கல்லூரியில் படிக்கும் மாணவர் கூட்டம் ஒன்று ஒருமுறை சதுரகிரிக்குப்
பயணித்தது;ஜீன்ஸ்,ரேபேன் கண்ணாடி,டீ ஷர்ட் என்று அணிந்திருந்தாலும்,சித்தர்களை நேரில்
சந்திக்கும் நோக்கோடு ஒரு இளைஞர் தமது நட்புவட்டத்தையும் அழைத்துக் கொண்டு வந்தார்;
தாணிப்பாறையில் இருந்து புறப்பட்ட அவர்கள்,தம்மை மறந்து தமது காதல் அனுபவங்கள்,தேர்வு
அனுபவங்களை உரக்கப் பேசியவாறு எண்ணெய்க்குடம் பாறைப் பகுதியை வந்தடைந்தனர்;அப்போது
அதில் ஒருவன்,ஒரு திரைப்படப் பாடலைப் பாடத் துவங்கினான்;அது காம உணர்ச்சியைத் தூண்டும்
விதமான பாடல்! சித்தர்களை நேரில் சந்திக்கும் நோக்கோடு அழைத்து வந்த அந்தக் குழுவின்
ஒருங்கிணைப்பாளன்,அந்தப் பாடலைப் பாடியவனைக் கண்டித்தான்;இனிமேலும் இங்கே இப்படிப்
பாடாதே என்று அறிவுறுத்தினான்;
இளமை எப்படிப் பட்டது? எதையும் எதிர்க்கும்;எதிர்ப்பதில் தான் இளமையின்
வேகமே இருக்கின்றது என்பதால் அந்தப் பாடலை திரும்பவும் பாடத் துவங்கினான்;அப்படிப்
பாடும்போது அதில் இருக்கும் சில வார்த்தைகளை மாற்றிப் போட்டு மேலும் வக்கிரமாகப் பாடினான்;
சில
நிமிடங்களில் அவனுக்குக் கண்பார்வை போய்விட்டது;அவனால்,ஒரு அடிகூட நகர முடியவில்லை;கண்
பார்வை தெரியாத போது எப்படி நகர முடியும்? திரும்பத் திரும்ப கண்களைக் கசக்கினான்;ம்ஹீம்!
கண்பார்வை போனது போனதுதான்!!
எவ்வளவு உரத்துப் பாடினானோ,அதை விடவும் உரக்க அழத் துவங்கினான்;உடன்
வந்த இளைஞர்க் கூட்டம் ஸ்தம்பித்துவிட்டனர்;அது ஒரு அமாவாசை என்பதால்,பின்னால் வந்து
கொண்டிருந்த ஒரு பெரியவர்கள் கூட்டம் என்ன ஏது என்று விசாரித்தனர்;
நடந்த விபரத்தை விவரித்ததும்,அந்த பெரியவர்கள் ஒருமித்த குரலில் கூறியது;
சுந்தரமஹாலிங்கத்துக்கு அரோகரா
சந்தனமஹாலிங்கத்துக்கு அரோகரா
என்று அந்த பார்வையிழந்த இளைஞனை உரத்துக் கூறச் சொன்னார்கள்;அவனும் சுமாராக
12 நிமிடம் வரை விடாமல் உரத்து மலைகளில் எதிரொலிக்கும் அளவுக்கு கத்தி,சதுரகிரி சுந்தரமஹாலிங்கத்தை
எண்ணி வேண்டினான்;
அடுத்த கணமே,இழந்த பார்வை அவனுக்கு திரும்பக் கிடைத்தது;ஆமாம்! அவனுக்கு
படிப்படியாக எதிரில் இருக்கும் அனைத்தும் தெரிய ஆரம்பித்தது;
ஆலயங்கள்,சித்தர்களின் இருப்பிடங்கள்,சித்தர்கள் தவம் செய்யும் இடங்கள்,புனிதமான
மலைப்பகுதிகளில் பயணிக்கும் போது மனக்கட்டுப்பாட்டுடன் இருக்க வேண்டும்;இச்சம்பவம்
நிகழ்ந்து 7 ஆண்டு ஆகின்றது;
ஓம் சதுரகிரி சுந்தரமஹாலிங்கத்துக்கு அரோகரா
No comments:
Post a Comment