடாது.ஓராண்டு வரையிலும் தினமும் ஓம்சிவசிவஓம் ஜபிக்க வேண்டும்.
ஓம்சிவசிவஓம்

1 comment:

  1. மிக்க மகிழ்ச்சி சுந்தர் அவர்களே! இரு கைகளிலும் ருத்ராட்சம் வைத்து ஜபிக்கும்போது,எண்ணுவது கஷ்டம் அல்லது முடியாததுதான்.ருத்ராட்சம் வைத்து ஒரு முறை ஓம்சிவசிவஓம் ஜபித்தாலே பலகோடி மடங்கு பலன்கள் கிடைக்கும்.கவுண்டிங் கருவியை வைத்தும் ஜபிக்கலாம்.அல்லது ருத்ராட்ச மாலை வைத்தும் ஜபிக்கலாம்.ருத்ராட்சமாலை வைத்து ஜபிக்கும் ஆய்வு தொடர்கிறது.அந்த ஆய்வின் முடிவு தெரிந்தப்பின்னரே,ஆன்மீகக்கடலில் வெளியிடமுடியும்.
    மஞ்சள் துண்டில் ஜபிக்கையில் நமது மந்திரஜபம் அந்த மஞ்சள் துண்டில் பதிவாகிக்கொண்டே வரும்.அதை நீரில் நனைக்காத வரையிலும் அந்த மந்திர எண்ணிக்கைக்கேற்ப அது சேகரமாகும்.அந்த மஞ்சள் துண்டை வைத்து ஏராளமான பிரச்னைகளைத் தீர்க்க முடியும்.மஞ்சளைத்தவிர,வேறு நிறங்களுக்கு இந்த சக்தி இல்லை.தரையில் அமர்ந்து ஓம்சிவசிவஓம் ஜபித்தால்,ஜபித்த பலன் பூமிக்குள் போய்விடும்.நமக்கு சிறிதும் பலனில்லை;ஓம்சிவசிவஓம் ஒரு லட்சத்துக்கு மேல் ஜபிக்கும்போது நம்மால் சிவ உலகத்து ரகசியங்களை காண,உணர முடியும்.நமது சாதாரணவாழ்க்கையில் ஏற்படும் மாபெரும் பிரச்னைகள் தீரத்துவங்கும்.ஏழரைச்சனி,அஷ்டமச்சனி,கண்டச்சனி ,ஆறாமிடத்து திசைபிரச்னைகள்,வம்பு வழக்குகள் தீரத்துவங்கும்.நமது விதியில் இருக்கும் முன்கர்மாக்களை நாமே நீக்கத்துவங்குகிறோம்.இதற்கு மேல் சுலபமான வழிகள் இல்லை.அலுவலகத்தில் நமது நாற்காலியில் பிறர் அமராதவரையில்,கால்கள் தரையைத் தொடாமல் ஜபிக்கலாம்.ஜபிக்கும்போது எந்த குறுக்கீடும் வராமலிக்க வேண்டும்.இது முக்கியம்.

    ReplyDelete