சென்னை:""இந்தியாவில், ஒரு முறை நீண்ட தூரம் ரயில் பயணம் செய்ததில், என் தோல் தமிழர்களைப்போல் அழுக்காகி,கறுத்துப் போனது,'' என, அமெரிக்க துணைத் தூதர் மவுரீன் சாயோ, கடுமையாக விமர்சனம் செய்துள்ளது சர்ச்சையை கிளப்பியுள்ளது.
சென்னை அடுத்த காட்டாங்கொளத்தூரில் உள்ள எஸ்.ஆர்.எம்., பல்கலையில், நேற்று முன்தினம் நடந்த ஒரு விழாவில், அமெரிக்க துணைத் தூதர் மவுரீன் கலந்து கொண்டு பேசியதாவது:இருபது ஆண்டுகளுக்கு முன், நானும் உங்களைப்போல் ஒரு மாணவராக இருந்தேன். வெளிநாட்டில் செமஸ்டர் படிப்பு மேற்கொள்ள வேண்டியிருந்ததால், அதற்காக நான் இந்தியாவை தேர்வு செய்தேன். இந்தியாவின் கலாசாரமும், மதகோட்பாடுகளும் என்னை ஈர்த்திருந்தன.நான் பல கிராமங்களை கடந்து பயணித்தபோது, இந்தியாவின் கலாசாரத்தை என்னால் நன்றாக புரிந்து கொள்ள முடிந்தது.மக்களின் அன்பு உள்ளத்தையும், பாசத்தையும், அவர்கள் நட்பாக பழகும் விதத்தையும் கண்டு வியந்தேன்.ஒரு முறை, நான் டில்லியிருந்து, ஒரிசாவுக்கு ரயில் பயணத்தை மேற்கொண்டேன். அந்த ரயில், 24 மணி நேரத்தில், ஒரிசாவை சென்றடைந்திருக்க வேண்டும்.
ஆனால், 72 மணி நேரம் கடந்த பிறகும், ரயில் ஒரிசாவை சென்றடையவில்லை. இந்த நீண்ட தூர பயணத்தால், என் தோல் தமிழர்களைப்போல் அழுக்காகி, கறுத்துப் போனது.
இவ்வாறு மவுரீன் பேசியதும், மாணவர்களும், ஆசிரியர்களும் கடும் அதிர்ச்சியடைந்தனர். சமீபத்தில், அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஹிலாரி கிளிண்டன் சென்னை வந்திருந்தபோது, "இந்தியாவின் நட்பை, அமெரிக்கா முக்கியமானதாககருதுகிறது. இந்தியா - அமெரிக்கா உறவானது, ஜனநாயகம்,கலாசார ரீதியிலானது' என தெரிவித்தார்.
இந்நிலையில், அமெரிக்க துணைத் தூதர், தமிழர்களைப் பற்றி இழிவாக விமர்சனம் செய்து பேசியிருப்பது,அனைவர் மத்தியிலும் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது.
இதையடுத்து, சென்னையில் உள்ள அமெரிக்க தூதரகம் அறிக்கை வெளியிட்டுள்ளது: மவுரீன் சாயோ பேசும்போது பொருத்தமற்ற சில வார்த்தைகளை பயன்படுத்தி உள்ளார். அவரது பேச்சு, யாருடைய மனதையாவது துரதிருஷ்டவசமாக புண்படுத்தி இருந்தால் அதற்காக அவர் வருத்தம் தெரிவித்துள்ளார். யாருடைய மனதையும் புண்படுத்துவது அவரது நோக்கமல்ல.இவ்வாறு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மன்னிப்புக் கேட்க ஜெ., வலியுறுத்தல்:இதுதொடர்பாக, முதல்வர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில், ""அமெரிக்க தூதரகத்தைச் சேர்ந்த மவுரீன் சாயோ தெரிவித்துள்ள கருத்து, மிகவும் கண்டிக்கத்தக்கது. அனைத்துத் தமிழர்களையும் அவமதிப்பது போன்றது. எனவே, மவுரீன் சாயோ தன் கருத்தை வாபஸ் பெற வேண்டும். தமிழர்கள் பற்றி, இப்படிப்பட்ட கருத்தைத் தெரிவித்ததற்காக பகிரங்கமாக மன்னிப்புக் கேட்க வேண்டும்,'' எனக் கூறியுள்ளார்.
not only Tamilan All Indian are Fight to Bloody American Govt.
ReplyDeletePorambokku naayey மவுரீன் சாயோ tamilargal nalla danda irundanga 1st prittan poandra naadugalukku adimaiyagi kadumaiyana velai senju danda karuppa aananga. avanga colour venumna karupa irukalam aana ullam vellai. avanga vodambu venumna alukkai irukalam aana manasu sutham da.
ReplyDelete