சமீபத்தில் காங்கிரஸ் பொதுச்செயலாளர் ரவுல் வின்ஸி என்ற நிஜப்பெயரில் ஒளிந்திருக்கும் ராகுல் பத்திரிகையாளர்களை சந்தித்தார்.அப்போது ஒரு இளம் பெண் பத்திரிகையாளர் ரவுல் வின்ஸியிடம்(அட! ராகுலோட இத்தாலி பாஸ்போட்டில் இருக்கும் பெயர் இதுதாம்பா!) “நரேந்திர மோடியின் குஜராத் அரசு சமுதாய,பொருளாதார முன்னேற்றங்களை மக்கள் கண்டு உணரும்படி சாதித்துக்காட்டியிருக்கும் போது,எதையுமே சாதிக்காத காங்கிரஸீக்கு மக்கள் ஏன் ஓட்டளிக்க வேண்டும்?” என்று கேட்டார்.
இந்தக்கேள்வியை சற்றும் எதிர்பார்க்காத ரவுல் வின்ஸி,குஜராத்தில் ஒரு குறிப்பிட்ட சமுதாயத்தினர் தாக்கப்படுவதாக பிரச்னையை திசைதிருப்பும் விதமாக பதிலளித்தார்.
அதற்கு அந்த பெண் நிருபர், “இஸ்லாமியர்களின் பிரச்னையை நீங்கள் சுட்டிக்காட்டுவதாக நினைக்கிறேன்.ஆனால்,இஸ்லாமியர் அதிகம் வாழும் பகுதியில் பா.ஜ.க.உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.எனவே,நீங்கள் பிரச்னையை திசை திருப்ப வேண்டாம்” என்று கூறினார்.
மற்றொரு நிருபர் ரவுல் வின்ஸியிடம்(ராகுலிடம்) காங்கிரஸ் அமைச்சரவையில் ஊழல் செய்யாத மூன்று நபர்களை குறிப்பிடுமாறு கேட்டார்.சற்றே தயங்கிய ராகுல்(ரவுல் வின்ஸி) மன்மோகன்,ஏ.கே.ஆண்டனி,ஜெயராம் ரமேஷ் என்று பதிலளித்தார்.உடனடியாக கேள்வியெழுப்பிய நிருபர்,
“மன்னியுங்கள் ராகுல்,இவர்கள் மூவருமே ராஜ்யசபா மூலமாக(மக்கள் நேரடியாக ஓட்டுப்போட்டுத் தேர்ந்தெடுக்காமல்) அரசுக்குள் வந்தவர்கள்” என உண்மையை நினைவூட்டினார்.உடனடியாக பத்திரிகையாளர்களின் சந்திப்பு கலைக்கப்படுகிறது.
இதில் வேதனையான அம்சம் என்னவெனில்,கபில்சிபில்,ஆசாத்,பிரணாப் முகர்ஜி,சிதம்பரம் ஆகியோரின் பெயர்களை ராகுலால் ஒப்புக்குக் கூட உத்தமர்கள் என்று நினைக்க முடியவில்லை.
நன்றி:விஜயபாரதம் ,பக்கம் 26,12.8.11
No comments:
Post a Comment