Thursday, August 18, 2011

யாகங்கள் பற்றிய விஞ்ஞான ஆய்வு முடிவு




யாகங்கள்,ஹோமங்கள் குறித்த விஞ்ஞானரீதியான விளக்கம் அளிப்பதற்காக,இந்த ஆண்டு கொச்சியில் அதிருத்ர ஹோமத்தை நடத்திய நிர்வாகிகள்,கொச்சி பல்கலைக்கழக அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை பேராசிரியர் வி.பி.என்.நம்பூரி தலைமையில் ஒரு கமிட்டியை அமைத்தனர்.ஹோமம் நடந்து கொண்டிருந்த போதும் அதன் பின்னரும் அந்த கமிட்டியினர் தங்கள் ஆய்வுகளை மேற்கொண்டனர்.



யாகசாலையின் நான்குபுறமும் மற்றும் அங்கிருந்த ஒன்றரை கி.மீ.தூரத்திலும்,அவர்கள் விதைத்த கடலைப்பருப்பு போன்ற தானிய விதைகளை விதைத்தனர்.யாகசாலை அருகில் விதைகள் அதிதுரிதமாக துளிர்த்து,முளைத்திருந்தன.



அதுவும் மேற்குப்பக்கம் விதைக்கப்பட்டவை,மற்ற பக்கங்களில் விதைக்கப்பட்டவைகளை விட 2,000 மடங்கு அதிக வளர்ச்சி கண்டிருந்தது.மேலும் சூழ்நிலை மிக தூய்மையாகக் காணப்பட்டது.பூமியிலும் நீரிலும் இருந்த பூச்சிக்கிருமிகள் அழிக்கப்பட்டிருந்தன.



யாக குண்ட அக்னி ஜீவாலையின் உஷ்ணம்,லேசர் கதிர்வீச்சில் காணப்படும் 3,870 டிகிரி சென் டிகிரேடை விடத் தீவிரமாக இருந்தது.முழுமையான ஆய்வறிக்கை வெகுவிரைவில் வெளியிடப்படும்.



நன்றி:விஜயபாரதம்,பக்கம்18, 29.7.2011

No comments:

Post a Comment