எதிர்வரும் துலாம் சனிப்பெயர்ச்சியை முன்னிட்டு,நம்மில் பெரும்பாலானவர்கள் திருநள்ளாறு செல்ல இருக்கிறோம்.அப்படி செல்லும்முன்பு,இந்த கட்டுரையை ப்ரிண்ட் எடுத்து கையோடு கொண்டு செல்வது அவசியம்.
திருநள்ளாறு அருள்மிகு தர்ப்பணேஸ்வரர் கோவிலுக்குச் சென்றதும்,நேராக சனிபகவானை வழிபடச் சென்றுவிடுகிறோம்.அவ்வ்வ்வளவு பாடாய்படுத்தியிருப்பார் சனீஸ்வரன்.இருப்பினும்,இப்படி வழிபடுவது தவறு.
முதலில் நளதீர்த்தத்தில் நீராட வேண்டும்.நீராடியபின்னர்,நாம் அணிந்திருந்த ஆடைகளை அந்த குளத்திலேயே விட்டுவிடவேண்டும்.அட்லீஸ்ட் நாம் அணிந்திருந்த ஆடையில் ஏதாவது ஒன்றை மட்டுமாவது அந்த குளத்தில் விட வேண்டும்.பின்னர்,கரையில் இருக்கும் நளவிநாயகர் மற்றும் பைரவரை வழிபட்டு,கங்கா தீர்த்தத்தை தரிசிக்க வேண்டும்.பின்னர்,கோபுர வாசலுக்கு வந்து முதல் படிக்கட்டைத் தொட்டு,சனீஸ்வரனை மனதால் நினைத்து வணங்க வேண்டும்.உள்ளே நுழைந்தபின்னர்,மூலவர் தர்ப்பாரண்யேஸ்வரர் சன்னதிக்குச் செல்ல வேண்டும்.மூலவருக்கு பால்,தயிர்,பன்னீர்,நல்லெண்ணெய்,சந்தனம் போன்றவைகளை அளித்து நாம் அபிஷேகத்திலும் கலந்து கொள்ளலாம்;அங்கிருந்து தியாகவிடங்கர் சன்னதியில் மரகதலிங்கத்தை வணங்கியப்பின்னர்,அர்த்தநாரீஸ்வரர்,துர்கை,சண்டிகேஸ்வரரை தரிசிக்க வேண்டும்.பின்பு,அம்பிகை பிராணேஸ்வரி சன்னதிக்குச் சென்று விளக்கு ஏற்றிவிட்டு,இறுதியில் தான் சனீஸ்வரர் சன்னிதிக்குச் செல்ல வேண்டும்.
சனிபகவானை கருங்குவளை மலரால் அர்ச்சிக்க வேண்டும்.கருப்புத்துணியை சனீஸ்வரருக்கு சாத்திவிட்டு,எள் தீபம் ஏற்றி,எள் சாதம் நைவேத்தியமாக வைத்துப்பூஜை செய்ய வேண்டும்.கோவிலில் குறைந்த பட்சம் ஒரு மணிநேரம் அமைதியாக அமர்ந்து தியானம் செய்ய வேண்டும்.இதைச் செய்ய இயலாதவர்கள்,ஒரு மணிநேரம் மவுனமாக(செல்போனை அணைக்கவும்) அமர்ந்து சனிபகவானிடம் மனதார வேண்டவும்.மனிதர்கள் அனைவருக்கும் ஆயுள்,தொழில் இரண்டுக்கும் அதிபதி இவரே!!!
சனிபகவான் சன்னதியில் அவருக்கு நேராக நின்று கும்பிடுவது தவறு;சாய்வாக,கையெடுத்துக்கும்பிடுவதும் தவறு;இரு கைகளை நீட்டியவாறு வேண்ட வேண்டும்.
அதன்பிறகு,கோவிலுக்கு வெளியே 9 ஏழைகளுக்கு அன்னதானம் செய்ய வேண்டும்.அதன்பிறகு,வேறு எந்த கோவிலுக்கும் / வேறு எவரது வீட்டுக்கும் செல்லாமல் நேராக அவரவர் குடியிருக்கும் வீட்டுக்குச் செல்ல வேண்டும்.
கட்டுரை எழுதியவர்:பி.எஸ்.பி.சாய்கீதா,எனது மானசீக ஜோதிட குரு பி.எஸ்.பி.அவர்களின் புதல்வி.
நன்றி:பி.எஸ்.பி.யின் விடியல்,பக்கம்10,ஆகஸ்டு 2011.
No comments:
Post a Comment